எங்க கிட்டயா ஆட்டம் காட்டுற.? ஆபரேஷன் சிந்தூரால் சிதறும் பாகிஸ்தானின் பொருளாதாரம்…

254 0

இந்தியாவின் அதிரடி ஆபரேஷன் சிந்தூரால், பாகிஸ்தான் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. அதன் முழு விவரங்களை பார்க்கலாம்.

பஹல்காமில் தீவிரவாத தாக்குதல் நடந்த நிலையில், அதற்கு பதிலடியாக, பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத நிலைகள் மீது இந்தியா துல்லியமான தாக்குதல்களை நடத்திவருகிறது. ஏற்கனவே பாகிஸ்தானில் பொருளாதார பிரச்னை தலைவிரித்தாடும் நிலையில், இந்தியா தொடங்கிய தாக்குதலால், அந்நாட்டின் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.

இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்‘

பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். ஆண்களை மட்டுமே குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலால், ஏராளமான பெண்கள் தங்கள் குங்குமத்தை இழந்தனர். அதனால், அதைக் குறிக்கும் வகையில், சிந்தூர்(குங்குமம்/திலகம்) என்ற பெயரில், ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை, பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத நிலைகள் மீது இந்தியா நடத்தி வருகிறது.

இதை பாகிஸ்தான் மீதான தாக்குதல் என்று கூறியுள்ள அந்நாட்டு அரசு, தக்க பதிலடி கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் போர் பதற்ற ஒத்திகை நடைபெற்று வருகிறது.

ஒரே நாளில் 5%-க்கு மேல் சரிந்த பாகிஸ்தான் பங்குச்சந்தைகள்

இன்று அதிகாலையில், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத நிலைகள் மீது இந்தியா தாக்குதலை தொடங்கியது. இதையடுத்து, பாகிஸ்தான் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.

கராச்சி பங்குச் சந்தை(KSE-100) அதன் தொடக்க வர்த்தகத்தில் 5.5% அதாவது 6,272 புள்ளிகள் சரிந்து, 1,07,296.64 புள்ளிகளாகக் குறைந்தது. நேற்றைய தினத்தில், சந்தை 1,13,568.51 புள்ளிகளில் நிறைவடைந்திருந்தது. இந்த பெரிய சரிவு, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) உள்ள ஒன்பது பயங்கரவாத தளங்களை இந்தியா குறிவைத்து தாக்குதல் நடத்தியதற்கு முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்ட உடனடி எதிர்வினையாகும்.

இதற்கு நேர்மாறாக, இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் இன்று சிறப்பான ஏற்றத்துடன் தொடங்கின. காலை ஆரம்ப வர்த்தகத்தில் சென்செக்ஸ், நிஃப்டி குறியீடுகள் லாபத்தில் வர்த்தகமானது. சென்செக்ஸ் அதன் நேற்றைய நஷ்டத்தை சரிசெய்து, இன்று லாபத்திற்கு வந்தது. இதற்கிடையே, காலை 11 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் சிறிய அளவில் 83 புள்ளிகள் சரிந்து, 80,579 புள்ளிகளாகவும், நிஃப்டி 17 புள்ளிகள் சரிந்து 24,361 புள்ளிகளாகவும் வர்த்தகமாகின.

முன்னதாக, காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலின்போதும் பாகிஸ்தான் பங்குச்சந்தை 3.7% சரிவைச் சந்தித்தது. அந்த நேரத்திலும், இந்திய பங்குச் சந்தையின் முக்கிய குறியீடான சென்செக்ஸ் சுமார் 1.5% உயர்வை கண்டது.

பாகிஸ்தானில் பொருளாதார ஸ்திரத்தன்மையில் ஏற்பட்டுள்ள அச்சம்

இதன் மூலம், பாகிஸ்தானில் முதலீட்டாளர்களிடையே பயம் ஏற்பட்டிருப்பதை காண முடிகிறது. அதேபோல், அந்நாட்டில் நிலவும் பதற்றத்தையும் இது காட்டுகிறது. ஏற்கனவே பாகிஸ்தானில் பொருளாதார பிரச்னை தலைவிரித்தாடும் நிலையில், தற்போது இந்தியாவின் இந்த தாக்குதல், பொருளாதார ஸ்திரத்தன்மை குறித்து மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதும் தெரிகிறது. பங்குச் சந்தையின் இந்த எதிரொலி வரும் நாட்களில் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Related Post

‘விஷம்’ கக்கும் பாகிஸ்தான் பின்னணியில் செயல்படுவோரை அடையாளம் காண்பது அவசியம்!

Posted by - August 14, 2025 0
சில நாட்களாக பாகிஸ்தானிடம் இருந்து வரும் தடித்த வார்த்தைகள் இந்திய அரசும், மக்களும் கவனத்தில் கொள்ள வேண்டியவையாக உள்ளன. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த ஏப்ரல்…

ரூ.12 லட்சம் செலவழித்து நாய் உடை அணிந்த யூ-டியூப் பிரபலம்

Posted by - July 31, 2023 0
சமூக வலைதளங்களில் வித்தியாசமான வீடியோக்களை பதிவிட்டு பிரபலமாக வேண்டும் என்பதற்காகவே சிலர் புதிய யுக்திகளை கையாண்டு வருகிறார்கள். அந்த வகையில் ஜப்பானை சேர்ந்த யூ-டியூப் பிரபலம் ஒருவர்…

நாடு முழுவதும் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

Posted by - December 25, 2023 0
நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வேளாங்கண்ணியில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் திரளானோர் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர். நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில்…

சமூகவலைதளத்தில், பெண்கள் வாழ்வை தொலைக்கலாமா?

Posted by - November 8, 2024 0
பெண்கள் சமூகவலைதளத்தில் வாழ்வை தொலைக்காமல் இதுபோன்ற பரிமாறுதல்களில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. “ஏன் என் தங்கச்சியை பெயரைச் சொல்லி கூப்பிட்டே” “பெயரைச் சொல்லி…

காசா முழுவதும் இஸ்ரேல் தாக்குதலில் ஒரே நாளில் 100 பேர் பலி

Posted by - December 20, 2023 0
இஸ்ரேல்- காசாவின் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் இரண்டரை மாதங்களுக்கு மேல் நீடித்து கொண்டிருக்கிறது. இதில் காசா பகுதி முழுவதும் இஸ்ரேல் ராணுவம் தீவிர தாக்குதலை நடத்தி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *