ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000.. மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

248 0

தமிழகத்தில் ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் மகளிர் உரிமைத்தொகை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், மகளிர் உதவித்தொகை திட்டத்தை பாராட்டி வருகின்றனர், இந்த நூற்றாண்டில் மகத்தான திட்டமாக மகளிர் உதவித்தொகை திட்டம் பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டை வளமான, வலிமையான மாநிலமாக மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் அறிவிக்கப்படுகிறது என தெரிவித்தார்.

தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகள் மட்டுமல்லாமல் அளிக்காத வாக்குறுதிகளும் செயல்படுத்தப்பட்டு வருகிறது, சமூகத்தில் வெற்றி பெறக்கூடிய ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாலும் பெண் இருக்கிறார். தாய் மனைவி சகோதரி என ஆணுக்கு பின்னால் பெண் இருக்கிறார். பெண்களை கருத்தில் கொண்டு இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. Universal basic income என்ற அடிப்படையில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் வறுமை குறைய வாய்ப்பு உள்ளது என்றும், குழந்தைகள் கல்வி மேம்படும் என்றும் பெண்களின் தன்னம்பிக்கை உயரும் என்ற அடிப்படையிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

 

எவ்வளவு கோடி ஒதுக்கீடு:

மகளிர் உரிமை தொகை திட்டத்திற்காக இந்த நிதி நிலையில் ரூ. 7000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் எவ்வளவு பேர் பயன் பெறுவார்கள் என மனக்கணக்கு போட்டு வருகிறார்கள். மகளிர் உரிமைத்தொகை திட்டம் இரண்டு நோக்கங்களை கொண்டது பெண்களுக்கு கொடுக்கும் அங்கீகாரம், ஆண்டுக்கு 12000 உதவித்தொகை என்பது பெண்களின் வறுமையை ஒழித்து பெருமையை ஒழித்து சுயமரியாதையோடு பெண்கள் வாழ்வதற்கு வித்திடும். இந்த திட்டம் என்பது தேவைப்படும் குடும்பத் தலைவிகள் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் என தெரிவித்தார்.

யாருக்கெல்லாம் உரிமை தொகை கிடைக்கும்:

நடைபாதையில் வணிகம் செய்யும் மகளிர், மீனவர் பெண்கள்,  கட்டுமான தொழிலில் ஈடுபடும் மகளிர் என பல்வேறு இடங்களில் தங்களது விலைமதிப்பில்லா உழைப்பை வழங்கி வரும் பெண்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறுவார்கள். விரைவில் இந்த திட்டதிற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என தெரிவித்தார்.

தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்ட சமூக நீதி திட்டங்களின் மாபெரும் திட்டங்களாக இந்த மகத்தான உரிமை திட்டம் இருக்கும். ஏறத்தாழ ஒரு கோடி குடும்ப தலைவிகளுக்கு இந்த உதவித்தொகை திட்டம் வழங்கப்படும் எனவும் கூறினார்.

Related Post

குழந்தைகள் கெட்ட வார்த்தைகளை கற்றுக்கொள்ளாமல் கட்டுப்படுத்த பெற்றோர் செய்ய வேண்டிய விஷயங்கள்..!

Posted by - June 18, 2025 0
நீங்கள் எப்பேர்ப்பட்ட நல்ல சூழலில் உங்கள் குழந்தையை வளர்த்தாலும் சரி, கெட்ட அல்லது மோசமான வார்த்தைகளை அவர்கள் கற்று கொள்வதை உங்களால் முற்றிலும் தடுக்க முடியாது என்பதே…

மார்ச் 14ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் – அறிவிப்பை வெளியிட்ட சபாநாயகர் அப்பாவு

Posted by - February 18, 2025 0
தமிழ்நாட்டு நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய உள்ளார். மார்ச் 14ஆம் தேதி காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவையில் தமிழக பட்ஜெட் தாக்கல்…

“திராவிடமும் தமிழ் தேசியமும் இரண்டு கண்கள்…” – விஜய் முன்னிறுத்தும் கொள்கை இதுதான்!

Posted by - October 28, 2024 0
திராவிடமும், தமிழ் தேசியமும் இரண்டு கண்கள் மாதிரி எனவும், ஆனால் எந்த அடையாளத்துக்குள்ளும் சுருக்கிக்கொள்ளக்கூடாது எனவும் விஜய் கூறியுள்ளார். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே தனது…

டாஸ்மாக் ஊழல் தொடர்பாக விசாகனிடன் 2-வது நாளாக ED விசாரணை!

Posted by - May 17, 2025 0
டாஸ்மாக் ஊழல் தொடர்பாக டாஸ்மாக் நிறுவன மேலாண் இயக்குநர் விசாகனிடம் 2-வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகளில் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறை நடத்திய…

நான் முதல்வன் திட்டம்: இவர்களுக்கெல்லாம் ரூ.50,000 ஊக்கத்தொகை! இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?

Posted by - November 13, 2025 0
நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக 50.000 ரூபாய் ஊக்கத்தொகையாக நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். நான் முதல்வன் திட்டத்தின்கீழ் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *