காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை முன் தாக்கப்பட்ட விவசாயி!

160 0

கோவையில் நடைபெற்ற ஆனைமலை – நல்லாறு திட்ட கோரிக்கை மாநாட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை முன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயி தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூலூரை அடுத்த செஞ்சேரிபுத்தூர் பகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆனைமலை – நல்லாறு திட்ட கோரிக்கை மாநாடு நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, கட்சி நிர்வாகிகள், விவசாய சங்கத்தினர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் மாநாட்டின் தீர்மானங்களை வாசித்தபோது குறுக்கிட்ட விவசாயி ஒருவர், மதுபோதையில் தீர்மான நகலைக் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அவருக்கு தீர்மான நகல் வழங்க மறுக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த அவர்,
“ஆனைமலை – நல்லாறு திட்டத்திற்காக உண்மையாகவே போராடினீர்களா? சத்தியம் செய்யுங்கள்” எனக்கூறி வாக்குவாதம் செய்துள்ளார்.

அப்போது அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் அவரைப் பிடித்து அப்புறப்படுத்திய நிலையில், அங்கு வந்த மற்றொரு நபர் மதுபோதையில் இருந்த விவசாயியை கடுமையாக தாக்கினார். பின்னர் அவர்களை அங்கிருந்த போலீசார் அப்புறப்படுத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில் தாக்கப்பட்டவர் விவசாயியான சுரேஷ் என்பதும், அவரை தாக்கிய நபர் சுரேஷின் சகோதரர் என்பதும் தெரியவந்தது.

Related Post

’திமுக மாவட்ட செயலாளர்கள் மாற்றம்’ அதிரடி காட்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

Posted by - October 8, 2025 0
சென்னையை அமைப்பு ரீதியாக 7 மாவட்டங்களாக பிரிக்கவும், டெல்டாவில் உள்ள ஒரு மாவட்டத்தை இரண்டாக பிரிக்கவும் திமுக தலைமை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. விரைவில் ஆறு மாவட்ட…

தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி?

Posted by - December 15, 2025 0
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக, பிரதமர் மோடி வரும் ஜனவரி மாதம் தமிழ்நாட்டிற்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும்…

தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடா?

Posted by - March 12, 2026 0
கேஸ் சிலிண்டரை தொடர்ந்து அடுத்து பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற தகவல் பரவி வருகின்றது. தமிழ்நாட்டில் நேற்று நள்ளிரவுடன் பெட்ரோல், டீசல் விநியோகம் நிறுத்தப்படும் என…

“பேச முடியாத அளவில் துயரத்தில் உள்ளோம்”- உருக்கமாக பேசிய ஆதவ் அர்ஜுனா

Posted by - October 11, 2025 0
த.வெ.க.வை முடக்கும் நோக்கில் செயல்படுவதாக அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடியுள்ளோம் என்று ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார். த.வெ.க.வை முடக்கும் நோக்கில் செயல்படுவதாக அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடியுள்ளோம்…

பொது சொத்துக்கள் சேதம்! ”சட்டம் தன் கடமையை செய்யும்”அமைச்சர் ரகுபதி விஜய்க்கு பதிலடி

Posted by - September 15, 2025 0
“விஜய்யின் வருகையால் திமுகவின் வாக்கு வங்கி பாதிக்க எந்த ஒரு வாய்ப்பும் கிடையாது. தவெக விதிமுறைகளை மீறிய விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும் என்று அமைச்சர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *