“கும்பகோணத்தில் உள்ள குல தெய்வம் கோவிலுக்கு திடீர் விசிட் செய்த விக்கி – நயன்”

343 0

கும்பகோணம் அருகே உள்ள வழுத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள குலதெய்வம் கோவிலில் வழிபாடு செய்ய விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடி சென்றிருந்தனர்.

தமிழ் திரையுலகில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தனது நீண்ட நாள் காதலனான இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்தாண்டு திருமணம் செய்துகொண்டார்.

இந்த ஜோடிக்கு கடந்த அக்டோபர் மாதம் இரட்டைக் குழந்தைகள் பிறந்தது. வாடகைத் தாய் முறையில் அந்த குழந்தைகளை இருவரும் பெற்றுக்கொண்டனர். அந்த குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோநீல் N சிவன், உலக் தெய்விக் N சிவன் என பெயரிட்டுள்ளதாக அண்மையில் அறிவித்தனர்.

இந்நிலையில், நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் இன்று கும்பகோணத்தில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு வழிபாடு செய்ய சென்றனர். கும்பகோணத்தை அடுத்த வழுத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள விக்னேஷ் சிவனின் குலதெய்வம் கோவிலுக்கு செல்ல இருவரும் இன்று காலை திருச்சி விமான நிலையம் வந்திருந்தனர். அப்போது அங்கு எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

அவர்கள் இருவரும் கடைசியாக திருமணத்திற்கு முன் ஜோடியாக குல தெய்வம் கோவிலுக்கு வந்து பொங்கல் வைத்து வழிபாடு செய்துவிட்டு சென்றனர். அதன்பின்னர் இருவருமே குலதெய்வம் கோவிலுக்கு செல்லவே இல்லை.

இதனிடையே சமீபத்தில் விக்னேஷ் சிவனுக்கு ஏகே 62 பட வாய்ப்பு பறிபோனது. அதேபோல் நயன்தாராவுக்கும் அவர் நடிக்க கமிட் ஆகி இருந்த இரண்டு படங்கள் கைநழுவி போயின. இதுதவிர அவர்கள் தயாரிப்பதாக இருந்த ஊர்க்குருவி படமும் வேறு ஒரு தயாரிப்பு நிறுவனத்துக்கு சென்றது.

இப்படி தொடர்ந்து சறுக்கல்களை சந்தித்து வருவதால் இருவரும் குல தெய்வம் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய முடிவெடுத்து இன்று திடீரென சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் வந்து, பின்னர் அங்கிருந்து காரில் கும்பகோணத்தை அடுத்த வழுத்தூர் கிராமத்துக்கு சென்றனர்.

விமான நிலையத்தில் விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடியை பார்த்த ரசிகர்கள் அவர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

 

 

 

Related Post

தியேட்டரில் வாஷ் அவுட் ஆன Mrs and Mr படத்தை அதிரடியாக யூடியூப்பில் ரிலீஸ் செய்யும் வனிதா!

Posted by - July 16, 2025 0
வனிதா விஜயகுமார் இயக்கிய Mrs and Mr படத்துக்கு தியேட்டரில் வரவேற்பு கிடைக்காததால் அப்படத்தை யூடியூப்பில் ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர். Mrs and Mr Movie…

Download link: ஜனநாயகன் திரைப்படம் – கடும் அதிர்ச்சியில் படக்குழு!

Posted by - April 10, 2026 0
நடிகரும் தவெக தலைவருமான விஜயின் கடைசி படமாக  “ஜனநாயகன்” முழு திரைப்படமும் இணையதளத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். கடந்த ஜனவரி 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும்…

வசூலில் பட்டையை கிளப்பும் ரன்பீர் கபூரின் அனிமல் திரைப்படம்!! இதுவரை இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா?

Posted by - December 7, 2023 0
அனிமல் பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தான் ரன்பீர் கபூர். இவர் நடிப்பில் உருவான அனிமல் திரைப்படம் கடந்த டிசம்பர் 1-ம் தேதி ஹிந்தி…

எல்லையே இல்லா மாஸ் வசூல் வேட்டை நடத்தும் உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன்- 5 நாள் முடிவில் இத்தனை கோடியா?

Posted by - July 4, 2023 0
மாமன்னன் உதயநிதி ஸ்டாலின் ஒரு கல் ஒரு கண்ணாடி படம் மூலம் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். பின் தொடர்ந்து காமெடி ப்ளஸ் ரொமான்ஸ் படத்தில் நடித்துவந்த அவர்…

2025ஐ குறிவைக்கும் 7 படங்கள்.. 40 வருட சினிமாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தளபதி

Posted by - October 8, 2024 0
2025 Release Kollywood Movies : இந்த வருடம் இந்தியன் 2, கோட் என பெரிய நடிகர்களின் படம் வெளியானாலும் விமர்சனம் ரீதியாக பெரிய வரவேற்பை பெறவில்லை. மேலும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *