சட்டப்பேரவை சர்ச்சை : அடுக்கடுக்கான விமர்சனங்கள்… ஆளுநர் தரப்பு கொடுத்த விளக்கம்..!

228 0
Governor RN ravi | தமிழக சட்டசபையில் நடைபெற்ற நிகழ்வுகள் தற்போது பேசும் பொருளாகியுள்ளது. இந்த நிலையில் ஆளுநர் உரை குறித்து ஆளுநர் தரப்பு விளக்கமளித்துள்ளது.

அரசாங்கத்தை பெரிதும் புகழ்ந்த வார்த்தைகளையே ஆளுநர் தவிர்த்ததாக ஆளுநர் மாளிகை வட்டாரம் விளக்கமளித்துள்ளது. மேலும் அவை விதிகளை மீறவில்லை என்றும் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழக சட்டசபையில் ஆளுநர் உரையின்போது குறிப்பிட்ட வார்த்தைகளை தவிர்த்து மற்றும் கூடுதல் வார்த்தைகள் சேர்த்தது குறித்து ஆளுநர் தரப்பு விளக்கமளித்துள்ளது. அதில் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்தது அவை மரபை மீறிய செயல் என்றும், ஆளுநர் பேச்சை அவை குறிப்பிலிருந்து நீக்குவது என்பது தீவிர விவாத பொருள் எனவும் தெரிவித்துள்ளது. மரபு மீறி முதலமைச்சர் தீர்மானம் கொண்டு வந்தது சபை விதிக்கு பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக முதலீட்டை தமிழகம் ஈர்த்தது என்பது ஆளுநரால் சுட்டிக்காட்டப்பட்ட பிழை என்றும் தொழில் முதலீடு குறித்த விவரம் மிகைப்படுத்தப்பட்ட செய்தி என்பதால் தவிர்ப்பு என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

செய்தி தாள்களில் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு தொடர்பான செய்திகள் நாள்தோறும் வருகின்றன. தமிழ்நாடு அமைதியின் சொர்க்கம் என்பது எதார்த்தம் அல்ல எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் தமிழக மீனவர்கள் மீட்கப்பட்டது மாநிலத்தின் முயற்சியால் மட்டுமே நடந்தது போல் சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த விளக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

Related Post

மக்களவை தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

Posted by - March 22, 2024 0
மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக போட்டியிடும் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் வரும் 19.04.2024 அன்று நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில், தேசிய…

ஏழை மாணவர்கள் உயர்கல்வி கற்பதை ஸ்டாலின் விரும்பவில்லையா? – இபிஎஸ் கேள்வி!

Posted by - July 11, 2025 0
ஏழை மாணவர்கள் உயர்கல்வி கற்பதை ஸ்டாலின் விரும்பவில்லையா? என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். விழுப்புரத்தில் பேசிய அவர், ஏழை மாணவர்கள் உயர்கல்வி…

2.22 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு.! என்னென்ன.?

Posted by - December 30, 2025 0
 பொங்கல் ரொக்கப்பணத்தோடு 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க தலா 22ஆயிரத்து 291 மெட்ரிக் டன் பச்சரிசி மற்றும் சர்க்கரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் வேட்டி மற்றும்…

மாணவர்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு விஜய் மாநாட்டுக்குப் போனார்களா? – திமுகவுக்கு புளியை கரைக்கும் புள்ளிவிவரம்!

Posted by - October 11, 2025 0
தமிழகத்தின் கல்வி வளர்ச்சி, அதற்காக அரசு மேற்கொண்ட சிறப்பு முயற்சிகள் உள்ளிட்டவை குறித்து விளக்கவும், கல்வியில் சிறந்த சாதனையாளர்களை அழைத்து கவுரவிக்கவும் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற…

அமித்ஷா கொடுத்த பிளான்.! டிடிவி, ஓபிஎஸ்யை தூக்க ஸ்கெட்ச்- ஆக்‌ஷனில் அண்ணாமலை- நடப்பது என்ன.?

Posted by - December 9, 2025 0
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதிமுக- பாஜக கூட்டணியை பலப்படுத்து அமித்ஷா திட்டமிட்டு காய்நகர்த்தி வருகிறார். நெருங்கும் தமிழக தேர்தல் சட்டமன்ற…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *