சமையல் கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக குறைப்பு.. பிரதமர் மோடி அறிவிப்பு

210 0

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையை குறைத்து பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

சர்வதேச மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலர் மகளிர் தினத்தை முன்னிட்டு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி மகளிர் தினத்தை முன்னிட்டு வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைப்பதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் நாட்டின் லட்சக்கணக்கான பெண்களின் நிதிச்சுமையை குறையும் என்றும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் மகளிர் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். மேலும் சமையல் எரிவாயுவை மிகவும் குறைந்த விலையில் வழங்குவதன் மூலம், குடும்பங்களின் நல்வாழ்வை ஆதரிப்பதோடு ஆரோக்கியமான சூழலை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம். இது பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது மற்றும் அவர்களுக்கு எளிதான வாழ்வியல் சூழல் என்ற எங்கள் உறுதிப்பாட்டிற்கு ஏற்ப உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.சென்னையில் தற்போது வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் ரூ.918.50 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியின் விலை குறைப்பு அறிவிப்பை முன்னிட்டு வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் சென்னையில் ரூ.818.50-க்கு விற்பனை செய்யப்படும்.

Related Post

2040-க்குள் நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப திட்டம்: இஸ்ரோ தலைவர்

Posted by - December 13, 2023 0
திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் மலையாள மனோரமா பத்திரிகைக்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) தலைவர் சோம்நாத் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- விண்வெளி ஆராய்ச்சியில் மனிதனை விண்ணுக்கு அனுப்பும்…

ஒரு மாநிலமே ஆன்லைன் மோசடியில் சிக்கிய பரிதாபம்; ஒரே ஆண்டில் ரூ.64 கோடி இழந்த மக்கள்

Posted by - January 5, 2025 0
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த ஆண்டில் மட்டும், ஆன்லைன் மோசடியில் சிக்கிய 64.2 கோடி ரூபாயை இழந்துள்ளனர். புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கடந்த ஆண்டில் மட்டும், 64.2 கோடி ரூபாயை,…

பழைய டிவி காலி.. வெறும் ரூ.18,000 பட்ஜெட்ல 43 இன்ச் QLED டிவி.. 40W டால்பி ஆடியோ.. 4K வீடியோ.. எந்த மாடல்?

Posted by - December 11, 2024 0
பழைய டிவிய மாத்த வேண்டியதுதானு, உங்களையே சொல்ல வைக்கும்படியான பட்ஜெட்டில் 43 இன்ச் இன்பினிக்ஸ் கியூஎல்இடி டிவி (43 inch Infinix QLED TV) ஆர்டருக்கு வந்துள்ளது.…

பிஎம் கிசான்: விவசாயிகளுக்கு மோடி இன்று சர்ப்ரைஸ்? பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா ரூ.2000

Posted by - February 24, 2025 0
டெல்லி: பிஎம் கிஸான் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு 19வது தவணையாக சுமார் 10 கோடி விவசாயிகளுக்கு ரூ.23,000 கோடியை பிரதமர் மோடி இன்று விடுவிக்க உள்ளார்.. 18வது…
Gemini Generated Image ijuv8gijuv8gijuv e1775712729499

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

Posted by - May 5, 2026 0
மேற்குவங்க வரலாற்றில் முதல்முறையாக 206 தொகுதிகளில் வரலாற்று வெற்றியை பெற்று பாஜக ஆட்சியை அமைக்கிறது. மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிக்கான தேர்தல் கடந்த ஏப்ரல்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *