சிங்கப்பெண்ணில் அன்பு மீதான காதலை உணர்ந்த ஆனந்தி.. சுயநல மிருகமாய் மகேஷ்!

144 0

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலில் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அன்பு தான் அழகன் என்று தெரிந்த பிறகு மகேஷ் தன்னுடைய காதலை விட்டுக் கொடுத்து விடுவான் என்று தான் எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் மகேஷ் மொத்தமாக சுயநலம் மிருகமாய் மாறி இருக்கிறான். அன்பு தான் அழகன் என்று தெரிந்த பிறகு மகேஷின் நடவடிக்கை மொத்தமாக மாறிவிட்டது. ஆனந்தி எந்த காரணத்தை கொண்டும் இனி அன்பு வீட்டில் இருக்கக் கூடாது என முடிவெடுக்கிறான்.

சுயநல மிருகமாய் மகேஷ்

மகேஷ் அழகன் யார் என கண்டுபிடித்த பிறகு அதை ஆனந்தியிடம் சொல்வான் என எதிர்பார்த்த முத்துவுக்கும் பெரிய ஏமாற்றம் தான். கம்பெனிக்கு வந்த ஆனந்த இடம் இன்று சாயந்திரமே நீ வேற ஹாஸ்டலுக்கு போகப் போகிறாய் என்று சொல்கிறான்.அதற்கு ஆனந்தி அன்பு வெளிநாடு போக இருக்கும் சூழ்நிலையில் நான் நாளை வேற ஹாஸ்டலுக்கு போகிறேன். நீங்கள் அன்பு விடம் வெளிநாட்டுக்கு போக வேணாம் என்று சொல்லுங்கள் மகேஷ் சார் என்று கேட்கிறாள்.

இங்கேயே இருந்தால் நான் பிரச்சனை பண்ணுவேன் என்று தான் அவன் வெளிநாடு போகிறான். வெளிநாட்டுக்கு போன கொஞ்ச நாள் கழித்து ஆனந்தியை வெளிநாட்டிற்கு கூட்டிக்கொண்டு போய்விடுவான் என தவறாக மகேஷ் மனதிற்குள் நினைக்கிறான்.

ஆனந்தியிடம் மத்தவங்களோட சொந்த முடிவுல நான் தலையிட முடியாது அன்பு வெளிநாடு போனால் போகட்டும் என்று மகேஷ் சொல்கிறான். இது ஆனந்திக்கு பெரிய அதிர்ச்சியை கொடுக்கிறது. சரி நான் அன்பு வீட்டுக்கு போய் என்னோட துணிமணிகளை எடுத்துட்டு வரேன்னு ஆனந்தி சொன்னதுக்கு, நீ இனி அன்பு வீட்டு பக்கமே போகக்கூடாது என்கிறான் மகேஷ்.

இது பற்றி அன்பு விடம் ஆனந்தி சொல்லும் போது அன்புக்கும் அது பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது. இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஆனந்தி அன்பு விடம் வெளிநாட்டுக்கு போக வேண்டாம் என கதறி அழுவது போல் காட்டப்பட்டு இருக்கிறது.

அது மட்டும் இல்லாமல் யாழினி ஆனந்தியிடம் நீங்க எங்க அண்ணனை காதலிக்கிறீங்களா , உங்க ரெண்டு பேரையும் பார்க்கும்போது எனக்கு அப்படித்தான் தோணுது என சொல்கிறாள். ஆனந்திக்கு இந்த விஷயம் அவளை யோசிக்க வைக்கிறது. ஆனந்தியை பிரிய மனமில்லாமல் அன்பு கதறி அழுவது போல் காட்டப்பட்டிருக்கிறது

Related Post

முந்தானைமுடுச்சு பாக்யராஜ் கையில் இருக்கும் குழந்தை இந்த சீரியல் நடிகை தானா?

Posted by - March 4, 2023 0
முந்தானை முடிச்சு பாக்யராஜ் – ஊர்வசி நடிப்பில் 1983ல் வெளிவந்த படம் தான் முந்தானை முடிச்சு. மிக்பெரிய அளவில் அந்த படத்திற்கு வரவேற்பு கிடைத்தது. முந்தானை முடிச்சு…

முடிவுக்கு வருகிறதா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்.. மீண்டும் இணைந்த குடும்பம்? அடுத்த வார ப்ரொமோ

Posted by - April 16, 2023 0
பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குடும்பம் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். மூர்த்தி, கதிர் ஒரே வீட்டில் இருக்க, ஜீவா மற்றும் கண்ணன் இருவரும் குடும்பத்தில் இருந்து…

குக் வித் கோமாளியை விட்டுவிட்டு மணிமேகலை கிராமத்தில் தொடங்கிய புது விஷயம்!

Posted by - March 6, 2023 0
விஜய் டிவியின் குக் வித் கோமாளி 4ம் சீசன் தற்போது பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த ஷோவில் முந்தைய சீசன்கள் மட்டுமின்றி இந்த சீஸனிலும் மணிமேகலை கோமாளியாக எல்லோரையும்…

பலர் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்கள்.. ஷாக்கிங் தகவல் கூறிய பாடகி ஜோனிடா காந்தி

Posted by - June 17, 2025 0
ஜோனிடா காந்தி தமிழ் சினிமாவில் பாடகர்களுக்கு பஞ்சமே இல்லை. அந்த காலத்தில் விரல்விடும் அளவிற்கு பாடகர்கள் இருந்தார்கள், ஆனால் இப்போது கணக்கே இல்லாமல் ஏகப்பட்ட திறமையான பாடகர்கள்…

தொடர்ந்து 4 சீரியல்களை நிறுத்தப்போகும் விஜய் டிவி- எந்தெந்த தொடர்கள் தெரியுமா?

Posted by - April 3, 2023 0
விஜய் டிவி தமிழ் சினிமாவில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சிகளில் ஒன்று விஜய். இதில் ரசிகர்களை கவரும் வண்ணம் ஏகப்பட்ட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. எந்த அளவிற்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பி TRPயை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *