சூர்யா கொடுத்த வாய்ப்பில் வசூல் மன்னனாக மாறிய விஜய்.. பிரபல தயாரிப்பாளர் பேச்சு

303 0

தளபதி விஜய்

விஜய் இன்று தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கிறார். இவர் நடிப்பில் தற்போது Goat திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை முடித்தபின் தளபதி 69ல் நடிக்கவுள்ளார். இதுவே அவருடைய கடைசி படம் என அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் சூர்யாவிற்கு நெருக்கமானவர்களில் ஒருவர் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. இவர் ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். தற்போது சூர்யா நடித்து வரும் கங்குவா படத்தை கூட இவர் தான் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா கொடுத்த வாய்ப்பு!

இந்நிலையில், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா விஜய் மற்றும் சூர்யா சம்பந்தப்பட்ட விஷயம் குறித்து பேசியுள்ளாராம். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த துப்பாக்கி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது சூர்யா என கூறியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.துப்பாக்கி படத்தின் கதையை சூர்யாவிற்காக தான் ஏ.ஆர். முருகதாஸ் எழுதினாராம். ஆனால், அதில் விஜய்க்கு நடிக்க சூர்யா வாய்ப்பு கொடுத்ததாக ஞானவேல் ராஜா பேசியுள்ளார். துப்பாக்கி தான் விஜய்யின் நடிப்பில் வெளிவந்து ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்த முதல் திரைப்படமாகும்.ஆகையால் சூர்யா கொடுத்த வாய்ப்பில் தான், துப்பாக்கி படத்தில் நடித்தார் என ஞானவேல் ராஜா பேசியதாக கூறப்படும் செய்து ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Related Post

கமல்ஹாசனின் Thug Life பட லுக் இந்த ஹாலிவுட் படத்தின் காப்பியா?- வைரலாகும் போட்டோ

Posted by - November 7, 2023 0
கமல்ஹாசன் உலக நாயகன் கமல்ஹாசன் இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர். இந்த…

தளபதி 69 அரசியல் படமா.? மேடையில் போட்டு உடைத்த எச்.வினோத், 200% இப்படி தான் இருக்கும்

Posted by - August 17, 2024 0
Thalapathy 69: விஜய்யின் அரசியல் பயணம் ஆரம்பித்துவிட்டது. வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் நடித்துள்ள கோட் இன்னும் சில வாரங்களில் திரைக்கு வருகிறது. அதை அடுத்து அவருடைய 69 ஆவது படத்தோடு சினிமாவிற்கு குட்பை…

சிங்கப்பூர் சலூன் ரசிகர்கள் பார்வை…

Posted by - January 25, 2024 0
கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள சிங்கப்பூர் சலூன் திரைப்படம் இன்று வெளிவந்துள்ளது. வேல்ஸ் நிறுவனம் ஐசரி கே. கணேஷ் இப்படத்தை தயாரிக்க சத்யராஜ், லால்,…

மனைவியை பயமுறுத்த தற்கொலை Prank செய்த நடிகர்.. நிஜத்திலேயே உயிரிழந்த பரிதாபம்

Posted by - April 25, 2023 0
சில தினங்களுக்கு முன்பு பிரபல கன்னட நடிகர் சம்பத் ராம் என்பவர் பெங்களூரில் அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார் என்கிற செய்தி வெளியாகி இருந்தது. 35 வயதான…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *