tvk

சென்னையால் வந்த வினை..! வெற்றிக்காக போராடும் ஆனந்த்?

161 0

தமிழக வெற்றிக் கழகத்தில் என்.ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா இடையே வெடித்துள்ள அதிகார மோதல், விஜய்க்கு தலைவலியாக மாறியுள்ளதாக பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

TVK Vijay TN Election 2026: விஜயிடம் அனுமதி பெறாமலேயே கூட்டணி அமைப்பது தொடர்பாக, மாவட்ட செயலாளர்களுடன் என்.ஆனந்த ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிகார மோதலில் தவெக..

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கும், தவெகவிற்கும் இடையே தான் போட்டி என, அக்கட்சியின் தலைவர் விஜய் தொடர்ந்து சூளுரைத்து வருகிறார். ஆனால், அந்த கட்சியில் நிலவும் அதிகார மோதலை தீர்ப்பதே அவருக்கு பெரும் பிரச்னையாக வெடித்துள்ளதாக கூறப்படுகிறது. தலைமையிடம் ஆதவ் அர்ஜுனா கொண்டுள்ள நெருக்கம், சென்னை தொகுதிகளை குறிவைக்கும் நட்சத்திரங்கள், வெற்றிக்கான என்.ஆனந்தின் ஏக்கம் ஆகியவையே தற்போது தவெகவில் நிலவும் பல குழப்பங்களுக்கு காரணமாக கூறப்படுகிறது. இதன் விளைவாக விஜய் பாஜக உடன் கூட்டணியில் இணைய உள்ளதாக சில தகவல்களும் பரவ தொடங்கின. ஆனால், விஜய் தரப்பு அதனை முற்றிலுமாக மறுத்துள்ளது.

பெரம்பூரில் விஜய் – டேக் கேர் செய்யும் ஆதவ்?

சட்டமன்ற தேர்தலில் விஜய் இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடலாம் என கூறப்படும் நிலையில், அதில் ஒன்று சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக கூறப்படுகிறது. இதற்கான களப்பணிகளும் ஏற்கனவே முழு வீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. விரைவில் வேட்பாளர்கள் பட்டியலும் கட்சி சார்பில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, விஜய் போட்டியிடும் தொகுதிக்கான அனைத்து பணிகளையும் தானே கவனித்துக் கொள்வதாக ஆதவ் அர்ஜுனா அறிவித்துள்ளார். தேர்தல் பரப்புரை தொடங்கி எங்கு? எப்படி? மக்களை சந்திக்கலாம் என மொத்த பணிகளையும் அவரது தலைமையிலான குழுவே மேற்கொள்ள இருப்பதாக தவெக தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய் இம்பேக்ட் – வில்லிவாக்கத்தில் எதிரொலிக்குமா?

பெரம்பூரில் விஜய் களமிறங்கினால், பக்கத்து தொகுதியான வில்லிவாக்கத்தை குறிவைக்கும் தனது வெற்றிக்கும் அது உதவும் என ஆதவ் அர்ஜுனா திட்டமிட்டுள்ளாராம். இதன் காரணமாகவே, பெரம்பூரில் விஜய் களமிறங்கினால், அதுதொடர்பான அனைத்து களப்பணிகளையும் தானே மேற்கொள்வதாக தெரிவித்துள்ளாராம். அடிக்கடி பரப்புரைக்கு அங்கு வரவைத்து மக்கள் சந்திப்பை நிகழ்த்தினால், அதன் எதிரொலியாக தனக்கான செல்வாக்கும் சென்னை பெருநகரில் அதிகரிக்கும் என திட்டமிட்டுள்ளாராம். அதோடு, வெற்றியை பரிசாக்குவதன் மூலமாக, என். ஆனந்தை பின்னுக்கு தள்ளி தலைமையின் நம்பிக்கைக்குரிய நபராக மாறவும் முயற்சித்து வருவதாக நண்பா, நண்பிகள் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.

வெற்றிக்காக போராடும் என்.ஆனந்த் – கூட்டணி?

கட்சியின் வளர்ச்சி மற்றும் வெற்றியை தாண்டி, தனக்கான இடத்தை தக்கவைக்க என்.ஆனந்த் கடுமையாக போராடி வருகிறாராம். ஒருவேளை பெரம்பலூரில் விஜய் வெல்வதோடு, அவரது பரப்புரையின் தாக்கத்தால் ஆதவ் அர்ஜுனாவும் வென்றால் தனது நிலைமை என்னவாகும்? என்பது அவரது அச்சமாம். இதன் காரணமாக விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளை ஆராய்ந்து, இறுதியில் சென்னை தியாகராய நகரில் போட்டியிட முடிவு செய்துள்ளாராம். அங்கு பாஜக உடன் கூட்டணி அமைத்தால் வெற்றி உறுதி என சிலர் அவருக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர். இதனை நம்பியே, விஜயிடம் கூட கேட்காமல், மாவட்ட செயலாளர்கள் உடன் அவசர அவசரமாக காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தி, கூட்டணி குறித்து கருத்து கேட்டுள்ளார். எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால், புதுவை முதலமைச்சரும், என்.ஆர். காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி வாயிலாக பாஜக உடன் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தவும் வேகமெடுத்தாராம்.

கடிந்து கொண்ட விஜய்..

என். ஆனந்தின் நடவடிக்கைகளை தொடர்ந்தே, பாஜக உடன் தவெக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஏராளமான தகவல்கள் தீயாய் பரவின. இதனிடையே, டெல்லியில் சிபிஐ விசாரணையை முடித்துக் கொண்டு வெளியே வந்த உடன், மொத்த நிகழ்வுகளையும் அறிந்து விஜய் கடுப்பாகியுள்ளார். தனித்தே போட்டியிடலாம் என முடிவு செய்த பிறகும், என்னை கேட்காமல் ஏன் மாவட்ட செயலாளர்களுடன் கூட்டணி குறித்து விவாதித்தீர்கள் என, என். ஆனந்திடம் கடிந்துகொண்டாராம். அதன் பிறகே, பாஜக உடன் கூட்டணி பேச்சுவார்த்தைகள் எதையும் நடத்தவில்லை என, சி.டி.ஆர். நிர்மல் குமார் மற்றும் செங்கோட்டையன் போன்ற தவெக நிர்வாகிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

Related Post

ASDFGH

செம அப்செட்டில் மு.க.ஸ்டாலின்! ஏன்?

Posted by - February 17, 2026 0
ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை தொடர்ந்து எழுப்பி வரும் மாணிக்கம் தாகூரால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் ஒவ்வொரு…
tn bjp

தலைவர்களுக்கே கல்தா? நயினார், வானதி, அண்ணாமலை, எல்.முருகன் தொகுதிகள் பாஜகவுக்கு இல்லை- இதான் காரணம்

Posted by - March 25, 2026 0
 கடந்த சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக தலைவர்கள் போட்டியிட்ட தொகுதிகள் எவையும் இந்த முறை பாஜகவுக்கு ஒதுக்கப்படவில்லை. அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக போட்டியிடும் தொகுதிகளின் விவரத்தை அதிமுக…

காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் – முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

Posted by - August 26, 2025 0
சென்னை: முதல்வரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்…

TVK Vijay: ‘உன்னை நம்பி இந்த நாடு காத்திருக்கு’ .. விஜய் ஆதரவாக இளையராஜா.. மாறும் களம்!

Posted by - May 1, 2026 0
விஜய்க்கு சினிமாத்துறையில் இருந்து ஆதரவுக்குரல் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் கொடுக்கப்படுகிறது. சின்னத்திரை, பெரியதிரை பல பிரபலங்கள் அவருக்காக வீதிதோறும் பரப்பு மேற்கொண்டனர். தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *