அறிக்கையின்படி, Vi நிறுவனம் Indus க்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை சுமார் 7,500 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
பிரபல தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான Vi , 7,000 கோடி ரூபாய்க்கு மேல் கடனைத் திரட்டுவதற்காக பல கடன் வழங்குநர்களை அணுகியுள்ளதாக தி எகனாமிக் டைம்ஸ் ஜனவரி 6 அன்று தெரிவித்தது. கடனாக கேட்கும் தொகையில் பெரும்பகுதி இண்டஸ் டவர்ஸுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்த பயன்படுத்தப்படும் என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.
பல பிரபல வங்கி மற்றும் கடன் தரும் நிறுவனங்களிடம் 15,000 கோடி வங்கி உத்தரவாதங்கள் மற்றும் புதிய கடன்களை வழங்குமாறு Vi கேட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால் சமீபகாலமாக Vi நிறுவனம் சுமார் 75,830.8 கோடி எதிர்மறை நிகர மதிப்பைக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
நஷ்டத்தை குறிக்கும் எதிர்மறை நிகர மதிப்பு கொண்ட நிறுவனத்திற்கு வங்கி அமைப்புகள் கடன்களை வழங்க முடியாது என்பதால் எல்லா இடங்களிலும் மறுப்பு செய்தி மட்டுமே கிடைத்து வருகிறது, இந்த கடன் இன்றோ நேற்றோ தொடங்கியது அல்ல.
நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருந்த இங்கிலாந்தின் வோடபோன் மற்றும் இந்தியாவின் ஆதித்யா பிர்லா குழுமம் (ஏபிஜி) இணைந்து vi என்ற புதிய கூட்டு சேவையை 2020 ஆம் ஆண்டு தொடங்கியது. அதற்காக Indus டவர் நிறுவனத்திடம் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் Vi நிறுவனம் நஷ்டத்தில் சென்றுகொண்டு இருப்பதால் டவர் நிறுவனத்திற்கு சரிவர பணம் செலுத்தவில்லை.
சென்ற ஆண்டே Indus நிறுவனம் Vi நிறுவனம் பணம் செலுத்தப்படாவிட்டால் டவர் தளங்களுக்கான அதன் அணுகலைத் துண்டிக்கும் என்று எச்சரித்திருந்தது. பின்னர் தொலைத்தொடர்பு நிறுவனம் ஒத்திவைக்கப்பட்ட கட்டண திட்டத்தை வழங்கியது, அதை டவர் நிறுவனமும் ஏற்றுக்கொண்டது.
அதன்படி டவர் நிறுவனத்திற்கு ஜனவரி முதல் அதன் தற்போதைய நிலுவைத் தொகையில் 100 சதவீதத்தை செலுத்த உறுதியளித்துள்ளது. அறிக்கையின்படி, Vi நிறுவனம் Indus க்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை சுமார் 7,500 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
டவர் நிறுவனத்திற்கு Vi நிறுவனம் மாதந்தோறும் செலுத்த வேண்டிய தொகை ரூ.250-300 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இதை செலுத்த பணம் இல்லாத நிலையில்தான் கடன் கேட்டு வங்கிகளுக்கும் நிதி நிறுவனங்களுக்கும் அலைந்து வருகிறது.
- Home
- பொழுதுபோக்கு
- செல்டவருக்கு ரூ.7500 கோடி நிலுவைத்தொகை… வங்கிகளில் கடன் கேட்டு அலையும் Vi நிறுவனம்!
Related Post
பூர்ணிமாவை லவ் பண்றிங்களா? விஷ்னு ஷாக்கிங்..
பொதுவாக பிக் பாஸ் என்றாலே நல்ல வாழ்கை கிடைக்கும் நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் லட்சம் லட்சமாக பணம் கிடைக்கு என்ற காலம் போய் இன்று சண்டைகளுக்கு சர்ச்சைகளுக்கும்…
லியோ முழு படத்தையும் பார்த்த விஜய்.. என்ன கூறினார் தெரியுமா
லியோ விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் லியோ படம் தற்போது ரிலீஸுக்கு தயாராகி இருக்கிறது. அக்டோபர் 19ம் தேதி லியோ ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு…
ஒரே நாளில் இரண்டு சீரியல்களை முடிக்கும் விஜய் டிவி.. இந்த தொடரும் முடிகிறதா?
விஜய் டிவியின் இரண்டு முக்கிய சீரியல்கள் இன்னும் இரண்டே வாரங்களில் முடியப்போகிறது. ஒன்று பாக்கியலட்சுமி. பல வருடங்களாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த தொடர் இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே…
நாலு குறும்படம் போட்டுருந்தா கூட இந்த சீசன் நல்லா போயிருக்கும்.. சுவாரஸ்யம் இல்லாமல் மொக்கை போடும் பிக்பாஸ் 8
விஜய் சேதுபதி வந்த பிறகாவது இந்த சீசன் நல்லா இருக்கும்னு பார்த்தா படுமோசமா இருக்கே. இது தான் பிக்பாஸ் பார்வையாளர்களின் தற்போதைய மனநிலையாக உள்ளது. கமல் தொகுத்து வழங்கும் போது பாரபட்சமாக இருக்கிறது என…
பிக்பாஸ் 7 போட்டியாளர் திடீரென மருத்துவமனையில் அனுமதி- அறுவை சிகிச்சை நடந்ததா?
பிக்பாஸ் 7 கடந்த ஆண்டு அக்டோபர் 1ம் தேதி படு பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட நிகழ்ச்சி பிக்பாஸ் 7. இதில் விசித்ரா, வினுஷா, ரவீனா தாஹா, விஷ்ணு, மாயா,…
Categories
- MEMES (12)
- Uncategorized (1)
- அரசியல் (184)
- இந்தியா (470)
- உலகம் (174)
- சினிமா (815)
- தமிழ்நாடு (1,087)
- தமிழ்நாடு தேர்தல் 2026 (292)
- பொழுதுபோக்கு (698)
- விளையாட்டு (85)
Recent Posts
- திருவண்ணாமலை அருகே சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை – அண்ணாமலை கண்டனம்

- “என்னை அடக்கவே முடியாது.. மக்கள் விசில் பக்கம் தான்” – கடைசி நேரத்தில் விஜய் சொன்ன வார்த்தை!

- சுரண்டி பிழைக்கும் குடும்பத்திற்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே நடக்கும் தேர்தல் – இபிஎஸ்

- எம்மதமும் சம்மதம்! திருச்சி வாக்கு சேகரிப்புக்கு நடுவே வழிபாடு! மதநல்லிணக்கத்தை செயலில் காட்டிய விஜய்

- ஓட்டு மிஷினில் 16வது இடம் விஜய்க்கா.? நோட்டாவிற்கா.? நடந்தது இது தான்- தேர்தல் ஆணையம் லேட்டஸ்ட் அப்டேட்
