image 3

திமுகவுக்கு பலனளிக்குமா ‘டாப்ஸ்’ ஓய்வூதியத் திட்டம்? – மீண்டும் போராடத் தயாராகும் சங்கங்கள்

91 0

கடந்த 2021- சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் ‘பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அமல்​படுத்​து​வோம்’ என திமுக வாக்​குறுதி அளித்​தது. அது திமுக-​வின் வெற்​றிக்கு பெரிதும் உதவியது. ஆனால், 4 ஆண்​டு​களுக்​கும் மேலாக இதற்​காக பல்​வேறு போராட்​டங்​களை அரசு ஊழியர்​கள், ஆசிரியர்​கள் நடத்​தி​யும் பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டம் கிணற்​றில் போட்ட கல்​லாகவே கிடந்​தது.

தற்​போது, தேர்​தல் நெருங்​கும் நிலை​யில், அரசு ஊழியர்​கள், ஆசிரியர்​கள் போராட்​டத்​தில் குதிக்​கும் சூழல் ஏற்​பட்​ட​தால், ககன்​தீப்​சிங் பேடி தலை​மையி​லான குழு​வின் பரிந்​துரைப்​படி, ‘தமிழ்​நாடு உறு​தி​யளிக்​கப்​பட்ட ஓய்​வூ​திய திட்​டத்தை (டாப்​ஸ்)’ முதல்​வர் ஸ்டா​லின் ஜனவரி 3-ல் அறி​வித்​தார். இதனிடையே, தேர்​தலில் அரசு ஊழியர்​களின் குடும்ப ஓட்​டு​களை கவர்​வதற்​காக இந்​தத் திட்​டத்தை அறி​வித்​திருப்​ப​தாக விமர்​சனங்​கள் எழுந்​துள்​ளன.

திட்​டத்​தின் முக்​கிய அம்​சங்​கள்: இந்த திட்​டத்​தில், ஊழியர்​கள் பெற்ற கடைசி மாத ஊதி​யத்​தில் 50 சதவீதம் ஓய்​வூ​தி​ய​மாக வழங்​கப்​படும். இதற்கு பணி​யாளர்​களின் பங்​களிப்​பாக ஊதி​யத்​தில் 10 சதவீதம் பிடிக்​கப்​படும். ஓய்​வூ​தி​ய​தா​ரருக்கு 6 மாதங்​களுக்கு ஒரு​முறை அகவிலைப்​படி உயர்த்​தப்​படும். ஓய்​வூ​தி​ய​தா​ரர் இறந்​து​விட்​டால் அவர் பெற்​று​வந்த ஓய்​வூ​தி​யத்​தில் 60 சதவீதம் குடும்ப உறுப்​பினருக்கு ஓய்​வூ​தி​ய​மாக தரப்​படும். பணிக்​காலத்​தில் இறந்​தால் ரூ.25 லட்​சம் வரை பணிக்​கொடை அளிக்​கப்​படும் என்பன உட்பட பல்​வேறு அம்​சங்​கள் உள்​ளன.

இந்​நிலை​யில் 23 ஆண்​டு​கால கோரிக்​கையை பூர்த்தி செய்​யும் தமிழக அரசின் முயற்​சியை வரவேற்​ப​தாக ஜாக்​டோ-ஜியோ, போட்​டா-ஜியோ ஆகிய பிர​தான கூட்​டமைப்​பு​கள் வரவேற்​றுள்​ளன. அதேசம​யம், மற்​றொரு தரப்​பினர் கடும் அதிருப்​தியை வெளிப்​படுத்தி மீண்​டும் போராட்​டங்​களை அறி​வித்​துள்​ளனர். ஜாக்​டோ-ஜியோ அமைப்​பிலும் டாப்ஸ் திட்​டத்​துக்கு எதி​ரான குரல்​கள் வலுக்​கின்​றன. இதுகுறித்​தான சம்​பந்​தப்​பட்​ட​வர்​களின் கருத்​துகள் வரு​மாறு: பா.ஆரோக்கியதாஸ் – பழைய ஓய்வூதிய திட்ட மீட்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழக அரசின் புதிய ஒய்​வூ​தி​யத் திட்​டம் என்​பது ஏமாற்று வேலை. இதில் அரசின் பங்​களிப்பு இல்​லை. உறு​தி​யளித்​த​படி பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை நிறை​வேற்​றாமல் இருப்​பது ஏற்​புடையதல்ல. அரசால் லாபமடைந்த குறிப்​பிட்ட சில சங்​கங்​கள் மட்​டுமே இதை ஆதரிக்​கின்​றன. இதை​விட மத்​திய அரசின் ஒருங்​கிணைந்த ஓய்​வூ​தி​யத் திட்​டத்​தில் கூடு​தலான சிறப்​பம்​சங்​கள் உள்​ளன.

நீதிப​தி​கள், எம்​எல்ஏ, எம்​பி-க்​களுக்கு பங்​களிப்பு இல்​லாத ஓய்​வூ​திய திட்​டமே அமலில் உள்​ளது. ஆனால், பல ஆண்​டு​களாக அரசுக்​காக பணி​யாற்றி ஒய்வு பெறு​பவர்​களுக்கு அவர்​களிடம் பிடித்த பணத்​தையே வைத்து பலன்​களை அளிப்​பது நியாயமற்ற செய​லாகும். இந்​தத் திட்​டத்​தில் ஓய்​வு​பெறு​பவர்​களுக்கு பணிக்​கொடை மற்​றும் முறை​யான ஓய்​வூ​தி​யம் கிடைக்க வழி​யில்​லை. பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்​தையே அமல்​படுத்த வேண்​டும்.

சி.​முரு​கன் – ஜாக்​டோ-ஜியோ உயர்​மட்​டக் குழு உறுப்​பினர் சிபிஎஸ் திட்​டத்​தில் ஊழியர்​கள் மற்​றும் அரசின் பங்​களிப்பு தொகை​யை​யும் சேர்த்து மொத்​த​மாக எங்​களிடம் கொடுத்​து​விடு​வார்​கள். ஆனால் இதில், ஊழியர்​களின் பங்​களிப்பு தொகை எப்​படி திரும்ப வழங்​கப்​படும் என்​பது குறித்து தெளி​வில்​லை. அதே​போல், நிதிப் பற்​றாக்​குறை ஏற்​பட்​டால் மட்​டுமே ரூ.13 ஆயிரம் கோடி தமிழக அரசு செல​விடும் என்​பதும் சரியல்ல. ஏனெனில், ஊழியர்​களின் பணம் ரூ.85 ஆயிரம் கோடி முதலீடு செய்​யப்​பட்​டுள்​ளது. அதற்​கான வட்டி மற்​றும் கமிஷன் விவரங்​கள் வெளிப்​படை​யாக இல்​லை.

ஜாக்​டோ-ஜியோ​வில் உள்ள சில சங்​கங்​கள் அரசுக்கு ஆதரவு தெரி​வித்​தா​லும், பல சங்​கங்​கள் எதிர்ப்​பில் உள்​ளன. அரசாணை வந்​ததும் உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்​குத் தொடர திட்​ட​மிட்​டுள்​ளோம். ராஜஸ்​தான் உள்​ளிட்ட 7 மாநிலங்​கள் பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அமல்​படுத்​திய நிலை​யில், பொருளா​தா​ரத்​தில் முன்​னேறிய தமிழக அரசும் அதை அமல்​படுத்த வேண்​டும். இல்​லை​யெனில் தேர்​தலில் தாக்​கத்தை ஏற்​படுத்​தும்.

<div class="paragraphs"><p>பா.ஆரோக்கியதாஸ்,&nbsp;சி.​முரு​கன்,&nbsp;த.அமிர்​தகு​மார்</p></div>த.அமிர்​தகு​மார் – போட்டா – ஜியோ மாநில ஒருங்​கிணைப்​பாளர் டாப்ஸ் திட்​டத்​தில் சில குறை​பாடு​கள் இருப்​பினும் அதை வரவேற்​கி​றோம். எங்​களின் 23 ஆண்​டு​கால போராட்​டத்​துக்​குப் பின்​பு, மாதாந்​திர ஓய்​வூ​தி​யம் கிடைப்​பது உறு​தி​யாகி​யுள்​ளது. ஒட்​டுமொத்த தொகை​யாக (Lump sum) கிடைப்​ப​தை​விட, வாழ்​நாள் முழு​வதும் கிடைக்​கும் மாத ஓய்​வூ​தி​யமே பாது​காப்​பானது. தற்​போதைய முடிவை 90 சதவீத வெற்​றி​யாக கருதுகி​றோம்.

அதே​போல், நிதிப் பற்​றாக்​குறை​யால் ஊழியர்​களின் 10 சதவீத பங்​களிப்பை குறைக்க முடி​யாது என்று அரசு தெரிவிக்​கிறது. எனினும், ஊழியர்​களின் பங்​களிப்பை ரத்து செய்து முழு​வதும் அரசே ஏற்க வேண்​டும். மத்​திய அரசின் ஒருங்​கிணைந்த ஒய்​வூ​தி​யத் திட்​டத்​தில் இருப்​பது போல், ஓய்வு பெறும்​போது கிடைக்​கும் மொத்​தத் தொகை (Lump sum payment) அல்​லது முன்​பணம் எடுக்​கும் வசதி இதில் இல்​லை. இது சரிசெய்​யப்பட வேண்​டும். இவ்​வாறு அவர்​கள் தெரி​வித்​தனர்.

இதற்​கிடையே, பல்​வேறு சங்​கங்​கள் மீண்​டும் போராட்​டத்​தில் குதிக்​க​வும் ஆயத்​த​மாகி வரு​கின்​றன. மறு​புறம் அரசு ஊழியர்​களை அரவணைக்​கும் வித​மான தேர்​தல் வாக்​குறு​தி​களை வழங்க அதி​முக-​வும் திட்​ட​மிட்​டுள்​ள​தாகக் கூறப்​படு​கிறது. இதனால் தேர்​தலை மைய​மாக வைத்து திமுக மேற்​கொண்ட இந்த நடவடிக்​கை​யானது அவர்​களுக்கு கை​கொடுக்​குமா என்​பதே கேள்​விக் குறி​யாகியுள்​ளது.

Related Post

த.வெ.க.வை கண்டு பயத்தின் உச்சத்தில் தி.மு.க. – விஜய் கடும் விமர்சனம்

Posted by - September 9, 2025 0
வெற்று விளம்பர மாடல் அரசு, நமது தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் நலனுக்கான செயல்பாடுகளைக் கண்டாலே அஞ்சி நடுங்குகிறது. ஆனந்த் மீதும் கழகத் தோழர்கள் மீதும் பதியப்பட்ட…
Generated Image November 27 2025 10 10AM

செங்கோட்டையன் மட்டுமல்ல பாஜக மாஜி மாநில தலைவரும்… தட்டி தூக்கிய விஜய்.! துள்ளி குதிக்கும் தவெக தொண்டர்கள்

Posted by - November 27, 2025 0
சட்டமன்ற தேர்தலை தமிழகம் எதிர்நோக்கியுள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தவெகவில் அதிமுக மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களோடு இணையவுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில…
fgdf

2026 தமிழ்நாடு அரசியல் ‘திக் திக்’: தவெக எம்.எல்.ஏ.,க்கள் கூண்டோடு ராஜினாமா? தளபதியை தடுக்க கைகோர்க்கும் திமுக – அதிமுக!

Posted by - May 8, 2026 0
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி தமிழகமே பரபரப்பின் உச்சியில் இருக்கும் நிலையில், தற்போது வெளியாகி வரும் தகவல்கள் ரசிகர்களையும் மக்களையும் ஒரே நேரத்தில் குழப்பத்திலும்,…
edapadi palanisamy

EPS Statement: “அதிமுக ஒரு ஃபீனிக்ஸ் பறவை, மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பும்“ இபிஎஸ் அறிக்கை

Posted by - May 5, 2026 0
TN Election Results 2026: சட்டமன்ற தேர்தல் முடிவுகளை அடுத்து அறிக்கை வெளியிட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஃபீனிக்ஸ் பறவை போல் அதிமுக மீண்டும் வெற்றிப்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *