திருவாரூர், நாகையில் திடீர் மழை – விவசாயிகள் கவலை

213 0

நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வருவதால் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவினாலும், தென்தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் நாகை, திருவாரூர், தூத்துக்குடி மாவட்டங்கள் அதிகாலை முதல் சாரல்மழை பெய்து வருகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் திடீர் மழையால் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வருவதால் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். தற்போது பெய்து வரும் சாரல் மழை காரணமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வருகின்றன. விவசாயிகள் தார்ப்பாய்களை கொண்டு நெல் மூட்டைகளை மூடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து மழை பெய்தால் மிகப்பெரிய பாதிப்பை சந்திப்போம் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி நகரில் பல இடங்களில் லேசான தூரல் மழையும், பல இடங்களில் மழை பெய்வது போன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

Related Post

மீனவர்கள் நலனில் ஊழல் திமுக அரசுக்கு அக்கறை கிடையாது!- அண்ணாமலை

Posted by - August 16, 2023 0
வரும் பாராளுமன்றத் தேர்தலில், சந்தர்ப்பவாத, ஊழல் திமுக காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிப்போம்  என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் (ட்விட்டர்)…

அ.தி.மு.க. வழக்கில் தீர்ப்பு எப்போது? தொண்டர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரிப்பு..

Posted by - January 6, 2023 0
அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் பெரும் ஆவலாக உள்ளது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமா? அல்லது இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி…

அன்றே மோசடி செய்த நிகிதா.. அதுவும் அவர் பேர்ல? அஜித்குமார் மரண வழக்கில் புதிய திருப்பம்

Posted by - July 3, 2025 0
2011ல் துணை முதலமைச்சரின் பிஏ-வை வைத்து வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கின் எஃப் ஐஆர் தற்போது வெளியாகியுள்ளது. திருப்புவனம் இளைஞர் அஜித்…

பொன்முடி வழக்கில் திருப்பம் – தண்டனையை நிறுத்தி வைத்தது உச்சநீதிமன்றம்.. விவரம்!!

Posted by - March 11, 2024 0
தண்டனை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்ததால் பொன்முடி மீண்டும் திருக்கோவிலூர் தொகுதி எம்எல்ஏவாக வாய்ப்புள்ளது. மீண்டும் எம்எல்ஏ ஆவதால் அமைச்சர் ஆவதற்கும் பொன்முடிக்கு தடையில்லை..   சொத்துக்குவிப்பு வழக்கில்…

பிரபல அரசியல் கட்சி நிர்வாகிகள், YouTuber-களின் அதிர்ச்சி வீடியோக்களை அடுத்தடுத்து லீக் செய்த மதன் ரவிச்சந்திரன்.. தமிழகமே பரபரப்பு..!

Posted by - March 16, 2023 0
பொறுப்புத்துறப்பு: இந்த செய்தி Mars Tamilnadu Youtube பக்கத்தில் வெளியான முதல் 4 விடியோக்களில் கூறியதை சுருக்கமாக தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.   எங்கும் அரசியல், எதிலும் அரசியல்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *