திருவிடைமருதூர் | பிரச்சாரத்தில் திமுக அமைச்சர், அரசு கொறடா, எம்பியை வழிமறித்து கேள்வி கேட்ட விவசாயிகள்

220 0

மயிலாடுதுறை: தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்களை இணைக்கும் சாலையை சீரமைக்கக்கோரி கடந்த 3 ஆண்டுகளாக மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்ற திமுக எம்பியை வழிமறுத்து விவசாயிகள் கேள்வி கேட்டனர்.

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில், இண்டியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.சுதா போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அரசு தலைமை கொறடா கோவி. செழியன், மயிலாடுதுறை எம்பி செ.ராமலிங்கம் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், திருவிசைநல்லூர் தொடங்கி பல்வேறு கிராமங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.அப்போது, தஞ்சாவூர் மாவட்டம், செ.புதூர்-மயிலாடுதுறை மாவட்டம் திருவாலாங்காடு சாலையில் உள்ள திருக்குழம்பியம் வழியாகச் சென்று கொண்டிருந்தபோது, வேட்பாளர் ஆர்.சுதா மற்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அரசு தலைமை கொறடா கோவி. செழியன் ஆகியோர் சென்ற வாகனத்தை திடீரென வழிமறித்த விவசாயிகள், பல ஆண்டுகளாக சாலை வசதி செய்து கொடுக்க வில்லை என கேள்வி கேட்டனர்.

இதற்கு பதிலளித்த அரசு தலைமை கொறடா கோவி.செழியன், சாலை வசதி செய்து கொடுப்பதாக, பதில் அளித்தார். அதன்பின்னர் அந்த வாகனம் அங்கிருந்து வேகமாக புறப்பட்டுச் சென்றது. இதையடுத்து மற்றொரு வாகனத்தில் வந்த மயிலாடுதுறை எம்பி செ.ராமலிங்கம் மற்றும் கட்சியினரை வழிமறித்த விவசாயிகள், “2 மாவட்டங்களை இணைக்கும் இந்தச் சாலையில் கடந்த 5 ஆண்டுகளாக புதிய சாலை அமைத்துத் தரவில்லை. உங்களிடம் 3 ஆண்டுகளாக மனு அளித்துள்ளோம். இதுவரை, எந்தவித நடவடிக்கையும் இல்லை” என கேள்வி கேட்டனர்.

இதற்கு பதிலளித்த செ.ராமலிங்கம், “நான் ஒன்றியக்குழுத் தலைவராக இருந்தபோது, இந்த சாலையை அமைத்துக் கொடுத்துள்ளேன். இந்தச் சாலையில் அதிகமாக டிராக்டர்கள் சென்று வருவதால், சாலை சேதமடைந்து விட்டது. வெற்றிபெற்ற பிறகு பார்ப்போம்” என்று பதிலளித்தார். அப்போது, அங்கிருந்த விவசாயிகள், டிராக்டரை பயன்படுத்தாமல் விவசாயம் எப்படிச் செய்ய முடியும்? என்று கேள்வி எழுப்பினர். மேலும், சாலை அமைத்து தர வேண்டும் என்று விவசாயிகள் கூறிக்கொண்டு இருந்தபோதே. செ.ராமலிங்கத்தின் வாகனம் அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றது.

Related Post

’DMK FILES’

Posted by - January 7, 2026 0
தேர்தல் நெருங்க நெருங்க ஆளுங்கட்சி மீதான புகார்களை தீவிரப்படுத்த தொடங்கியுள்ளது அதிமுக, அந்த வகையில் திமுக அமைச்சர்கள் மீதான புகார்கள் தொடர்பாக முக்கிய ஆதாரங்களோடு இன்று டெல்லி…

நாடு முழுவதும் வேண்டாம் மோடி முழக்கம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை

Posted by - March 11, 2024 0
மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படவும், மாநில அரசுகளை மதிக்கும் அரசு மத்தியில் அமையவும், தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற…

சிட்டியில் DMK ஆட்டம் ஓவர்? 16 தொகுதிகளில் 14ல் சிக்கல், லட்சத்தில் காலி

Posted by - February 24, 2026 0
சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் காரணமாக, தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்களை இழந்த மாவட்டமாக சென்னை உருவெடுத்துள்ளது. TN Voters List Election 2026 DMK: சென்னையில் அதிகப்படியான…

📢 தமிழ்நாடு நிதிநிலை: இலவசங்கள் அதிகரிப்பு – நிர்வாக அதிகாரிகளின் பொறுப்பு என்ன?

Posted by - February 18, 2026 0
📢 தமிழ்நாடு நிதிநிலை: இலவசங்கள், மானியங்கள் – நிர்வாகத்தின் பொறுப்பு என்ன? சென்னை:தமிழ்நாட்டில் சமூகநலத் திட்டங்கள் மற்றும் மானிய செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், மாநிலத்தின் கடன்…

கருணாநிதி சூழ்ச்சி..ஜெயலலிதாவோடு மாட்டி விட்டுட்டாரு..

Posted by - March 3, 2026 0
பிற்காலத்தில் ஜெயலலிதாவுக்கு பின்னால் இந்த பெண் அதிமுகவுக்கு தலைமையாக வரக்கூடும் என 1996ல் கருணாநிதி கணித்தார். அதனால் தான் என்னை சொத்து குவிப்பு வழக்கில் இணைத்து விட்டார்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *