தீபாவளிக்கு மழை உறுதி! 20 மாவட்டங்களுக்கு அலர்ட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்

201 0

வங்கக்கடலில் அக்டோபர் 24-ஆம் தேதி உருவாகும் என முன்பதாக கூறப்பட்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தற்போது அக்டோபர் 21-ஆம் தேதியே உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..

தீபாவளி திங்களன்று கொண்டாடப்பட உள்ள நிலையில் 20 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை எச்சரிக்கை:

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்

நாளை(19-10-2025)தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம் தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

அதே போல் திபாவளி அன்று(20-10-2025) தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

21-10-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல், நாமக்கல், கரூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னைக்கான வானிலை:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
இன்று (18-10-2025): வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான – கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை (19-10-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

முன்பே உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலை

வங்கக்கடலில் அக்டோபர் 24-ஆம் தேதி உருவாகும் என முன்பதாக கூறப்பட்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தற்போது அக்டோபர் 21-ஆம் தேதியே உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 16-ஆம் தேதி தொடங்கிய நிலையில், தென், மேற்கு மற்றும் டெல்டா மாவட்டங்களுடன் சேர்ந்து சென்னையிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதற்கிடையில், அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது தீவிரமடைந்து அதே பகுதியில் நிலைத்து உள்ளது. இந்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்று மண்டலமாக மாறி, பின்னர் தெற்கு வங்கக்கடல் பகுதிக்குச் செல்லும் எனவும், அடுத்த 36 மணி நேரத்தில் இது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

18-10-2025 முதல் 22-10-2025 வரை: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்:

18-10-2025: தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
19-10-2025: எச்சரிக்கை ஏதுமில்லை.

20-10-2025 மற்றும் 21-10-2025: அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

Related Post

Generated Image January 23 2026 11 16AM

இன்று தமிழகம் வரும் மோடி.!

Posted by - January 23, 2026 0
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக – பாஜக கூட்டணியின் முதல் பிரச்சார கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் அதிமுக, பாஜக, பாமக, அமமுக, தமாகா, ஐஜேகே…

மதுரை மாநாட்டிலாவது திருந்துவாரா விஜய்? பவுன்சர்கள் ஒகே.. ஆனா ரவுண்ட்ஸ் எப்போ? தவெக சம்பவம் செய்யுமா?

Posted by - August 21, 2025 0
மதுரை மாநாட்டின் மூலமாவது தவெக தலைவர் விஜய் தீவிர அரசியலை முன்னெடுப்பாரா? என அவரது கட்சி தொண்டர்களே ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். மதுரை மாநாட்டில் விஜய் தனது மாநிலம்…

பொது சொத்துக்கள் சேதம்! ”சட்டம் தன் கடமையை செய்யும்”அமைச்சர் ரகுபதி விஜய்க்கு பதிலடி

Posted by - September 15, 2025 0
“விஜய்யின் வருகையால் திமுகவின் வாக்கு வங்கி பாதிக்க எந்த ஒரு வாய்ப்பும் கிடையாது. தவெக விதிமுறைகளை மீறிய விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும் என்று அமைச்சர்…
Gemini Generated Image mdnoecmdnoecmdno

குற்றவாளி வீட்டில் பிரியாணி சாப்பிட்ட ‘சார்’ சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார் – பழனிசாமி உறுதி

Posted by - April 9, 2026 0
குற்றவாளி வீட்டில் பிரியாணி சாப்பிட்ட ‘சார்’ அதிமுக ஆட்சியில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார் என்று சென்னையில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கூறினார். தேர்தல் அறிவிக்கப்பட்ட…

தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி?

Posted by - December 15, 2025 0
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக, பிரதமர் மோடி வரும் ஜனவரி மாதம் தமிழ்நாட்டிற்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *