தேனி அருகே நாக்கு, மூளை, கல்லீரலை பார்சலில் கடத்திய கும்பல்- நரபலி கொடுக்கப்பட்டதா? என விசாரணை

220 0

உத்தமபாளையம்:

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பழைய பைாபஸ் சாலையில் உதவி போலீஸ் சூப்பிரண்டு மதுக்குமாரி தலைமையில் போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். நள்ளிரவு 12.30 மணி அளவில் மின்னல் வேகத்தில் வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் இருந்த 4 பேரும் சந்தேகப்படும்படி இருந்ததால் அவர்களை காரை விட்டு கீழே இறங்க வைத்து விசாரித்தனர்.Suggestions for making the Police Investigation more effective and  efficient with minimal scope of any lapse – Radhey Krishna Legal Aid  Foundation

அதில் அவர்கள் 3 பேர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும், ஒருவர் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. அவர்கள் வைத்திருந்த பையை பிரித்து சோதனையிட்டனர். அதில் நாக்கு, மூளை, கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்பு பாகங்கள் தனித்தனியாக பிளாஸ்டிக் கவரில் பார்சலாக சுற்றி வைக்கப்பட்டிருந்தது. இதை பார்த்ததும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த உடல் உறுப்புகள் மனிதருடையதா அல்லது விலங்குகள் உடையதா என தெரிய வில்லை. இது குறித்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி நிர்வாகத்திற்கும், வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உடல் உறுப்பு பாகங்கள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. பிடிபட்ட தேனி நபர் ஏற்கனவே நரபலி வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டவர். இவர் மீது மாந்தரீக வேலையில் ஈடுபட்டு மோசடி செய்ததாகவும், வழக்குகள் பதிவாகி உள்ளது.

எனவே யாரையேனும் நரபலி கொடுத்து அவர்களது உடல் உறுப்புகளை விற்பனைக்காக கொண்டு சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. பிடிபட்ட சிவகங்கை மாவட்ட கார் யாருடையது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்கள் மீது ஏதேனும் குற்ற வழக்குகள் உள்ளதா? என சிவகங்கை மாவட்ட போலீசாரிடம் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Post

அடுத்தடுத்த நாளில் அடுத்தடுத்து கொலைகள்! அதிர்ச்சியில் தமிழக மக்கள்! பிடியை இறுக்குமா காவல்துறை?

Posted by - March 20, 2025 0
தமிழ்நாட்டில் கடந்த 2 நாளில் மட்டும் பட்டப்பகலில் நடந்த கொலை சம்பவங்களால் மக்கள் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். இதனால், எதிர்க்கட்சிகள் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர். தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற…

பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்குவது அதிமுக, விவசாயிகள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி – அதிமுக ட்வீட்

Posted by - December 28, 2022 0
அமைச்சர்கள் பெரியகருப்பன், சக்கரபாணி மற்றும் உயர் அதிகாரிகளுடனான ஆலோசனைக்கு பிறகு இந்த அறிவிப்பை வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின். பொங்கல் பரிசு தொகுப்பில் முழு கரும்பு வழங்கப்படும் என…

சனாதன தர்மம் என்றால் என்ன? அது சர்ச்சையாக்கப்பட்டது ஏன் ?

Posted by - September 6, 2023 0
சனாதன தர்மம் பற்றி பேச்சு தான் கடந்த இரண்டு நாட்களாக அரசியல் ரீதியான விவாதத்திற்குரிய முக்கிய விஷயமாக மாறி உள்ளது. இதனால் சனாதன தர்மம் என்றால் என்ன,…

நெல்லை அரசு மருத்துவமனை அருகே செவிலியர் உயிரோடு எரித்து கொலை- கணவர் போலீசில் சரண்

Posted by - May 5, 2023 0
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவருடைய மனைவி அய்யம்மாள் (வயது 45). இவர் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *