தேர்தல் வருதுல்ல… திட்டக்குடி பெண்களுக்கு அமைச்சரின் தீபாவளி கிஃப்ட்!

205 0

பொதுவாக பக்கா திமுக காரர்கள் தீபாவளிக்கு வாழ்த்துச் சொல்லி பழகமாட்டார்கள். ஆனால், தேர்தல் வருகிறது என்பதால் இந்தத் தீபாவளிக்கு அமைச்சர் சி.வெ.கணேசன் தனது திட்டக்குடி தொகுதி பெண்களுக்கு புடவையை தீபாவளி பரிசாகத் தந்து மறைமுகமாக வாழ்த்துச் சொல்லி வருகிறார்.

கடந்த சில தினங்களாக தனது தொகுதிக்கு உட்பட்ட மங்களூர் ஒன்றியம் மாங்குளம், கீழ் ஒரத்தூர், ஆக்கனூர், பாளையம், கீழ்செருவாய், இடைச்செருவாய், கோடங்குடி, பட்டூர் என கிராமங்களைச் சுற்றி வரும் கணேசன், ஒரு கையில் பெண்களிடம் மனுக்களை வாங்கிக் கொண்டு மறுகையில் அவர்களுக்கு புடவையை எடுத்து தீபாவளி கிஃப்ட்டாக தந்து வருகிறார்.

பொதுவாக பக்கா திமுக காரர்கள் தீபாவளிக்கு வாழ்த்துச் சொல்லி பழகமாட்டார்கள். ஆனால், தேர்தல் வருகிறது என்பதால் இந்தத் தீபாவளிக்கு அமைச்சர் சி.வெ.கணேசன் தனது திட்டக்குடி தொகுதி பெண்களுக்கு புடவையை தீபாவளி பரிசாகத் தந்து மறைமுகமாக வாழ்த்துச் சொல்லி வருகிறார்.

கடந்த சில தினங்களாக தனது தொகுதிக்கு உட்பட்ட மங்களூர் ஒன்றியம் மாங்குளம், கீழ் ஒரத்தூர், ஆக்கனூர், பாளையம், கீழ்செருவாய், இடைச்செருவாய், கோடங்குடி, பட்டூர் என கிராமங்களைச் சுற்றி வரும் கணேசன், ஒரு கையில் பெண்களிடம் மனுக்களை வாங்கிக் கொண்டு மறுகையில் அவர்களுக்கு புடவையை எடுத்து தீபாவளி கிஃப்ட்டாக தந்து வருகிறார்.சிரித்த முகத்துடன் புடவையை வாங்கிச் செல்லும் பெண்கள், “ஏய் உன்னோட புடவையைக் காட்டு… என்ன டிசைன்னு பார்க்கலாம்” என்று விசாரணைகளைப் போட, அமைச்சரைப் பின்தொடரும் ஆண்களோ, ‘நமக்கெல்லாம் ஒண்ணும் இல்லையா?’க்கும் என்பது போல் ஏக்கப் பார்வை பார்க்கிறார்கள்.திட்டக்குடியில் இருக்கும் ஜவுளிக்கடை முதலாளிகளோ, “ஏதோ, தீபாவளிக்குத்தான் கூடுதலா நாலு துணி மணி விற்கும் அதுக்கும் வேட்டு வைக்கிறாங்களா..?” என்று ஆதங்க அவலை மெல்கிறார்கள்.இதனிடையே, அமைச்சரின் புடவை கிஃப்ட் டெக்னிக் பெண்கள் மத்தியில் பேசப்படுவதைப் பார்த்துவிட்டு பக்கத்து தொகுதியான ரிஷிவந்தியம் திமுக எம்எல்ஏ.வானவசந்தம் கார்த்திகேயனும் புடவைப் பார்சலை தூக்க ஆரம்பித்திருக்கிறார். இவர் அமைச்சரை விட ஒருபடி மேலே போய், கோரிக்கை மனுக்களை வாங்க வருவதாக முன்னறிவிப்புக் கொடுத்துவிட்டு வீடு வீடாகச் சென்று புடவை கிஃப்ட்களை வழங்கி வருகிறார்.

Related Post

tvk

சென்னையால் வந்த வினை..! வெற்றிக்காக போராடும் ஆனந்த்?

Posted by - March 17, 2026 0
தமிழக வெற்றிக் கழகத்தில் என்.ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா இடையே வெடித்துள்ள அதிகார மோதல், விஜய்க்கு தலைவலியாக மாறியுள்ளதாக பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. TVK Vijay TN…
Gemini Generated Image 4cdtsc4cdtsc4cdt

தமிழகம் முழுவதும் என்டிஏ வேட்பாளர்களுக்கு தீவிர பிரச்சாரம் – அண்ணாமலை உறுதி!

Posted by - April 3, 2026 0
சட்டமன்ற  தேர்தலில், தமிழகம் முழுவதும் உள்ள என்டிஏ வேட்பாளர்களுக்காகப் பிரச்சாரம் செய்வதே தனது பணி என பாஜக தேசிய பொதுக்குழு அண்ணாமலை தெரிவித்துள்ளார். கேரள கண்ணூரில் செய்தியாளர்களிடம்…

‘செந்தில் பாலாஜி பதறுவது ஏன்?’ – கரூர் நெரிசல் விவகாரத்தில் அதிமுக கேள்வி

Posted by - October 2, 2025 0
சென்னை: ‘கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில் முன்னாள் அமைச்சரும், திமுக சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி பதறுவது ஏன்?’ என்று அதிமுக கேள்வி எழுப்பி உள்ளது.…

என்ன தொல்லை கொடுத்தாலும் தமிழக வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது: தென்காசியில் முதல்வர் பேச்சு

Posted by - October 29, 2025 0
தென்காசி: என்ன தொல்லை கொடுத்தாலும் தமிழக வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம் ஆய்க்குடி அருகே அரசு சார்பில் ரூ.1.020…
Generated Image November 17 2025 11 32AM

பிரசாந்த் கிஷோரிடம் இருந்து பாடம் கற்பாரா விஜய்?

Posted by - November 17, 2025 0
குஜராத் முதல்வராக இருந்த மோடியை நாட்டின் பிரதமராக உயர்த்த வியூகம் வகுத்தவர், பிஹாரில் நிதிஷ்குமார், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி, தமிழகத்தில் மு.க.ஸ்டாலின்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *