நாகலாந்தில் நிலச்சரிவு: ராட்சத பாறை உருண்டு விழுந்ததில் சுக்குநூறாக நசுங்கிய கார்கள்- வைரலாகும் வீடியோ

394 0

நாகலாந்தில் திமாபூர் மற்றும் கோஹிமா இடையே சுமோகெடிமா மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 29-ல் நேற்று மாலை ஏற்பட்ட நிலச்சரிவில் பெரிய பாறைகள் மலையில் இருந்து உருண்டு கார்கள் மீது விழுந்தது. இதில் இரண்டு கார்கள் முற்றிலுமாக நொறுங்கியதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். பலியானவர்களின் அடையாளம் காணப்பட்டு வருகிறது.Video: Giant Boulders Crush Cars After Landslide In Nagaland

ராட்சத பாறாங்கல் உருண்டு விழுந்து கார்கள் நசுங்கி சிதறிய வீடியோ பார்ப்பவர்களை பதைபதைக்க வைக்கச் செய்துள்ளது. இதுகுறித்து நாகாலாந்து முதல்வர் நெய்பியு பிரோ தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது:- திமாபூர் மற்றும் கோஹிமா இடையே இன்று (நேற்று) மாலை சுமார் 5 மணியளவில் தேசிய நெடுஞ்சாலையில் பாறை விழுந்ததில் 2 பேர் பலி மற்றும் 3 பேர் பலத்த காயம் உட்பட பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இடம் எப்போதும் “பகலா பஹார்” என்று அழைக்கப்படுகிறது. அதாவது, நிலச்சரிவுகள் மற்றும் பாறைகள் விழுவதற்கு பெயர் பெற்றது. காயமடைந்தவர்களுக்கு அவசர சேவைகள் மற்றும் தேவையான மருத்துவ உதவிகளை வழங்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் தலா 4 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்.

குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் எந்த சமரசமும் இருக்கக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Post

அப்படி நல்லா சொல்லுங்க சார்.. மக்களின் சிரமத்தை போக்க வங்கிகளுக்கு RBI போட்ட உத்தரவு…

Posted by - April 29, 2025 0
ஏடிஎம்-களுக்கு சென்று பணம் எடுக்கும் மக்களின் ஒரு முக்கிய பிரச்னையை சரி செய்ய, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது மக்களுக்கு மிகவும் தேவையான ஒரு…

ரூ.1,000 கோடிக்கு சொத்து குவித்த தாசில்தார் கைது

Posted by - June 30, 2023 0
பெங்களூரு : கர்நாடகத்தில் அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மீதான ஊழல், முறைகேடு, லஞ்ச புகார்களை விசாரிக்க லோக் அயுக்தா அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஊழல், லஞ்ச புகாரில்…

மத்திய பட்ஜெட் சிறு, குறு தொழில்களுக்கு எப்படி? : என்ன சொல்கிறார்கள் தொழிலாளர்கள்?

Posted by - February 1, 2025 0
 பட்ஜெட் அறிவிப்பின்படி, சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கான கடன் உச்சவரம்பு 10 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட்டில் வெளியாகியிருக்கும் அறிவிப்புகள் சிறு குறு தொழிலார்களுக்கு எந்த…

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து

Posted by - March 1, 2024 0
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 1) தனது 71வது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில் அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்…

வடமாநிலங்களில் நிலநடுக்கம்: பதற்றத்தில் தவித்த மக்கள்

Posted by - February 20, 2023 0
கவுகாத்தி : புவித்தட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதி, மேற்பரப்பில் அதிர்வுகள் உண்டாவது உண்டு. இதுதான் நில நடுக்கம். நமது நாட்டைப் பொறுத்தமட்டில், வடகிழக்கு பகுதி, அதிகபட்சம் நில…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *