நெல்லை அரசு மருத்துவமனை அருகே செவிலியர் உயிரோடு எரித்து கொலை- கணவர் போலீசில் சரண்

238 0

தூத்துக்குடி மாவட்டம்

கோவில்பட்டி அருகே உள்ள சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவருடைய மனைவி அய்யம்மாள் (வயது 45). இவர் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். இவர்கள் குடும்பத்துடன் பாளையங்கோட்டை அண்ணா நகரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து வந்தனர்.திண்டுக்கல்: அரசு மருத்துவமனை செவிலியர் அடித்துக் கொலை; போலீஸார் தீவிர  விசாரணை! | government hospital nurse killed by unknown persons in dindigul  - Vikatan

நேற்று காலை அய்யம்மாள் வழக்கம்போல் பணிக்கு சென்றார். இரவு 7 மணியளவில் பணி முடிந்து அவர் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தார். அவரை கணவர் பாலசுப்பிரமணியன் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு அழைத்து சென்று கொண்டிருந்தார். மருத்துவமனை அருகே உள்ள அண்ணாநகர் முதல் தெருவில் சென்றபோது, கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த பாலசுப்பிரமணியன் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். பின்னர் திடீரென அய்யம்மாளை கத்தியால் குத்திவிட்டு தான் வைத்திருந்த மண்எண்ணெய் பாட்டிலால் அவரது தலையில் ஓங்கி அடித்துள்ளார். அப்போது பாட்டில் உடைத்து அய்யம்மாள் உடலில் மண்எண்ணெய் கொட்டியது. உடனே பாலசுப்பிரமணியன் அவரை உயிரோடு தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது.

இதனால் அய்யம்மாளின் உடலில் தீப்பற்றி வேதனை தாங்க முடியாமல் அலறி துடித்தார். சிறிது நேரத்தில் அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவத்தில் பாலசுப்பிரமணியனுக்கும் லேசான தீக்காயம் ஏற்பட்டது. பின்னர் அவர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இறந்த அய்யம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

மேலும், நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிரமணியனை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் பாலசுப்பிரமணியன் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட அய்யம்மாளுக்கு வில்டன் இப்ராகிம், சிவராஜ், சிப்ரல் ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.

பாலசுப்பிரமணியன் குடும்பத்துடன் முஸ்லிம் மதத்துக்கு மாறி உள்ளார். அவர் தனது பெயரை அக்பர் இப்ராகிம் என்று மாற்றி உள்ளார். கணவன்-மனைவிக்கு இடையே தகராறு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் மீண்டும் இணைந்த அவர்கள் சில மாதங்களுக்கு முன்புதான் நெல்லை அண்ணா நகரில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர். இந்த நிலையில் குடும்ப தகராறில் மனைவியை கணவனே நடுரோட்டில் கத்தியால் குத்தியும், உயிரோடு எரித்தும் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Related Post

“மாப்பிள்ளைச் சம்பா சாப்பிட்டால், மாப்பிள்ளையாக இருக்கலாம் …” – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேச்சால் சட்டப்பேரவையில் சிரிப்பலை!

Posted by - March 22, 2023 0
மாப்பிள்ளை சம்பா சாப்பிட்டால் மாப்பிள்ளையாக இருக்கலாம்.! தங்க சம்பா சாப்பிட்டால் தங்கமாக இருக்கலாம் என அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தெரிவித்தார். வேளாண் நிதிநிலை தாக்கல் செய்த…

சென்னையில் உச்சகட்ட பதற்றம்…. குவிந்த போலீசார் |

Posted by - December 26, 2025 0
இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் இன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ எனப்படும் பள்ளிக் கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். முற்றுகை போராட்டத்தில்…

போராடும் ஆசிரியர்கள் மீது **ஞ்சா வழக்கு; மிரட்டிய போலீஸ்- வைரலாகும் ஆடியோ! அராஜகத்தின் உச்சம்!

Posted by - January 13, 2026 0
எக்மோர் ரயில் நிலையம் முன்பு என்னைப் பின்தொடர்ந்து கிட்டத்தட்ட 25 காவலர்கள் மற்றும் 4 சீருடை இல்லாத காவல் துறையினர், என்னைச் சுற்றி வளைத்தனர். சம வேலைக்கு…

சினிமாவை விட்டு விலகும் முடிவில் விஜய்? அப்போ கடைசி படம் இதுதானா! ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

Posted by - June 18, 2023 0
சினிமாவை விட்டு விலகும் முடிவில் விஜய்? அப்போ கடைசி படம் இதுதானா! ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டிருக்கும் விஜய், சினிமாவை…

திமுக கவுன்சிலர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது…!!

Posted by - April 13, 2023 0
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் ஐந்து வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த திமுக கவுன்சிலர் போக்சோ சட்டத்தின்  கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். திமுக நகரமன்ற உறுப்பினர்: கடலூர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *