படிக்கும் காலத்தில் இது தேவைதானா என எதிர்ப்பு- கல்லூரி காதல் ஜோடி திருமணம் செய்துவிட்டு தற்கொலை

278 0

திருப்பதி:

ஆந்திரா மாநிலம், அன்னமய்யா மாவட்டம், செட்டேவாரி பள்ளியை சேர்ந்தவர் 17 வயது இளம்பெண். லதிகம் கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது வாலிபர். இருவரும் புங்கனூரில் உள்ள தனியார் கல்லூரியில் இன்டர்மீடியட் 2-ம் ஆண்டு படித்து வந்தனர். கல்லூரியில் படிக்கும் போது இருவரும் நட்பாக பழகி வந்தனர்.தற்கொலை எண்ணத்துக்கான காரணம் என்ன? விடுபடுவது எப்படி? - BBC News தமிழ்

நட்பு காதலாக மாறியது. இவர்களது காதல் விவகாரம் அவர்களது பெற்றோருக்கு தெரிய வந்தது. கல்லூரியில் படிக்கும் காலத்தில் காதல் தேவைதானா என இருவரின் பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி திருப்பதி அருகே உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். மகன், மகளை காணாததால் அவர்களது பெற்றோர்கள் புங்கனூர் போலீசில் புகார் செய்தனர்.

பெற்றோர்கள் போலீசில் புகார் செய்ததை அறிந்த காதல் ஜோடி எப்படியாவது தங்களை பிரித்து விடுவார்கள் என எண்ணி கவலை அடைந்தனர். இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி திருப்பதி பீளேரு சோதனை சாவடி அருகே உள்ள வனப்பகுதிக்கு சென்றனர். அங்குள்ள மரத்தில் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

நேற்று மாலை வனப்பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் காதல் ஜோடி தூக்கில் தொங்குவதை கண்டனர். இது குறித்து பாக்ராபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தூக்கில் தொங்கியவர்களின் பிணங்களை மீட்டனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Post

ஒடிசாவில் இன்று சரக்கு ரெயில் தடம் புரண்டது

Posted by - June 5, 2023 0
ஒடிசாவில் கடந்த வெள்ளிக்கிழமை மூன்று ரெயில்கள் மோதி 275 பேர் உயிரிழந்தனர். சீரமைப்பு பணி முடிவடைந்து சுமார் 51 மணி நேரத்திற்குப் பின் பஹனாகா பகுதியில் தற்போது…

வாட்ஸ்-அப்பில் பயனர்களை கவரும் புதிய அப்டேட்கள்: அரட்டை செயலியின் தாக்கம் காரணமா?

Posted by - October 11, 2025 0
சென்னை: வாட்ஸ்-அப் செயலியில் பயனர்களை ஈர்க்கும் வகையிலான புதிய அப்டேட்களை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம். அது குறித்து பார்ப்போம். வாட்ஸ்-அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார்…

இனி டேட்டாவிற்கு பணம் கட்ட வேண்டாம்… புதிய பிளான்களை அறிமுகம் செய்த ஏர்டெல், ஜியோ…

Posted by - January 23, 2025 0
செல்போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், இனி டேட்டாவிற்கு பணம் செலுத்தாமல், வாய்ஸ் கால் மட்டும் பேசும் வகையில், புதிய பிளான்களை ஜியோ மற்றும் ஏர்டெல் அறிமுகம் செய்துள்ளன. செல்போன்…

வெப்பமயமாவதால் கடல் மட்டம் உயருகிறது- சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு ஆபத்து

Posted by - March 14, 2023 0
திருப்பதி: கடல் வெப்பநிலையை கணக்கிடுவது 1900ஆம் ஆண்டிலிருந்து தொடங்கியது. பல தசாப்தங்களாக இந்த வெப்பம் அதிகரித்து வருகிறது. 1901க்குப் பிறகு அது மேலும் மேலும் அதிகரித்தது. கடந்த…

அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, அகவிலைப்படி உயர்வு.. அதிரடி அறிவிப்பு

Posted by - April 23, 2024 0
அரசு ஊழியர்களின் ஓய்வூதியம், இறப்பு கிராஜூவிட்டி, பயணப்படி ஆகியவை 25 விழுக்காடு வரை உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. யூனியன் பிரதேசமான புதுச்சேரியில்  பணியாற்றும் அரசுப்பணியாளர்களுக்கு படித்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *