பள்ளியில் கூல் லிப் பயன்படுத்தும் மாணவர்கள் – நடவடிக்கை எடுக்க ஓபிஎஸ் வேண்டுகோள்..!!

174 0

சென்னையில் உள்ள பள்ளிகளில் கூல் லிப் உள்ளிட்ட போதை பொருட்கள் சர்வசாதாரணமாக கிடைப்பதாக வெளிவரும் செய்திகள் பேரதிர்ச்சி அளிப்பதாக தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார் .

இதுகுறித்து ஓ.பி.எஸ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

மனிதராகப் பிறத்தல் அரிது, அவ்வாறு பிறந்தாலும் கல்வியில் சிறந்து விளங்குதல் அதைவிட அரியது” என்பதற்கேற்ப, சிறுவர், சிறுமியர் பள்ளிக்கூடங்களில் பயின்று, கல்வியினையும், ஒழுக்கத்தினையும் பெற்று வந்தனர். ஆனால், கடந்த மூன்று ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் பள்ளிக்கூடங்கள் போதைக் கூடங்களாக மாறி வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கியக் காரணம் தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மை என்று சொன்னால் அது மிகையாகாது.

சென்னை, வியாசர்பாடி, கல்யாணபுரத்தில் உள்ள பள்ளியில் பயிலும் ஒரு சிறுமியின் பிறந்தநாள் பீர் பாட்டிலுடன் கொண்டாடப்பட்டதாக பத்திரிகையில் வந்துள்ள செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது. இந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் பள்ளி வளாகத்திலேயே ‘பீடி’ பிடிப்பதாகவும், ‘கூல் லிப்’ என்னும் போதைப் பொருள் அப்பள்ளியின் தரையில் சர்வசாதாரணமாக காணப்படுவதாகவும், இந்த போதைப் பொருள் பெங்களூரிலிருந்து வரவழைக்கப்பட்டு ஒரு பெட்டி 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும், வட சென்னையில் உள்ள பல பள்ளிகளில் போதைப் பொருள் நடமாட்டம் இருப்பதாகவும் பத்திரிகையில் செய்தி வந்துள்ளது.

மேற்படி பள்ளியில், பரிசோதனைக் கூடம் மற்றும் நூலகம் மூடப்பட்டு இருப்பதாகவும், பரிசோதனைக் கூடத்தில் புதிதாக வாங்கப்பட்டுள்ள மேசைகள் ஒன்றின்மீது ஒன்று அடுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், கணினி அறை அலங்கோலமாக இருப்பதாகவும், உயிரியல் பரிசோதனைக்கூட அறையில் தான் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் உட்கார்ந்து இருப்பதாகவும், கழிவறை சுகாதாரமற்ற நிலையில் உள்ளதாகவும், மாணவர்களுக்கு குடிநீர் கூட இல்லாத அவல நிலை நிலவுவதாகவும், காசு கொடுத்து குடிநீர் பருகக்கூடிய துர்ப்பாக்கிய நிலைமை நிலவுவதாகவும் கூறப்படுகிறது.

பள்ளியில் மிகப் பெரிய மைதானம் இருந்தும், விளையாட்டு ஆசிரியர் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் இல்லாததன் காரணமாக, மாணவ, மாணவியரை விளையாட்டில் ஈடுபடுத்த முடியாத சூழ்நிலை நிலவுவதாகவும் கூறப்படுகிறது. “ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம்” என்பதற்கேற்ப, தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகள் அனைத்திலும் இந்த அவல் நிலைதான் நீடிக்கிறது.

பள்ளிக்கூடங்களுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர் நியமனம், பராமரிப்பு, குடிநீர் வசதி போன்றவை இல்லை. அதே சமயத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் தலைவிரித்து ஆடுகிறது. பள்ளிக்கூடங்கள் மூலம் கல்வி அறிவு பெற்றால், நாடு முன்னேற்றமடைந்து, நாட்டு மக்கள் எல்லாச் செல்வங்களையும் பெற்று வளமுடன் வாழ்வார்கள். ஆனால், இன்று பள்ளிக்கூடங்கள் போதைக் கூடங்களாக மாறிக் கொண்டிருக்கின்றன. இது, தமிழ்நாட்டு இளைஞர்களை அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்லும் செயலாகும்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாக தனிக் கவனம் செலுத்தி, பள்ளிக்கூடங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவும், போதைப் பொருட்கள் நடமாட்டத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என ஓ.பி.எஸ் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

10 அமைச்சர்களின் துறை மாற்றம்.. எந்த அமைச்சர் என்ன துறை?

Posted by - December 14, 2022 0
Tamilnadu Ministers department | 10 அமைச்சர்களின் துறைகளில் மாற்றம் செய்யப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது தமிழ்நாட்டின் 10 அமைச்சர்களின் துறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு…

பண வரவு முதல் தொழில் முன்னேற்றம் வரை… சந்திராதி யோகத்தால் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 5 ராசிகள்!

Posted by - December 4, 2024 0
சந்திரன் தற்போது விருச்சிக ராசியில் நுழைந்துள்ளார். வியாழன் சந்திரனுக்கு அடுத்ததாக அமைந்துள்ளது. இதன் காரணமாக சந்திராதி யோகம் உருவாகியுள்ளது. இதனால் 5 ராசிக்காரர்களுக்கு நல்ல நன்மை உண்டாகப்போகிறது.…

10% காவல் அதிகாரிகளை தவிர அனைவருமே போதை பொருள் கடத்தலுக்கு உடந்தை – பகீர் கிளப்பிய டாக்டர் ராமதாஸ்..!!

Posted by - September 20, 2024 0
போதை பொருள் கடத்தலுக்கு 850 போலீஸ் அதிகாரிகள் உடந்தை என்ற செய்தி தவறு. காவல்துறையில் உள்ளவர்களில் 10 சதவிதம் தவிர அனைவரும் உடந்தை என பாட்டாளி மக்கள்…

அகத்தை சுத்தப்படுத்தும்! விஷத்தையே முறிக்கும்! அகத்தி கீரையை இந்த கறியுடன் மட்டும் சாப்பிடாதீர்கள்!

Posted by - January 8, 2024 0
சென்னை: அகத்தி கீரை நுரையீரலை பாதுகாக்கும் கீரையாகும். இதை யாரெல்லாம் சாப்பிடலாம், யாரெல்லாம் சாப்பிடக் கூடாது தெரியுமா? அகத்தையே சுத்தப்படுத்தும் கீரைதான் அகத்திக் கீரை என்பார்கள். இந்த…

பகுதிநேர ஆசிரியர்கள் கைது; ’’திமுகவின் துரோகத்துக்கு தேர்தலில் சரியான பாடம் புகட்டப்படும்’’- ராமதாஸ்

Posted by - December 11, 2024 0
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த திமுக, அவர்களுக்கு அளிக்கப்பட்ட எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. பணி நிரந்தரம் கோரி போராடிய பகுதிநேர ஆசிரியர்களை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *