முலாம்பழம்.. சர்க்கரை நோயாளியின் “சூப்பர்” சாய்ஸ் பழம்.. வெறும் வயிற்றில் முலாம்பழத்தை சாப்பிடலாமா?

475 0

சென்னை:

முலாம்பழத்தின் நன்மைகள் என்னென்ன தெரியுமா? முலாம்பழம் ஜூஸ் சாப்பிட்டாலே போதும், ஏகப்பட்ட உபாதைகள் தீரும்.

வைட்டமின் A, B, C, B1, B6 K, கால்சியம், மக்னீசியம், காப்பர், பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவற்றை தன்னுள் அடக்கி வைத்திருப்பது இந்த முலாம்பழம்.. உடல் சூட்டை தணிக்கக்கூடிய தன்மை இந்த பழத்துக்கு உண்டு.

இதிலுள்ள வைட்டமின் A உள்ளதால், வெள்ளை ரத்த அணுக்களின் உற்பத்தியையும் ஊக்குவிக்கிறது. அதுமட்டுமல்ல, இந்த வைட்டமின் A, கண் தொடர்பான பிரச்சனைகளை அண்ட விடாமல் காக்கிறது. முலாம்பழத்தில் வைட்டமின் C நிறைந்துள்ளதால், மாதவிடாய் நாட்களில் ஏற்படும் தசை பிடிப்பிலிருந்து விடுபட உதவுகிறது.. அத்துடன், அதிகப்படியான மாதவிடாய் பிரச்சனையும் சீராகும்.

முலாம்பழம்:

இந்த முலாம்பழத்தில், வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளதால், சருமத்தை கவசம் போல பாதுகாக்கிறது.. மிருதுவான சருமத்துக்கு துணை புரிகிறது. சிறுநீரகத்தில் கற்கள் இருந்தாலும் அதை வெளியேற்றும் சக்தி இந்த பழத்துக்கு உண்டு..முலாம்பழம்.. சர்க்கரை நோயாளியின் "சூப்பர்" சாய்ஸ் பழம்.. வெறும் வயிற்றில்  முலாம்பழத்தை சாப்பிடலாமா? | Do you know the Excellent Health Benefits in  Muskmelon and Amazing ...

மன அழுத்தத்தை குறைத்து, ஆழ்ந்த தூக்கத்துக்கு வழி செய்கிறது இந்த பழம். முலாம்பழத்தின் சதையுடன், அதன் விதைகளையும் சேர்த்து சாப்பிடுவார்கள்.. உடலில் உஷ்ணம் குறைய வேண்டுமானால், இந்த விதை கலந்த பழத்துடன், சீரகப்பொடி சிறிது சேர்த்து கொதிக்க வைத்து, வடிகட்டி குடித்தாலே போதும்.. மிகச்சிறந்த சிறுநீர் பெருக்கியாக இது திகழ்கிறது.

நார்ச்சத்து:

நார்ச்சத்து அதிகமாக உள்ளதால், வயிற்றை சுத்தப்படுத்தி, செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது.. குடல் பாதுகாப்பையும் உறுதி செய்கிறது. உடல் சூட்டையே தணிப்பதுடன், மூல நோய்க்கும் நிவாரணத்தை தருகிறது இந்த முலாம்பழம்..

நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கக்கூடிய இந்த பழம், கல்லீரல் கோளாறுகளையும், வயிறு உபாதைகளையும் தீர்க்கக்கூடியது. வயிற்றுப்புண், வாய்ப்புண்களில் அவதிப்படுபவர்கள், இந்த பழத்தில் சிறிது தேன் கலந்து சாப்பிட்டு வந்தாலே எளிதில் குணம் பெறலாம், கர்ப்பிணிகளுக்கு இந்த பழம் மிகவும் நல்லது.. இதை பழத்தை சாப்பிடுவதால், குழந்தையின் மூளை வளர்ச்சி நன்றாக இருக்குமாம்..

நீர் சத்துக்கள்:

நீர்ச்சத்து நிறைந்த இந்த பழம் சாப்பிடும்போது, உடலில் தண்ணீர் சத்து பற்றாக்குறை தீர்கிறது.. ஆனாலும், இதை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், வயிறு உபாதைகள் வரலாம் என்கிறார்கள்.. நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் பிரச்சனைகளை அண்ட விடாமல் செய்கிறது இந்த பழம்.. காரணம், இந்த முலாம்பழத்தில் பொட்டாசியம் அதிகமாக உள்ளதால், ரத்த அழுத்தத்தை குறைப்பத்தில் பெரும் பங்காற்றுகிறது. அத்துடன், ரத்த கட்டிகள் ஏற்படாமலும் தடுக்கிறது.. மொத்தத்தில் இதயத்துக்கு நன்மை தரக்கூடிய பழமாக இந்த முலாம்பழம் விளங்குகிறது.

முலாம்பழத்தில் கரோட்டினாய்டு அதிகமாக உள்ளதால் புற்றுநோயை தடுக்கவும், நுரையீரல் புற்றுநோய் தாக்கும் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது. அதுமட்டுமல்ல உடலில் புற்றுநோய் உண்டாக்கும் செல்களை அடியோடு அழிக்கவும் இப்பழம் உதவுகிறது.

முலாம்பழம்:

கலோரிகளும், கொழுப்புகளும் மிக குறைவாக உள்ளதுடன், நீர்ச்சத்து நிறைந்த பழம் என்பதால், உடல் எடையை குறைக்க விரும்புவர்கள், இந்த பழத்தை கட்டாயம் உபயோகிக்கலாம்.. முலாம் பழத்தில் உள்ள கொலாஜென் என்ற புரதக்கலவையானது, சருமம் போன்ற திசுக்களின் செல்களை பாதுகக்கிறது. அத்துடன், உடலில் ஏற்படும் காயங்களை வேகமாக குணப்படுத்தவும், தோலின் உறுதித்தன்மையைக் காக்கவும் கொலாஜென் உதவுகிறது.

Related Post

சர்க்கரை நோயால் உங்க உயிருக்கு ஆபத்து வராமல் தடுக்க… ‘இந்த’ 6 விஷயங்கள நீங்க கட்டாயம் செய்யணுமாம்!

Posted by - November 18, 2023 0
உலகளவில் அதிகரித்து வரும் சுகாதார பிரச்சனைகளில் முதன்மையாக இருப்பது சர்க்கரை நோய். இந்தியா சர்க்கரை நோயாளிகளின் தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது. அந்தளவிற்கு நாளுக்கு நாள் சர்க்கரை நோயால்…

அடுத்த ரவுண்டுக்கு ரெடியா.. புயல்? உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. கனமழை கன்ஃபார்ம்

Posted by - October 22, 2025 0
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, 12 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமான வலுவடையக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வடமாவட்டங்களில்…

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

Posted by - September 12, 2023 0
அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது குடும்பத்தினருடன் தொழில்முறையில் தொடர்புள்ளவர்கள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளது.. அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது குடும்பத்தினருடன் தொழில்முறையில் தொடர்புடையவர்கள்…

பள்ளியில் கூல் லிப் பயன்படுத்தும் மாணவர்கள் – நடவடிக்கை எடுக்க ஓபிஎஸ் வேண்டுகோள்..!!

Posted by - August 24, 2024 0
சென்னையில் உள்ள பள்ளிகளில் கூல் லிப் உள்ளிட்ட போதை பொருட்கள் சர்வசாதாரணமாக கிடைப்பதாக வெளிவரும் செய்திகள் பேரதிர்ச்சி அளிப்பதாக தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார் .…

முருகன் மாநாட்டால் திமுக அதிர்ச்சி – அதிமுக வாய் திறக்காது ஏன்? அடுக்கடுக்கான கேள்வி

Posted by - June 23, 2025 0
பாஜகவின் முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்களின் செயல்பாட்டினை, திமுகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பாஜகவின் முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்களின் செயல்பாடு,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *