விஜய் பிரசாரம்; தவெக-விற்கு செல்லுமிடமெல்லாம் சிக்கல் தான்; கரூரில் கருணை காட்டாத காவல்துறை

185 0

தவெக-விற்கு செல்லும் இடமெல்லாம் சிக்கல் தான் என்று சொல்லும் அளவிற்கு, விஜய்யின் கரூர் பிரசாரத்திலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எல்லாம் அனுமதி பிரச்னை தான். என்னவென்று பார்க்கலாம்.

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். வார இறுதி நாட்களில் மட்டும் பிரசாரம் செய்து வரும் அவருக்கு, அந்தந்த மாவட்டங்களில் அனுமதி கிடைப்பது பெரிய பாடாக இருக்கிறது. தற்போது, கரூர் பிரசாரத்திலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

கரூரில் தவெக கேட்ட இடங்களுக்கு கட்டையை போட்ட காவல்துறையினர்

தமிழக வெற்றக் கழகத்தின் தலைவர் விஜய், வார இறுதி நாட்களில் பிரசாரம் மேற்கொண்டுவரும் நிலையில், நாளை, அதாவது சனிக்கிழமை அவர் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

இந்நிலையில், கரூரில் அவர் பிரசாரம் செய்வதற்காக லைட் ஹவுஸ் கார்னர், உழவர் சந்தை, கரூர் பேருந்து நிலைய மகோகரா கார்னர் ரவுண்டானா ஆகிய இடங்களில் ஏதேனும் ஒன்றை ஒதுக்குமாறு காவல்துறையிடம் அனுமதி கேட்டுள்ளனர். இதையடுத்து, லைட் ஹவுஸ் கார்னரை ஒதுக்குவதாக முதலில் தெரிவித்த காவல்துறை, பின்னர் அந்த இடத்தை ஒதுக்க முடியாது என மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பலிக்காத தவெக பொதுச்செயலாளர் ஆனந்தின் முயற்சி

இதையடுத்து, பிரசாரத்திற்கான இடத்தை தேர்வு செய்து, அதற்கு அனுமதி பெறுவதற்காக, தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் கரூர் சென்றுள்ளார். அங்கு சென்ற அவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையாவை சந்தித்து மனு அளித்துள்ளார். அதில், விஜய் பிரசாரம் மேற்கொள்ள லைட் ரோஸ் கார்னர், கரூர் உழவர் சந்தை ஆகிய இடங்களை ஒதுக்குமாறு கோரப்பட்டிருந்தது.

ஆனால், பிரசாரக் கூட்டத்திற்கு வருவோரின் எண்ணிக்கை, எத்தனை வாகனங்கள் வரும் என்பன உள்ளிட்ட விவரங்களை தெரிவித்தால் மட்டுமே, அதை வைத்து இடத்தை ஒதுக்கி அனுமதி வழங்க முடியும் என காவல்துறை தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து, காவல்துறையினர் கேட்ட விவரங்களை நிர்வாகிகளிடம் கொடுத்தனுப்புவதாகக் கூறி, அங்கிருந்து சென்றள்ளார் ஆனந்த்.

தவெக தொண்டர்கள் குழப்பம்

இந்நிலையில், தற்போது வரை விஜய் பிரசாரம் செய்யும் இடம் எது என்பது இறுதி செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும், தவெக கேட்ட மூன்று இடங்களிலும் காவல்துறையின் அனுமதி கிடைக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

நாமக்கல்லில் விஜய் பிரசாரம் மேற்கொள்ளும் இடம் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கரூரில் இதுவரை எந்த இடம் என்று தெரியாததால், அப்பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

எனினும், இன்று மாலைக்குள், விஜய் எங்கு பேச இருக்கும் இடம் குறித்து உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது என்னடா சோதனை என்பதுபோல், விஜய் பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் சிக்கல் ஏற்படுவதால், தவெக நிர்வாகிகளும், தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related Post

%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95

”PR பில்டப்-லாம் போதும் CM சார்” விஜயால் மீண்டும் திமுகவுடன் கைகோர்த்த அதிமுக – தவெக மீது அட்டாக்

Posted by - May 30, 2026 0
ADMK On CM Vijay: தமிழ்நாட்டையும், உங்களை நம்பி ஓட்டு போட்ட மக்களின் பாதுகாப்பையும் கொஞ்சம் கவனத்தில் கொள்ளுங்கள் என முதலமைச்சர் விஜயை அதிமுக சாடியுள்ளது. ADMK…
rajini admk

விஜய்க்கு எதிராக ரஜினியை களமிறக்கும் இபிஎஸ் & கோ.. அமைதி காக்கும் திமுக!

Posted by - March 17, 2026 0
ரஜினிகாந்த் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி கையில் எடுத்துள்ளது. அந்த அணியில் இடம் பெற்றுள்ள எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உள்ளிட்டோர் கண்டனம்…
Generated Image February 09 2026 3 52PM

தூத்துக்குடி மாணவி கொலை; திமுக எம்எல்ஏ சமாதானம் பேசியது ஏன்.?

Posted by - March 12, 2026 0
தொடரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தமிழகத்தில் கடந்த சில நாட்களில் அடுத்தடுத்து நடைபெற்று வரும் பாலியல் சம்பவங்கள் மக்களை அதிர்ச்சி அடையசெய்துள்ளது. கடந்த 2 தினங்களுக்கு முன்பாக…
Generated Image January 19 2026 11 05AM

தினகரனை வரவேற்கிறேன்” – இபிஎஸ்

Posted by - January 21, 2026 0
சென்னை: “தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ள மரியாதைக்குரிய டிடிவி தினகரனை வரவேற்கிறேன்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், டிடிவி…
vijay 2

விஜய் உதயசூரியனுக்கு ஓட்டு போடச் சொன்னாரா? வைரலாகும் வீடியோ- நடந்தது என்ன?

Posted by - March 31, 2026 0
திமுக சின்னம் உதய சூரியனுக்கு ஓட்டுப்போடச் சொன்ன தவெக விஜய்? வைரலாகும் வீடியோ- நடந்தது என்ன? தவெக தலைவர் விஜய், தனது தேர்தல் பிரச்சாரத்தில் உதய சூரியனுக்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *