விஸ்வரூபம் எடுத்த கோமியப் பிரச்னை – மன்னிப்பு கோரிய திமுக எம்.பி.! என்ன நடந்தது?

218 0

அந்த சொல்லை உள்நோக்கத்துடன் பயன்படுத்தவில்லை, தவறான பொருள் தருவதால், வெளிப்படையாக மன்னிப்புக் கேட்பதாக கூறிய திமுக எம்.பி.

5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததற்காக திமுக எம்.பி. செந்தில்குமார் வெளிப்படையாக மன்னிப்பு கோரினார்.

“கோ மூத்ரா” மாநிலங்களில் பாஜக வெற்றி

டெல்லியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டு பேசிய, தருமபுரி திமுக எம்.பி. செந்தில்குமார் 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்து பேசினார். அப்போது, பொதுவாக “கோ மூத்ரா” மாநிலங்கள் என்று அழைக்கப்படும் இந்தி பேசும் மாநிலங்களில் மட்டுமே பாஜக வெற்றி பெற முடியும் என்று கூறினார். ஆனால், தென்மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானாவில் பாஜகவால் வெற்றி பெற முடியாது என்று பேசினார்.

வெடித்த சர்ச்சை – மன்னிப்பு கோரி எம்.பி.

திமுக எம்.பி. செந்தில்குமாரின் பேச்சுக்கு பாஜக உட்பட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர் பேசிய வீடியோவும் சமூக வலைதளங்களில் கடும் கண்டனத்துடன் பகிரப்பட்டது. இந்நிலையில், தனது கருத்துக்கு திமுக எம்.பி. செந்தில்குமார் வெளிப்படையாக மன்னிப்பு கோரினார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,  5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து கூறிய போது, தவறான பொருள் அளிக்கும் வகையில், ஒரு சொல்லைப் பயன்படுத்தி விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.அந்த சொல்லை உள்நோக்கத்துடன் பயன்படுத்தவில்லை என்று திமுக எம்.பி. செந்தில்குமார் விளக்கம் அளித்துள்ளார். மேலும், அது தவறான பொருள் தருவதால், வெளிப்படையாக மன்னிப்புக் கேட்பதாக செந்தில்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“திமுக எம்.பி.யை கண்டித்து மு.க.ஸ்டாலின்”

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, பொதுவெளியில் கருத்துகளை கூறும் போது, நாகரிகத்தையும், பண்பாட்டையும் காக்கும் வகையில் நடந்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார். மேலும், செந்தில்குமாரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாகக் கண்டித்ததாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related Post

தலைநகரில் வேகமெடுக்கும் கொரோனா- ஒரே நாளில் 1,603 பேருக்கு தொற்று உறுதி

Posted by - April 21, 2023 0
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகமெடுத்து வருகிறது. பல்வேறு மாநிலங்களிலும் முகக்கவசம் கட்டாயம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின்…

உலகின் மிகவும் மாசுபட்ட 50 நகரங்களில் 39 நகரங்கள் இந்தியாவில் உள்ளன: ஆய்வறிக்கையில் தகவல்

Posted by - March 14, 2023 0
புதுடெல்லி: உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்கள் பட்டியலை சுவிட்சர்லாந்தின ஐக்யுஏர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 131 நாடுகளில், 30,000க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு சாரா கண்காணிப்பு அமைப்புகளிடமிருந்து…

ரூ.500 கோடி சொத்து மதிப்பு கொண்ட அல்லு அர்ஜுன் திடீர் கைது.. என்ன நடந்தது..?!

Posted by - December 13, 2024 0
ஹைதராபாத்தில் டிசம்பர் 4ஆம் தேதி நடைபெற்ற அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 திரைப்பட வெளியீட்டு விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தில் ஒரு பெண் இறந்தது தொடர்பாக,…

ராஜஸ்தானில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 4.3ஆக பதிவு

Posted by - June 7, 2023 0
ராஜஸ்தா் மாநிலம், பிகானேர் பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.3ஆக பதிவாகியுள்ளது. பிகானேர் மேற்கே 685 கிமீ தொலைவில் 10 கிமீ ஆழத்தில்…

வியாழக்கிழமை சாய்பாபா வரலாறு….

Posted by - September 11, 2025 0
ஆரம்ப வாழ்க்கை சாய்பாபாவின் பிறந்த தேதி மற்றும் பிறந்த இடம் தெளிவாக தெரியவில்லை. 1838-ல் பிறந்தார் என்று நம்பப்படுகிறது. அவரது மதம், குடும்பம் பற்றிய விபரம் மர்மமாகவே…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *