ஹார்ட் அட்டாக் வந்தாலும் இந்த கார் உங்கள காப்பாத்தும்… அசத்தலான எலெக்ட்ரிக் கார்!

245 0

முழுக்க முழுக்க எலெக்ட்ரிக் காரான இதில், ஓட்டுநரின் அறிகுறிகளைக் கண்காணிக்கக்கூடிய சென்சார்கள் மற்றும் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

சீனாவைச் சேர்ந்த பிரபல ஸ்டார்ட் அப் நிறுவனமான பியான்கா, எலெக்ட்ரிக் கார்களை தயாரித்து வருகிறது. தற்போது இந்த நிறுவனத்தை பிரபல ரெனால்ட் நிறுவனம் வாங்கி நடத்தி வருகிறது. இந்நிறுவனம் தயாரித்த தனது முதல் காரை வரும் 2023ம் ஆண்டு முதல் காலாண்டில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. ஜிடி ஓப்பரஸ் 1 என பெயரிடப்பட்டுள்ள புதிய எலெக்ட்ரிக் காரானது, ஏற்கனவே சந்தையில் உள்ள சூப்பர் பிரீமியம் கார்களான பிஎம்டபிள்யூ ஏஜிஸ் 7 சிரீஸ், போர்ஷே ஏஜிஸ், டேக்கான் ஆகியவற்றிற்கு போட்டியாக 2024ம் ஆண்டு முதல் விற்பனைக்கு வர உள்ளது.

ஹார்ட் அட்டாக் மானிட்டர்:

முழுக்க முழுக்க எலெக்ட்ரிக் காரான இதில், ஓட்டுநரின் அறிகுறிகளைக் கண்காணிக்கக்கூடிய சென்சார்கள் மற்றும் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. டிரைவரிடம் ஏதாவது வித்தியாசமான அறிகுறிகள் தென்பட்டால், அதில் உள்ள செயற்கை நுண்ணறிவு அவரிடம் பேச ஆரம்பிக்கும். அதற்கு ஓட்டுநர் எந்தவிதமான பதிலையும் தரவில்லை என்றால், ஏதோ விபரீதம் நிகழ்வதை செயற்கை நுண்ணறிவு புரிந்து கொள்ளும். உடனடியாக காரின் இயக்கத்தை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு சாலை ஓரமாக பத்திரமாக பார்க் செய்யும். ஸ்மார்ட் காக்பிட்டில் உள்ள ன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் மருத்துவர்களை தொடர்பு கொண்டு தகவல் கொடுக்கும்.ரெனால்ட் நிறுவனத்தின் தெற்காசியத் தலைவரும், பியான்கா நிறுவனத்தில் தலைமை பொறுப்பில் உள்ளவருமான சோ வெய்மிங் கூறுகையில், “எங்களுடைய கார் மூலமாக ஒரு உயிரைக் காப்பாற்ற முடிந்தாலும் அது போதுமானது. நாங்கள் ஆம்புலன்ஸை உருவாக்கவில்லை. மக்களுக்கு உதவக்கூடிய ஸ்மார்ட்டான பீரிமியம் கார்களை உருவாக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.சீனாவின் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்திடம் கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றிய இவர், கடந்த ரெனால்ட் நிறுவனத்தில் இணைந்தார். தற்போது இவர் தலைமையில் தான் பியான்கா நிறுவனம் சூப்பர் பிரீமியம் கார்களை தயாரித்து வருகிறது. சீனாவின் ஸ்டார்அப் நிறுவனமான பியான்கா இதுவரை முதலீட்டாளர்களிடம் இருந்து $1 பில்லியனுக்கும் அதிகமான முதலீடுகளை திரட்டியுள்ளது. 3 முதல் 5 மாடல்களைக் கொண்ட சூப்பர் பிரீமியம் கார்களை, ஆண்டுக்கு சுமார் ஒரு லட்சம் யூனிட்கள் வரை தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.எலக்ட்ரிக் கார்

சீனாவில் விற்பனையாகுமா?

சீனா சூப்பர் பிரீமியம் கார்களின் மிகப்பெரிய சந்தையைக் கொண்டுள்ளது. இங்குள்ள மில்லியன் கணக்கானவர்களை குறிவைத்தே எலெக்ட்ரிக் காரின் சூப்பர் பிரீமியம் மாடலை சந்தைப்படுத்த உள்ளதாக பியான்கா நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவைப் பொறுத்தவரை ஓபஸ் 1 அதிகம் விற்பனையாகும் சூப்பர் பிரீமியம் எலெக்ட்ரிக் காராக உள்ளது. இது 898,000 யுவானில் ($123,000) தொடங்கி 1.8 மில்லியன் யுவான் வரை விற்பனையாகி வருகிறது.

மேலும் இளம் தலைமுறையினர் இடையே பட்ஜெட் ப்ரெண்ட்லி கார்களுக்கு நல்ல வரவேற்புள்ளது. அதேபோல் சீனாவில் 35 வயதுக்குட்பட்ட இளம் தலைமுறையினர் தான் அதிகம் எலெக்ட்ரிக் கார்களை விரும்பி வாங்குகின்றனர். 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் தங்களது உடலை ஆரோக்கியத்துடன் பாதுகாத்து வரும் நிலையில், அவர்கள் ஹார்ட் அட்டாக்கில் இருந்து காப்பாற்றக்கூடிய சூப்பர் பிரீமியம் காரை விரும்புவார்களா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக அமைந்துள்ளது.

Related Post

Google Pay-க்கு குட்பை? தூக்க மாட்டோம்னு சொல்லிட்டு சுந்தர் பிச்சை பார்த்த வேலை.. இனிமேல் ஒன்னு ஒன்னா மாறும்!

Posted by - June 5, 2024 0
கூகுள் நிறுவனம் அதன் டிஜிட்டல் வாலட் (Digital Wallet) ஆன கூகுள் வாலட்டை (Google Wallet) இந்தியாவில் அறிமுகப்படுத்தியதில் இருந்தே.. “அப்போ இந்தியாவுல கூகுள் பே ஆப்பின்…

சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி 24-ந்தேதி சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீரை வெளியேற்றுகிறது ஜப்பான்

Posted by - August 22, 2023 0
ஜப்பானில் 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், ஒரு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் விளைவாக ஏற்பட்ட சுனாமியினால் பெரும் கடல் அலைகள் ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலையத்தின்…

மெக்சிகோவில் 122 டிகிரி வெயில்- வெப்ப அலை தாக்கி 100 பேர் பலி

Posted by - June 30, 2023 0
மெக்சிகோ: மெக்சிகோவில் இந்த மாத தொடக்கத்தில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இது படிப்படியாக உயர்ந்து 122 டிகிரி வெயில் கொளுத்தியது. கடந்த 3 வாரங்களாக…

BUNKER-ல் பதுங்கிய பயந்தாங்கோலி.. பாக். பிரதமரை ஓடவிட்ட இந்தியா! ஷெபாஸ் ஷெரீப் கப் சிப்..

Posted by - May 9, 2025 0
பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப், ராணுவ தளபதி முனீர் ஆகியோர் வீடுகளின் அருகே இந்தியா குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பகல்ஹாமில் தீவிரவாதிகள் நடத்திய…

குடிபோதையில் ஈபிள் கோபுரத்தின் உச்சியில் படுத்து உறங்கிய அமெரிக்கர்கள்

Posted by - September 1, 2023 0
பிரான்ஸ், பாரிஸிற்கு சுற்றுலா வந்த இரண்டு அமெரிக்கர்கள் ஈபிள் கோபுரத்தின் உச்சியின் படுத்து உறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஈபிள் கோபுரம் பொதுவாக காலை 9மணிக்கு சுற்றுலா…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *