ஆப்பு வைக்கும் ஆன்லைன் “LOAN APP”கள்!

194 0

தமிழ்நாட்டில் லோன் ஆப் செயலியை பயன்படுத்தி சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவதாக , காவல்துறை சமீபத்தில் ஒரு அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டிருக்கிறார்கள்… ஆன்லைன் கடன் செயலி மூலம் ஏற்படும் சைபர் குற்றங்களையும் , சைபர் கொள்ளையர்களிடமிருந்து நாம் தப்பிக்கும் வழிமுறைகள் குறித்தும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இப்போ இருக்க Lifestyle-ல நாம என்னதான் நிறைய சம்பாரிச்சாலும் மாத கடைசியில account zero balance ஆகாம பாதுகாக்குறதே பெரிய விஷயமா இருக்கு… அப்படி செலவுக்கு கையில காசு இல்லாதப்போ நம்மள்ள பலரும் அடுத்து தேடி போற விஷயம்தான் ஆன்லைன் லோன் ஆப்.

இந்த லோன் ஆப்.. எதிர்காலத்துல உங்களுக்கே ஆஆப்பா மாறும் சொன்ன உங்களால நம்பமுடியுதா ? ஆமா, கடந்த வருஷம் மட்டும் தமிழ்நாட்டுல online loan app scam சம்பந்தமா 9873 வழக்கும் , 2025-ஓட கடைசி மூன்று மாதத்துல 3834 கேசும் பதிவாகியிருக்கு…. மக்களோட பணத்தேவைய பூர்த்தி செய்யுறங்க பேருல நடந்துட்டுவர்ர இந்த மிகப்பெரிய ஸ்கேம்ல நீங்களும் சிக்காம இருக்கனும்னா இந்த தொகுப்பை முழுசா பாருங்க..

Primelen , candycash-னு நம்ம ஊருல நூற்றுக்கும் மேற்பட்ட லோன் ஆப்கள் இருக்கு… இதுல 100 ரூபாய்ல இருந்து இரண்டு லட்சம் வரைக்கும் நமக்கு கடன் கொடுக்கப்படுது… ஆனா,  நூறு , ஆயிரம்னு கடன் வாங்குறவங்க பெரிய அளவுல இந்த ஸ்கேம்ல மாட்டுறது கிடையாது… பத்தாயிரத்திற்கும் மேல பெரிய தொகைய கடன் பெற்றவங்கதான் சைபர் கொள்ளையர்கள்கிட்ட அதிக அளவுல சிக்குறாங்க..

playstore-ல இருந்து லோன் ஆப் download செஞ்சு install பண்ணதும்…  நம்மளோட phone contacts , messages , call, whatsapp ஆப்னு எல்லாத்துக்கும் access allow கொடுத்தான், நாம ஆப்குள்ளயே போகமுடியும்… இப்டி கொடுத்ததும் லோன் வாங்குறதுக்கு நம்மளோட Pan card , adhar card details கேப்பாங்க…  நாம கொடுத்த Proof verify பண்ணதும் நாம கேட்ட amount-அ கொடுத்துடுவாங்க…

ஆனா , இந்த amount-அ  நாம திருப்பி செலுத்தவேண்டுடிய due டேட் வரும்போதுதான் அதிகப்படியான வட்டி பணம் கேட்டு அந்த ஆப்ல இருந்து ஒருத்தர் கால் பண்ணி நம்மள மிரட்டுவாங்க… அவங்களோட மிரட்டல கண்டுக்காம நாம அலட்சியப்படுத்துனா… அடுத்த நிமிஷமே நம்மளோட Phone-அ ஹேக் செஞ்சு நம்மளோட போட்டோட தவறானவிதமா மார்பிங் செஞ்சு நம்மளோட சொந்தகாரங்களுக்கு எல்லாம் அனுப்பிருவாங்க..

இப்படிதான் சைபர் கொள்ளையர்கள் காலங்காலமா வலைவிரிச்சு அப்பாவி மக்கள emotional-அ blackmail பண்ணி பணத்தை கொள்ளையடிச்சுட்டு வராங்க… இந்த கொள்ளை கும்பல்கிட்ட நாம மாட்டிகிட்டோம்னா அடுத்து நாம என்ன பண்ணலாங்குற இப்போ பார்க்கலாம்.

ஏஐ நோக்கி நாம வளர்ச்சியடிஞ்சுட்டு வர்ர இதே சூழல்லாதான் நாம நினச்சுகூட பார்க்கமுடியாத அளவுக்கு சைபர் குற்றங்களும் அதிகரிச்சுட்டே வருது… தெளிந்த சிந்தனையும் , தைரியமும் இருந்தாபோதும் சைபர்கொள்ளையர்கள்கிட்ட இருந்து நாம் ஈசியா தப்பிச்சிறலாம்.

Related Post

தீபாவளி ஸ்பெஷலாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்கள்- முழு விவரம் இதோ

Posted by - November 1, 2023 0
தீபாவளி ஸ்பெஷல் தொலைக்காட்சிகளில் எல்லா மாதங்களும் சீரியல்கள் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகின்றன. ஆனால் ஏதாவது ஒரு ஸ்பெஷல் தினம் வந்துவிட்டால் போதும் படங்களாக ஒளிபரப்பி விடுவார்கள். அப்படி…

அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள், வாகன வசதி- ஊர் பொதுமக்கள் அறிவிப்பு

Posted by - April 13, 2023 0
சிவகிரி: ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ளது மாரப்பம்பாளையம். இந்த ஊரில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த…

கார்டை செருகுவதற்கு முன்பாகவே ரூ.50 ஆயிரத்தை அள்ளிக்கொடுத்த ஏ.டி.எம். எந்திரம்

Posted by - July 13, 2023 0
நாகர்கோவில்: குமரி மாவட்டம் குளச்சலைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 54). ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் நேற்று காலை 10 மணிக்கு குளச்சல் மெயின் ரோட்டில் தூய…

கல்வி விருது விழா – விஜய்யுடன் மாஸ்டர் போஸ் கொடுத்த மாணவர் – வைரலாகும் போட்டோ

Posted by - June 17, 2023 0
விஜய்யுடன் போட்டோ எடுத்துக்கொள்ளும்போது மாஸ்டர் ஸ்டைலில் போஸ் கொடுத்த மாணவரின் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் தொகுதி வாரியாக…

ஏழைகளின் தலையில் இடி! ரிசர்வ் வங்கி நகைக்கடன் விதிகள் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆவேசம்

Posted by - May 22, 2025 0
தங்க நகை அடமானம் வைப்பதில் பல புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்து சாமானியர்களின் தலையில் இடியை இறக்கி இருக்கிறது ரிசர்வ் வங்கி என்று அமைச்சர் தங்கம் தென்னரசு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *