கட்சி சேனல் நடத்துபவர்கள் எல்லாம் என்னிடம் பேச வேண்டாம்.

309 0

கேள்வி எழுப்பிய செய்தியாளரை நோக்கி, “நீங்க எந்த சேனல்…நீங்க எந்த சேனல்” என அண்ணாமலை கேள்வி எழுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சென்னை விருகம்பாக்கத்தில் பெண் காவலரிடம் திமுக நிர்வாகி தவறாக நடந்துகொண்ட பின்னர் 2 நாள்வரை வழக்கு பதிவு செய்யாமல் இருக்கும் அளவுக்கு சட்ட ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. காவல்துறை மீது அழுத்தம் உள்ளதா என்ற கேள்வி எழுகிறது. கமிஷனர் இதனை தெளிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அப்போது அண்ணாமலை தலைமையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் முன்வைத்த குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.  “கட்சியிலிருந்து வெளியே செல்வோரை வாழ்த்தி வழி அனுப்புகிறோம். என்னைப் பற்றிய எந்த விமர்சனமாக இருந்தாலும் என்னுடைய பதில் மவுனம்தான். பாஜக ஒரு ஜனநாயக கட்சி. என்னை 10 பேர் விமர்சித்தால் அது நல்லதுதான்” என  அண்ணாமலை பதிலளித்தார்.

மேலும், தொடர்ந்து கேள்வி எழுப்பிய செய்தியாளரை நோக்கி, “நீங்க எந்த சேனல்…நீங்க எந்த சேனல்” என கேள்வி எழுப்பினார். மேலும், கட்சி சேனல் நடத்துபவர்கள் எல்லாம் என்னிடம் பேச வேண்டாம். சும்மா நீங்கள் டிவியில் போட்டால் பயந்துவிடுவோமா?  இந்த வேலையெல்லாம் என்னிடம் வேண்டாம் என்று காட்டமாகக் கூறினார்.இதனால் செய்தியாளர்களுக்கும் அண்ணாமலைக்கு இடையே வாக்குவாதம் உண்டானது.

Related Post

INDI

இண்டியா கூட்டணியை விட்டு விலகும் திமுக? – இரட்டிப்பு மகிழ்ச்சியில் பாஜக

Posted by - June 5, 2026 0
ஜூன் 8-ம் தேதி டெல்​லி​யில் கூடும் இண்டியா கூட்​டணி கூட்டத்தை புறக்​கணிப்​ப​தாக அதிரடி​யாக அறி​வித்​திருக்​கிறது திமுக. காங்கிரஸின் துரோகத்​தால் மனக்​காய​முற்​றிருக்​கும் தொண்டர்களின் உணர்​வுக்கு மதிப்​பளிக்​கும் வித​மாக இந்த…
qwertyujkl

ரஜினியை திமுக மிரட்டியது இப்படித்தான்..

Posted by - March 18, 2026 0
ரஜினி கட்சி ஆரம்பிக்கப் போகிறேன் என சொன்ன உடனேயே கிட்டதட்ட 18 சதவிகித ஓட்டு இருப்பது தெரிய வந்தது. இதனைப் பார்த்து திமுகவுக்கு பயம் வந்து விட்டது…

அதிகரித்த டிமாண்ட்.. எங்களுக்கு இத்தனை சீட்டு வேணும்.. திமுக-விடம் திருமா கேட்பது இதுதான்!

Posted by - July 17, 2025 0
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் அதிக தொகுதிகளை ஒதுக்க கோரிக்கை வைக்க திருமாவளவன் முடிவு செய்துள்ளார். தமிழ்நாட்டு அரசியல் களம் நாளுக்கு நாள்…
annamalai

Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக

Posted by - June 6, 2026 0
தமிழ்நாட்டில் அண்ணாமலையும் புதிய கட்சி தொடங்க உள்ள நிலையில், பாஜக-வின் வளர்ச்சி கேள்விக்குறியாகி உள்ளது. இந்தியா முழுவதும் பாஜக-வின் ஆதிக்கம் இருந்தாலும் தமிழ்நாடு அவர்களுக்கு சிம்மசொப்பனமாகவே திகழ்ந்து…

செந்தில் பாலாஜியை காப்பாற்ற முதல்வர் கரூர் சென்றார் – நயினார் நாகேந்திரன்

Posted by - October 17, 2025 0
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் செந்தில் பாலாஜியை காப்பாற்றவே முதலமைச்சர் கரூருக்கு சென்றதாக நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் என்ற…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *