annamalai

Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக

57 0

தமிழ்நாட்டில் அண்ணாமலையும் புதிய கட்சி தொடங்க உள்ள நிலையில், பாஜக-வின் வளர்ச்சி கேள்விக்குறியாகி உள்ளது.

இந்தியா முழுவதும் பாஜக-வின் ஆதிக்கம் இருந்தாலும் தமிழ்நாடு அவர்களுக்கு சிம்மசொப்பனமாகவே திகழ்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் பாஜக-வை வளர்க்க அவர்களது வழக்கமான பாணிக்கு மாற்றாக கட்சியில் இருந்து மாநில தலைமைக்கு கொண்டு வரப்பட்டவர்கள் தமிழிசை சவுந்தர்ராஜன், முருகன், அண்ணாமலை ஆகியோரின் தலைமைக்கு பிறகு கட்சியின் வளர்ச்சி வேறு மாதிரி இருந்தது.

அண்ணாமலையால் பாஜக அதிர்ச்சி:

குறிப்பாக, தமிழ்நாட்டில் பாஜக-வை கீழ்மட்டத்தில் வளர்த்ததில் அண்ணாமலையின் பங்கு மிகவும் முக்கியமானது. ஆனால், இன்று பாஜக-வில் இருந்து விலகி தனி இயக்கம் ஒன்றை தொடங்கியுள்ளார். அண்ணாமலை பாஜக-வில் இருந்து விலகியிருப்பது பாஜக-வின் டெல்லி தலைமைக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

அண்ணாமலை தனி இயக்கத்தை தொடங்கியிருப்பதுடன் வரும் தேர்தலில் அரசியல் கட்சியாக போட்டியிடுவோம் என்று அறிவித்துள்ளார். அவர் அறிவித்துள்ள சூழலில் பாஜக-வில் இருந்து அண்ணாமலையின் ஆதரவாளர்கள் அடுத்தடுத்து விலகி அவரது இயக்கத்தில் இணைந்துள்ளனர். தற்போது வரை சுமார் 8 லட்சம் பேர் இணைந்துள்ளனர்.

படுமோசமான நிலையில் பாஜக:

அண்ணாமலை திடீரென கட்சியில் இருந்து விலகியிருக்கும் சூழலில், அவர் வேறு ஒரு சின்னத்தில் போட்டியிட உள்ள நிலையில் பாஜக-வும், தாமரை சின்னமும் அதளபாதாள நிலைக்கு போவது உறுதியாகியுள்ளது. இதை எப்படி ஈடு செய்யலாம்? மீண்டும் அண்ணாமலை போன்ற ஒரு முகத்தை எப்படி பாஜக-வில் உருவாக்கலாம்? என்று டெல்லி தலைமை மிகவும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.

தமிழக அரசியலில் பாஜக-வின் மற்றொரு அணியாக அண்ணாமலை களமிறங்குகிறார் என்று பலரும் அதேசமயம் விமர்சித்து வருகின்றனர். இருப்பினும் அவரது கட்சியில் பாஜக-வினர் பலரும் இணைந்து வரும் நிலையில், பாஜக-வின் வளர்ச்சி என்பது தமிழ்நாட்டில் கேள்விக்குறியாகி உள்ளது.

சவாலாக மாறும் தமிழகம்:

திமுக – அதிமுக ஆகிய பழமையான திராவிட கட்சிகளுக்கு மிகப்பெரிய சவாலாக இந்த தேர்தலில் விஜய்யின் தவெக உருவெடுத்துள்ளது. இந்த சூழலில், அண்ணாமலையும் களமிறங்கினால் திமுக – அதிமுக – விஜய் – அண்ணாமலை – நாம் தமிழர் என 5 முனைப் போட்டியை பாஜக சந்திக்க நேரிடும். அண்ணாமலை தனது தனிப்பட்ட செல்வாக்கை மேலும் வளர்ப்பதற்காக பாஜக மீதுள்ள மதசாயம் தான் புதியதாக தொடங்க உள்ள கட்சி மீதும் விழுந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பார் என்று கருதப்படுகிறது.

ஏனென்றால், சிறுபான்மையினர் வாக்குகளை கவர வேண்டும் என்றால் அதற்கு மதச்சார்பற்ற கொள்கையையே கட்சிகள் கையில் எடுக்கும். அதே வியூகத்தை அண்ணாமலையும் கையில் எடுக்க உள்ளார். அண்ணாமலையின் விலகல் மோடி, அமித்ஷா உள்ளிட்ட டெல்லி தலைமைக்கு அதிர்ச்சியை அளித்தாலும், தமிழ்நாட்டில் அண்ணாமலையால் ஓரங்கட்டப்பட்ட பாஜக-வின் சில நிர்வாகிகளுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.

புதிய தலைமை?

நயினார் நாகேந்திரன் தலைமையின் கீழ் அதிமுக கூட்டணியுடன் களமிறங்கிய பாஜக கடந்த சட்டமன்ற தேர்தலில் 27 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரே ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. இந்த சூழலில், நயினாருக்கு பதிலாக விரைவில் புதிய தலைமையையும் பாஜக தேடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post

அதிமுக ஆட்சியை காப்பாற்றியது மத்திய பாஜக அரசுதான்: பழனிசாமி தகவல்

Posted by - September 16, 2025 0
சென்னை: அதி​முக ஆட்​சியை காப்​பாற்​றியது மத்​திய பாஜக அரசு​தான். அதற்கு நன்​றி​யுடன் இருக்​கிறோம் என்று அண்ணா பிறந்​த​நாள் விழா பொதுக்​கூட்​டத்​தில் பழனி​சாமி தெரி​வித்​துள்​ளார். அதி​முக சார்​பில் அண்​ணா​வின் 117-வது…

அமைச்சர் முத்துசாமியுடன் விவாதம் நடத்த தயார்.. சவாலுக்கு சம்மதம் சொன்ன அன்புமணி!

Posted by - October 29, 2025 0
திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் குறித்து அமைச்சர் முத்துசாமியுடன் விவாதம் நடத்த தயார் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று…

என்ன தொல்லை கொடுத்தாலும் தமிழக வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது: தென்காசியில் முதல்வர் பேச்சு

Posted by - October 29, 2025 0
தென்காசி: என்ன தொல்லை கொடுத்தாலும் தமிழக வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம் ஆய்க்குடி அருகே அரசு சார்பில் ரூ.1.020…
Gemini Generated Image mdnoecmdnoecmdno

குற்றவாளி வீட்டில் பிரியாணி சாப்பிட்ட ‘சார்’ சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார் – பழனிசாமி உறுதி

Posted by - April 9, 2026 0
குற்றவாளி வீட்டில் பிரியாணி சாப்பிட்ட ‘சார்’ அதிமுக ஆட்சியில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார் என்று சென்னையில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கூறினார். தேர்தல் அறிவிக்கப்பட்ட…

விஜய் பிரசாரம்; தவெக-விற்கு செல்லுமிடமெல்லாம் சிக்கல் தான்; கரூரில் கருணை காட்டாத காவல்துறை

Posted by - September 26, 2025 0
தவெக-விற்கு செல்லும் இடமெல்லாம் சிக்கல் தான் என்று சொல்லும் அளவிற்கு, விஜய்யின் கரூர் பிரசாரத்திலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எல்லாம் அனுமதி பிரச்னை தான். என்னவென்று பார்க்கலாம். 2026…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *