சென்னை மக்களை வாட்டி எடுக்கும் புதுவித வைரஸ் காய்ச்சல்

270 0

சென்னை:

சென்னை மக்களை வைரஸ் காய்ச்சல் ஒன்று பாடாய் படுத்திக் கொண்டிருக்கிறது. சளி மற்றும் வரட்டு இருமலில் தொடங்கும் இந்த காய்ச்சல் கடுமையான உடல் வலியையும் கூடவே அழைத்து வருகிறது. காய்ச்சல் வந்துவிட்டால் எழுந்து உட்கார முடியாத அளவுக்கு தலைவலி, இருமல் ஆகியவை தொடர்ச்சியாக இருந்து கொண்டே இருக்கிறது.

அதனுடன் கை, கால் மூட்டு வலி உள்ளிட்டவையும் சேர்ந்து கொண்டு எப்போதும் படுத்தே இருக்க வேண்டும் என்பது போன்ற உணர்வையே ஏற்படுத்துகின்றன. இதுவரை இல்லாத வகையில் இந்த ஆண்டு பனி காலத்தில் கொசு உற்பத்தி சென்னையில் மிக அதிகமாக உள்ளது.chennai flu fever, குழந்தைகளை பாதிக்கும் ஃப்ளூ வைரஸ் காய்ச்சல்.. சென்னையில்  நிரம்பும் மருத்துவமனைகள்! - more number of children infected by h1n1 flu  virus fever spread in chennai city - Samayam Tamil
அதிகாலையில் அதிக அளவிலான பனிப்பொழிவு இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. கொசுக்கள் மூலமாக டைபாய்டு, டெங்கு போன்ற காய்ச்சல் பரவும் நிலையில் புழு வைரஸ் என்ற புதுவித வைரஸ் தொற்றும் பரவி மக்களை காய்ச்சலில் தள்ளிக் கொண்டிருக்கிறது. சென்னை மட்டுமன்றி புறநகர் பகுதிகளிலும் இந்த வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவுகிறது.

கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்தே வைரஸ் காய்ச்சலின் பாதிப்பு இருந்து வருவதாக டாக்டர் ஒருவர் தெரிவித்தார். இதனால் ஒவ்வொரு நாளும் சிறிய கிளினிக்குகள் கூட நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றன. தினமும் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற சராசரியாக முப்பது பேர் வரை வந்து செல்வதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.

இதன் காரணமாக தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது அரசு மருத்துவமனைகளிலும் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்தே காணப்படுகிறது.

இந்த காய்ச்சல் தொடர்பாக டாக்டர்கள் கூறும் போது வீட்டில் ஒருவருக்கு வந்துவிட்டால் அடுத்தடுத்து அனைவரையும் முடக்கி போடும் வகையில் இந்த வைரஸ் காய்ச்சல் வீரியமாக உள்ளது என்று தெரிவித்தனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர் வீடுகளில் இருந்து இருமும் போது துணியால் மூடிக்கொள்ள வேண்டும் என்றும் இல்லையென்றால் உடனே வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும் சளி பாதிப்பு ஏற்பட்டு காய்ச்சலில் கொண்டு போய் விட்டு விடும் எனவும் டாக்டர்கள் எச்சரிக்கிறார்கள்.

வழக்கமாக காய்ச்சல் தலைவலி வந்தால் மூன்று நாட்களில் சரியாகிவிடும். ஆனால் இந்த காய்ச்சல் சரியாவதற்கு 15 நாட்கள் வரை ஆகிறது. இந்த 15 நாட்களும் காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகும் நபர்கள் இதுவரை இல்லாத அளவுக்கு உடல் சோர்வை சந்திக்க நேரிடுகிறது. மூக்கடைப்பு ஏற்பட்டு சுவாசிப்பதற்கும் சிரமமான நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

இந்த சளித்தொல்லை சிலருக்கு அதிகமாகி நுரையீரலில் போய் சளி கெட்டியாக தேங்கி விடுகிறது. இது இரவு நேரத்தில் தூக்கத்தையும் கெடுத்து விடுகிறது. இது போன்ற நேரங்களில் நெபுலேசர் வழியாக மருந்தை செலுத்தி சளியை கரைக்க வேண்டிய கட்டாயமும் ஏற்படுவதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.

காய்ச்சல் பாதிப்பு அதிகமாகும் போது, சிலருக்கு ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையும் திடீரென குறைந்து விடுகிறது. இது போன்ற பாதிப்புக்குள்ளாகும் நபர்களை ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. எனவே லேசான சளி தொல்லை மற்றும் இருமல் ஏற்படும் போதே டாக்டர்களிடம் சென்று உடலை பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என்பதே மருத்துவர்களின் அறிவுரையாக உள்ளது.

சளி பிரச்சினை ஏற்பட் டால் மருந்து கடைகளில் சென்று டாக்டர் சீட்டு இல்லாமல் மாத்திரைகளை வாங்கி உட்கொள்வது நல்லது அல்ல என்றும் டாக்டர்கள் கூறுகிறார்கள். இது போன்ற நேரங்களில் உடலில் இருக்கும் சளியை வெளியேற்றவே மருந்து மாத்திரைகளை எடுக்க வேண்டும்.

மருந்து கடைகளில் நாமாகவே வாங்கி சாப்பிடும் மாத்திரைகள் சளியை உடலுக்குள்ளேயே தேங்கச் செய்து விடும். இது நாளடைவில் இருமலை அதிகப்படுத்தி மூச்சு விடுவதற்கும் சிரமத்தை ஏற்படுத்திவிடும்.

எனவே தற்போதைய சூழலில் காய்ச்சல், சளிக்கு டாக்டர்களிடம் உரிய பரிசோதனை செய்த பிறகே மருந்து மாத்திரைகளை சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை தெரிவித்து உள்ளனர். மருந்து மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிட்ட பிறகும் காய்ச்சல் சரியாகவில்லை என்றால் ரத்த பரிசோதனை செய்ய டாக்டர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

இதனால் ரத்த பரிசோதனை கூடங்களிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்த காய்ச்சல் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று டாக்டர்களிடம் கேட்ட போது, வெளி உணவுகளை தவிர்க்க வேண்டும் என்றும் பனி சீசன் முடியும் வரையில் குளிச்சியான காய் மற்றும் பழங்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

Related Post

டாஸ்மாக் ஊழலை எதிர்த்து பாஜக போராட்டம்.. அண்ணாமலை, தமிழிசை கைது…

Posted by - March 17, 2025 0
டாஸ்மாக் ஊழல் தொடர்பாக இன்று பாஜகவினர் போராட்டம் நடத்தும் நிலையில், அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை…

கார்த்திகை தீபத்திருவிழா மகா தேரோட்டம்: பக்தர்கள் பரவசம்

Posted by - December 3, 2022 0
ஒருபுறம் ஆண்களும் மறுபுறம் பெண்களும் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். பக்தர்கள் கரும்பு தொட்டில் அமைத்து மாட வீதியை வலம் வந்து நேர்த்தி கடன் செலுத்தினர். திருவண்ணாமலை…

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் நாளை உருவாகிறது- திங்கட்கிழமை புயலாக மாறும்

Posted by - May 6, 2023 0
சென்னை: தமிழகத்தில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் கோடை வெயில் கொளுத்திய நிலையில் கடந்த 10 நாட்களாக பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில்…

கரூர் துயரம்: உயிரிழந்தோர் குடும்பங்களுடன் வீடியோ காலில் பேசி ஆறுதல் கூறிவரும் விஜய்!

Posted by - October 7, 2025 0
கரூர்: கரூரில் கடந்த செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தத்…

தன்னைத் தானே 8 முறை சாட்டையால் அடித்துக் கொண்ட அண்ணாமலை – நூதன போராட்டம்!

Posted by - December 27, 2024 0
“எங்களை நாங்களே வருத்திக்கொண்டு போராட இருக்கின்றோம். எனக்கு நானே சாட்டையடித்து கொள்ளும் போராட்டம் நடத்த போகின்றேன். என் இல்லத்திற்கு வெளியில் நின்று சாட்டையடித்து கொள்ள போகின்றேன்.” தமிழக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *