ஜோதிடம் பலிக்காததால் ஆத்திரம் : ஜோதிடரை கொலை செய்த வழக்கில் பெண்மணி உட்பட இருவர் கைது

165 0

ஜோதிடர் ஜான் ஸ்டீபன் கொலை வழக்கில் கட்டிமாங்காடு பகுதியைச் சேர்ந்த கலையரசி மற்றும் நெல்லை கருங்குளத்தை சேர்ந்த நம்பிராஜனை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே ஜோதிடம் பலிக்காததால் ஜோதிடரை கொலை செய்த வழக்கில் பெண்மணி உட்பட இருவர் கைதுசெய்யப்பட்டனர்.

ஆசாரிப்பள்ளத்தைச் சேர்ந்த ஜான் ஸ்டீபன் ஜோதிடம் பார்த்து வந்தார். கடந்த 8-ஆம் தேதி இவரது மனைவி விஜயகுமாரி வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, ஜான் ஸ்டீபன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். தகவலறிந்து வந்த காவல் துறையினர் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடற்கூராய்வில் ஜான் ஸ்டீபன் கொலை செய்யப்பட்டது உறுதியானது.ஜோதிடர் ஸ்டீபன், நம்பிராஜன், கலையரசி

இதைத்தொடர்ந்து ஜான் ஸ்டீபன் கொலை வழக்கில் கட்டிமாங்காடு பகுதியைச் சேர்ந்த கலையரசி மற்றும் நெல்லை கருங்குளத்தை சேர்ந்த நம்பிராஜனை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.அதில், கலையரசி பிரிந்துபோன தனது கணவருடன் சேர்ந்து வாழ ஜோதிடர் ஸ்டீபனை அணுகியுள்ளார். அவர் கூறிய பரிகாரத்தை செய்த பிறகும் கணவருடன் சேர்ந்து வாழ முடியவில்லை என்று தெரிகிறது.மேலும், தான் கட்டணமாக செலுத்திய ஒன்பதரை லட்சம் ரூபாயை ஸ்டீபன் திருப்பித் தர மறுத்ததால் முகநூல் மூலம் பழகிய நம்பிராஜனுடன் சேர்ந்து ஸ்டீபனை, துணியால் கழுத்தை இறுக்கியும், தரையில் அடித்தும் கொலை செய்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து கலையரசி மற்றும் நம்பிராஜனை காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

Related Post

வல்லூர் அனல் மின் நிலையத்தில் டர்பன் வெடித்து திடீர் தீ விபத்து-500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

Posted by - August 12, 2023 0
பொன்னேரி: மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் தேசிய அனல் மின் கழகமும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமும் இணைந்து கூட்டு நடவடிக்கையாக வல்லூர் அனல்…

போதையால் சீரழிந்த THALAPATHY VIJAY-உடன் நடித்த நண்பன் போதையால் உள்ளே தள்ளிய போலீஸ் – நடந்தது என்ன?

Posted by - June 23, 2025 0
போதைப் பொருள் பயன்படுத்திய குற்றத்திற்காக நடிகர் ஸ்ரீகாந்த் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ஸ்ரீகாந்த். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மதுபான விடுதியில் மோதல்…

சரணடையும் நாளிலேயே ஜாமினை பரிசீலிக்க வேண்டும் – திமுக எம்எல்ஏ மகன், மருமகள் மனுவிற்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Posted by - January 25, 2024 0
சரணடையும் நாளில் இருந்து ஜாமின் வழங்க பரிசீலிக்க வேண்டும் என எம்எல்ஏ இ.கருணாநிதியின் மகன், மருமகளும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளனர்.…

ஊதுவத்தி கம்பெனியில் ரூ.10 கோடி பொருட்கள் நாசம்- வானில் இருந்து விழுந்த எரி கற்களால் தீ விபத்து

Posted by - April 19, 2023 0
வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம் ராமநாயக்கன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வாசு. இவர், தெக்குப்பட்டு பகுதியில் ஊதுவத்தி தொழிற்சாலை பெரிய அளவில் நடத்தி வருகிறார். இந்த தொழிற்சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை…
trihy

திருச்சி செவிலியர் உயிரிழப்புக்கு காரணம் என்ன.? வெளியான ஆய்வறிக்கையில் திடீர் ட்விஸ்ட்- நடந்தது என்ன.?

Posted by - June 3, 2026 0
Trichy nurse death Investigation report : திருச்சியில் செவிலியர் உயிரிழப்பு விவகாரத்தில் அறுவை சிகிச்சையின் போது தரமற்ற மருந்தை பயன்படுத்தியதே காரணம் என ஆய்வறிக்கையில் தகவல்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *