திண்டுக்கல்: குப்பையில் வீசப்பட்ட பெண் சிசுக்கள்; நாய்கள் குதறிய அவலம் – நடந்தது என்ன?!

231 0

திண்டுக்கல், மேட்டுப்பட்டி காளியம்மன் கோயில் அருகே மாநகராட்சி சார்பில் குப்பைத் தொட்டி வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், நேற்று காலையில் அந்தக் குப்பைத் தொட்டியை நாய்கள் சூழ்ந்து நின்று கடித்துக் குதறி சண்டையிட்டன.போலீஸார் விசாரணை

அப்போது துப்புரவுப் பணிக்காக அந்தப் பகுதிக்கு தூய்மைப் பணியாளர்கள் வந்தனர். அவர்கள் குப்பைத் தொட்டியிலிருந்து இரண்டு நாய்கள் எதையோ கடித்து இழுத்து கவ்விக்கொண்டு ஓடுவதையும், மேலும் சில நாய்கள் அதைப் பிடுங்கவும் சண்டையிட்டன.பெண் சிசுக்கொலை: மதுரை அருகே கள்ளிப்பால் ஊற்றி குழந்தையை கொன்றதாக பெற்றோர்,  தாத்தா கைது - BBC News தமிழ்

இறைச்சிக் கழிவுகளுக்காக நாய்கள் சண்டையிடுகின்றன என நினைத்து அந்த நாய்களைத் தூய்மைப் பணியாளர்கள் விரட்டினர். பின்னர் அருகே சென்று பார்த்தபோது குப்பைத் தொட்டிக்குள் பலத்த காயங்களுடன் இரட்டைப் பெண் சிசுக்களின் உடல்கள் இருப்பதும், அதில் ஒரு சிசுவின் தலை இல்லாமல் இருப்பதையும் அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.

பொதுமக்கள் இது குறித்து திண்டுக்கல் தெற்கு போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் நிகழ்விடத்துக்கு வருவதற்குள் குப்பைத் தொட்டியில் இரட்டைப் பெண் சிசுக்களின் உடல்கள் கிடப்பது குறித்த தகவல் அந்தப் பகுதியில் காட்டுத்தீபோல் பரவியது.

இதனால் சிசுக்களின் உடல்களைப் பார்ப்பதற்காக அந்தப் பகுதியில் பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டனர். விரைந்து வந்த போலீஸார், குப்பைத் தொட்டியை சூழ்ந்து நின்ற பொதுமக்களைக் கலைந்து செல்ல வைத்தனர். பின்னர் பெண் சிசுக்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

சிசுக்கள் போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இரட்டைப் பெண் சிசுக்கள் குறைப் பிரசவத்தில் பிறந்திருப்பதும், சிசுக்களின் உடலை யாரோ சாக்குப்பையில் போட்டு குப்பைத் தொட்டியில் வீசிச் சென்றதும் தெரியவந்தது. மேலும், சிசுக்களில் ஒன்றின் தலையை நாய்கள் தூக்கிச் சென்றதும் தெரியவந்தது.

கூடிய மக்கள் மேலும் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீஸார் விசாரித்துவருகின்றனர். அந்த வீடியோ பதிவில் அதிகாலையில் ஒரு பெண் சாக்குப்பையுடன் குப்பைத் தொட்டி அருகே வருவதும், பின்னர் குப்பைத் தொட்டிக்குள் அந்தச் சாக்குப்பையை வீசிச் செல்லும் காட்சிகளும் பதிவாகியிருந்தன. ஆனால், அந்தக் காட்சிகளில் பெண்ணின் முகம் சரியாகப் பதிவாகவில்லை. குப்பையில் வீசப்பட்ட சிசுக்களை நாய் குதறிய சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Post

வங்காளதேசம் அருகே மிதிலி புயல் கரையைக் கடந்தது: வானிலை மையம் தகவல்

Posted by - November 18, 2023 0
சென்னை: வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிதிலி புயலாக வலுப்பெற்றது. கடந்த 14-ம் தேதி வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு…

”தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளா… மக்களை ஏமாற்றும் பட்ஜெட்…” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

Posted by - March 20, 2023 0
தமிழக பட்ஜெட்டை புறக்கணித்து வெளியே வந்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். தமிழ்நாடு பட்ஜெட் மக்களை ஏமாற்றும் மின் மினிப்பூச்சி பட்ஜெட் என எதிர்க்கட்சி…

விஜய் ஆண்டனியின் ஹிட்லர்.. திரை விமர்சனம் இதோ!

Posted by - September 28, 2024 0
தனா இயக்கத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள ஹிட்லர் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இதில் ரியா சுமன் மற்றும் கௌதம் மேனன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.…
Generated Image November 22 2025 5 37PM

TN Rain Alert: கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில் மழை? மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

Posted by - November 22, 2025 0
TN Weather Update Today: தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல். தெற்கு அந்தமான் கடல் பகுதியில்…

சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுக்கணுமா? அப்ப இந்த ஆரோக்கியமான உணவுகளை குறைவாக சாப்பிடுங்க…!

Posted by - October 25, 2023 0
சிறுநீரக கற்கள், அல்லது சிறுநீரக கால்குலி, சிறுநீரகங்களில் உருவாகக்கூடிய வலிமிகுந்த கனிம குவிதல் ஆகும். கால்சியம், ஆக்சலேட் மற்றும் யூரிக் அமிலம் போன்ற சிறுநீரில் உள்ள சில…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *