திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் ரூ.2½ லட்சம் லஞ்ச பணத்துடன் சிக்கிய அதிகாரி மீது வழக்குப்பதிவு

256 0

திருப்பூர்:

திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிலேகா தலைமையில் போலீசார் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலகங்களில் பணம் அதிகமாக புரளும் என்பதை கருத்தில் கொண்டு இந்த ரகசிய சோதனை நடைபெற்றது.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அலுவலகத்தில் கணக்கு பிரிவில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அந்த அறையில் இருந்த துணை வட்டார வளர்ச்சி அதிகாரி (கணக்கு) லோகநாதன் மேஜையில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது. மொத்தம் ரூ.2 லட்சத்து 48 ஆயிரத்து 200 இருந்தது.

அந்த பணத்துக்கான கணக்கு விவரங்களை லோகநாதனிடம் கேட்டனர். அவரிடம் எந்தவித விவரமும் இல்லை. இதைத்தொடர்ந்து கணக்கில் வராத பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிலேகா கூறும்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கணக்கு பிரிவில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 48 ஆயிரத்து 200, துணை வட்டார வளர்ச்சி அதிகாரியான லோகநாதனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடந்து முடிந்த அரசு திட்டப்பணிக்கான காசோலையை ஒப்பந்ததாரர்களுக்கு லோகநாதன்தான் வழங்கி வந்துள்ளார். அந்த காசோலையை வழங்குவதற்கு ஒப்பந்ததாரர்களிடம் இருந்து லோகநாதன் லஞ்சம் பெற்றிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

Related Post

இன்னும் 2 ஆண்டுகளில் சந்திரயான்-4 ஏவப்படும்: நிலவில் உள்ள மணல், கற்களை பூமிக்கு எடுத்துவர புதிய திட்டம்

Posted by - November 22, 2023 0
சென்னை: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தயாரித்து அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் ‘விக்ரம்’ லேண்டர் கடந்த ஆகஸ்ட் 23-ந்தேதி வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. அடுத்த கட்டமாக…

தமிழக முதல்வர் – ட்ரெண்டிங் ஹாஸ்டாக்குடன் வாழ்த்து சொன்ன பிரபலங்கள்..!!

Posted by - March 1, 2024 0
தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 71 ஆவது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார். இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நேரிலும்,தொலைபேசி வாயிலாகவும் வாழ்த்துக்கள்…
Generated Image February 09 2026 9 54AM

டாஸ்மாக் கடைகள் இயங்காது.! மதுப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த அறிவிப்பு

Posted by - February 9, 2026 0
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் மது விற்பனை நடைபெற்று வரும் நிலையில், மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் இன்று டாஸ்மாக் கடைகள் 3 மணி நேரம் திறக்கப்படாது…

ரேஷன் அரிசி இல்லாதபோது ஃபேஷன் ஷோ எதுக்கு? செவ்வாய்க்கு செங்கல்வராயன் ஏன்? பார்த்திபன் ஆதங்கம்

Posted by - December 7, 2023 0
சென்னை: சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து நடிகர் பார்த்திபன் ஆதங்கத்துடன் எக்ஸ் பதிவில் கருத்து வெளியிட்டுள்ளார். இதுகுறித்து பார்த்திபன் கூறியிருப்பதாவது: நேற்று மக்களின் நிலையில்லா பரிதாப…

ரூ. 200 கோடி.. பிரம்மாண்ட லுக்.. தஞ்சாவூருக்கு ஏர்போர்ட் வருவது உறுதியானது.. எங்கே தெரியுமா?

Posted by - November 29, 2023 0
சென்னை: இந்திய ஏர்போர்ட் அத்தாரிட்டி அமைப்பு தஞ்சாவூரில் விமான நிலையம் அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த விமான நிலையம் எப்படி இருக்கும் என்ற தகவலும் தற்போது வெளியாகி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *