நோயெதிர்ப்பு சக்தி பலவீனமா இருக்கா? மழை வந்தாலே சளி பிடிக்குதா? அப்ப இந்த டீயை அடிக்கடி செஞ்சு குடிங்க..

287 0

சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. என்ன தான் சூரியன் கண்ணில் தென்பட்டாலும், திடீரென்று காலநிலை மாறி கன மழையும் பெய்து வருகிறது. இப்படி காலநிலை சட்டென்று மாறிக் கொண்டே இருப்பதால், நிறைய பேர் சளி, காய்ச்சல், ஜலதோஷம் போன்றவற்றால் அவதிப்படுவார்கள். பலவீனமான நோயெதிர்ப்பு சக்தியைக் கொண்டிருந்தால் தான் இம்மாதிரியான பிரச்சனையை அதிகம் சந்திக்க நேரிடும்.

பொதுவாக மழைக்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தி பலவீனமாக இருக்கும். எனவே மழைக்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஒருசில மூலிகை டீ அல்லது கசாயங்களைத் தயாரித்துக் குடிக்க வேண்டும். இப்படி மூலிகை டீயை குடிக்கும் போது, அதில் உள்ள மருத்துவ பண்புகள் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, நோய்த்தொற்றுக்களின் அபாயத்தைத் தடுக்கும்.

மேலும் மூலிகை டீக்களைக் குடித்தால், நோயெதிர்ப்பு சக்தி மேம்படுவது மட்டுமின்றி, உடலுக்கு இன்னும் பலவிதமான நன்மைகளும் கிடைக்கும். இப்போது மழைக்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்த குடிக்க வேண்டிய சில மூலிகை டீக்களைக் குறித்து காண்போம். முடிந்தால் இந்த டீயை அடிக்கடி செய்து குடித்து, நன்மை பெறுங்கள்.நோயெதிர்ப்பு சக்தி பலவீனமா இருக்கா? மழை வந்தாலே சளி பிடிக்குதா? அப்ப இந்த  டீயை அடிக்கடி செஞ்சு குடிங்க.. | Chennai Rain: Top 6 Homemade Herbal Teas  To Boost Your ...

1. மஞ்சள் டீ

பழங்காலம் முதலாக சமையலில் மட்டுமின்றி, நாட்டு வைத்தியத்தில் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு பொருள் தான் மஞ்சள். ஏனெனில் மஞ்சளில் ஆன்டி-வைரல், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் போன்றவை அதிகமாக உள்ளன. அதோடு இதில் உள்ள குர்குமின், உடலைத் தாக்கும் பலவிதமான கிருமிகளை அழிக்கும் திறன் கொண்டது. அப்படிப்பட்ட மஞ்சள் தூளை கொதிக்கும் நீரில் போட்டு, அத்துடன் சிறிது இஞ்சி மற்றும் மிளகைத் தட்டிப் போட்டு 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இப்படி மழைக்காலத்தில் குடிக்கும் போது நோயெதிர்ப்பு சக்தி வலுபெறும்.

2. இஞ்சி டீ

இஞ்சியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளன. இவை நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி, பலவிதமான தொற்றுக்களில் இருந்து உடலைப் பாதுகாக்கும். மேலும் இஞ்சி சுவாச பிரச்சனைகளையும் குறைக்க உதவுகிறது. அப்படிப்பட்ட இஞ்சியை ஒரு துண்டு எடுத்து தட்டி, கொதிக்கும் நீரில் போட்டு, சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, தேன், மஞ்சள் தூள் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடித்தால், நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையாகும்.

3. துளசி டீ

இந்தியாவின் பெரும்பாலான வீடுகளில் காணப்படும் ஒரு பொதுவான மற்றும் புனிதமான செடி தான் துளசி செடி. இந்த துளசியில் ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-வைரல், அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் போன்றவை அதிகம் உள்ளன. இவ்வளவு சத்துக்களை உள்ளடக்கிய துளசியின் இலைகளை கொதிக்கும் நீரில் போட்டு, அத்துடன் சிறிது இஞ்சி, ஏலக்காயை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, தேன் மற்றும் எலுமிச்சை சாற்றினை கலந்து குடித்தால், நோயெதிர்ப்பு சக்தி வலுபெறுவதோடு, உடலில் உள்ள கொழுப்புக்கள் மற்றும் இரத்த சர்க்கரை அளவு குறையும்.

4. எலுமிச்சை டீ

எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் உள்ளன. இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த தேவையான முக்கியமான சத்து. இந்த எலுமிச்சையைக் கொண்டு டீ தயாரித்து குடித்து வந்தால், நோயெதிர்ப்பு சக்தி வலுபெறுவதோடு, செரிமான மண்டலத்தின் செயல்பாடும் சிறப்பாக இருக்கும். அதோடு இந்த டீ சளியில் இருந்து நிவாரணம் அளிக்கவும் செய்யும். அதற்கு சிறிது நீரை கொதிக்க வைத்து இறக்கி, அத்துடன் மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு மற்றும் சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.

5. புதினா டீ

புதினா குளிர்ச்சி பண்புகளைக் கொண்டது என்பதை அனைவரும் அறிவோம். அதே சமயம் இது செரிமான பிரச்சனைகளில் இருந்தும் விடுவிக்கும். முக்கியமாக இந்த புதினாவில் ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-வைரல், அழற்சி எதிர்ப்பு பண்புகள் போன்றவை உள்ளன. இவை சைனஸ் பிரச்சனைகளில் இருந்து விடுவிக்க உதவி புரிகிறது. அதற்கு ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி கொதிக்க ஆரம்பித்ததும், புதினா இலைகளை சேர்த்து 2 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அதன் பின் அதை வடிகட்டி, தேன் மற்றும் எலுமிச்சை சாற்றினை கலந்து குடிக்க வேண்டும்.

6. பட்டை டீ

அனைவரது சமையலறையிலும் பொதுவாக காணப்படும் ஒரு மருத்துவ குணம் வாய்ந்த மசாலா பொருள் தான் பட்டை. இந்த பட்டையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், அழற்சி எதிர்ப்பு பண்புகள் போன்றவை அதிகம் உள்ளன. இவை உடலைத் தாக்கும் கிருமிகளை எதிர்த்துப் போராட உதவி புரிகிறது. அதோடு இது இரத்த சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம் போன்றவற்றை கட்டுப்படுத்தி, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. அதற்கு கொதிக்கும் நீரில் 1 துண்டு பட்டை அல்லது சிறிது பட்டைத் தூள் சேர்த்து 15 நிமிடம் ஊற வைத்து, பின் அதை வடிகட்டி, சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். மேலே கொடுக்கப்பட்டுள்ள டீ வகைகள் அனைத்துமே நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் அற்புதமான பானங்களாகும். உங்களுக்கு மழைக்காலத்தில் சளி, இருமல், காய்ச்சல் போன்றவை வராமல் இருக்க வேண்டுமானால், இந்த பானங்களை அடிக்கடி தயாரித்து குடித்து வாருங்கள்.

Related Post

அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!

Posted by - December 27, 2024 0
அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு எஃப்ஐஆர் இணையத்தில் வெளியான நிலையில், குற்றவாளி பாலியல் வன்கொடுமைக்கு உடன்பட வைத்தது எப்படி என பரபரப்புத் தகவல்கள் கசிந்துள்ளன. அண்ணா பல்கலைக்கழக…

கீழ்ப்பாக்கத்தில் அதிர்ச்சி சம்பவம்: 10-ம் வகுப்பு மாணவியை ஆபாச வீடியோ எடுத்து பாலியல் மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

Posted by - February 16, 2023 0
அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் பாதிப்படைந்த சிறுமிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக துணிச்சலாக ஐகோர்ட்டை நாடினார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு நடந்ததை அனைத்தும் ஒப்பிட்டு…

அறிவித்தபடி நடைபெறுமா மாநாடு? #TVK -வினருக்கு போலீசார் மீண்டும் நோட்டீஸ்!

Posted by - October 16, 2024 0
தவெகவின் முதல் மாநாடு நடைபெறவுள்ள நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளருக்கு காவல்துறையினர் மீண்டும் நோட்டீஸ் வழங்கினர்.   தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு வருகிற 27ம்தேதி மாலை…

ரவுண்டு கட்டப்பட்ட 6 திமுக அமைச்சர்கள் – வீட்டுக்கா? சிறைக்கா? தலை தப்புமா? ஆட்சி கிட்டுமா?

Posted by - April 26, 2025 0
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் 6 அமைச்சர்களுக்கு வழக்குகளால் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் சில அமைச்ச்சர்களுக்கு, பழைய வழக்குகள் தற்போது…
Generated Image November 13 2025 5 00PM

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஜாக்பாட்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

Posted by - November 13, 2025 0
ஜூலை 1ஆம் தேதி முதல் முன் தேதியிட்டு, இந்த அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட உள்ளது. தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அகவிலைப் படியை உயர்த்தி,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *