பாஜகவை ரவுண்டு கட்ட திட்டம்.. உயிர்பெறும் I.N.D.I., கூட்டணி, கையிலெடுக்கும் அஸ்திரம் என்ன?

163 0

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு, எதிர்க்கட்சிகளின் .N.D.I., கூட்டணி ஆலோசனைக் கூட்டம் வரும் 19ம் தேதி தொடங்க உள்ளது.

நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டிய விவகாரங்கள் குறித்து, I.N.D.I., கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில்  முடிவு செய்யப்பட உள்ளது.

எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம்:

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கான நேரம் நெருங்கியுள்ளது. இதை முன்னிட்டு காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் அடங்கிய, I.N.D.I., கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் வரும் 19ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தேசிய பிரச்னைகளை ஒருங்கிணைந்து முன்னெடுப்பது தொடர்பாக முடிவு செய்வதற்காக ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “தற்போதைய அரசியல் சூழல் தொடர்பாக கூட்டணி கட்சி தலைவர்கள் சனிக்கிழமை பிற்பகல் நடைபெறும் ஆன்லைன் சந்திப்பில் விவாதிக்க உள்ளனர்” என குறிப்பிட்டுள்ளனர்.

டெல்லியில் கூடும் தலைவர்கள்:

ஆன்லைன் சந்திப்பு நடைபெறும் அதேநாளில், I.N.D.I., கூட்டணியின் நேரடி சந்திப்பு டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுனா கார்கே இல்லத்தில் நடைபெறும் என ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் அறிவித்துள்ளார். உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனாவும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளது. இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு உத்தவ் மற்றும் ராஜ் தாக்ரே இணைந்து இருப்பதும், பாஜகவிற்கு எதிராக குரல் கொடுப்பதும் மகாராஷ்டிரா அரசியலில் பெரும் திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.

எப்படி களமிறங்கலாம்?

எதிர்வரும் மழைக்கால கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கூட்டணி எப்படி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பது குறித்து இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட உள்ளது. ஜுலை 21ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 21ம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. அதிலும் ரக்‌ஷா பந்தன் மற்றும் சுதந்திர தினத்திற்கான ஆகஸ்ட் 12 முதல் 18ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறாது என்பது குறிப்பிடத்தக்கது.  கூட்டத்தொடரின் போது பல முக்கிய விவகாரங்கள் தொடர்பாக பாஜக மற்றும் எதிர்க்கட்சிகளின் கூட்டணி இடையே அனல் பறக்கும் விவாதத்தை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக பீகாரில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழலில், தேர்தல் ஆணையம் நடத்தும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம், ஆப்ரேஷன் சிந்தூர் மற்றும் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான மோதலை தானே தடுத்ததாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் மீண்டும் குறிப்பிடுவது குறித்து காராசார விவாதங்கள் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகளின் இலக்கு என்ன?

முன்னதாக, காங்கிரஸ் கட்சி தலைவர்கள் அண்மையில் சோனியா காந்தி இல்லத்தில் கூடினர். காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் என்ற முறையில் அவரது தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாநிலங்களவை துணைத் தலைவர் பிரமோத் திவாரி மற்றும் ஜெய்ராம் ரமேஷ், கே. சுரேஷ், மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது, பஹல்காம் தீவிரவாத தாக்குதல், பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தங்கள், ஜம்மு-காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்து கோரிக்கை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு, விவசாயிகளின் குறைகள், வேலைவாய்ப்பின்மை, தேசிய பாதுகாப்பு மற்றும் அகமதாபாத் விமான விபத்து உள்ளிட்ட பல முக்கியமான பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்ப காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதைதொடர்ந்து, அரசாங்கத்தால் கூட்டப்படும் அனைத்துக் கட்சிக் கூட்டமும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற வாய்ப்புள்ளது.

Related Post

tamil news

விஜய் மாஸ்… மத்​தவங்க க்ளோஸ்… யாரையும் விட்டுவைக்காத தவெக அலை!

Posted by - May 14, 2026 0
“இவரெல்​லாம் ஜெயிக்க வாய்ப்​பில்​லை” என்று வியூ​கப் புலிகளால் ஒதுக்​கப்​பட்ட விஜய், தனித்தே நின்று 108 தொகு​தி​களை வென்று ஆட்​சி​யை​யும் தக்​க​வைத்து விட்​டார். ஆனால், அவரால் உருவாக்கப்​பட்ட வெற்றி…

பாஜக-விற்கு குட்பை? எடப்பாடியுடன் கை கோர்க்கிறாரா விஜய்? காத்திருக்கு சம்பவம்!

Posted by - July 23, 2025 0
அதிமுக கூட்டணிக்குள் விஜய்யை கொண்டு வருவதற்காக பாஜக-வை கூட்டணியில் இருந்து வெளியேற்ற எடப்பாடி பழனிசாமி முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற…
%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81

Udhayanidhi Stalin: “நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ – வெளுத்துவிட்ட உதயநிதி

Posted by - May 29, 2026 0
Udhayanidhi Stalin on CM Vijay: கடலூர் பெண் கொலைக்கு அதிர்ச்சி தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதல்வர் நேரம் எடுத்து கற்றுக்கொண்டு வந்து சட்டம்…
eps

EPS: என்ன செய்யப்போகிறார் எடப்பாடி பழனிசாமி? அடுத்தடுத்து காத்திருக்கும் சவால்!

Posted by - June 1, 2026 0
தமிழ்நாட்டில் அடுத்தடுத்து நடைபெற உள்ள உள்ளாட்சி, இடைத்தேர்தலில் அதிமுக-வின் பலத்தை காட்ட வேண்டிய சூழல் உருவாகியுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி என்ன செய்யப்போகிறார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *