மணமகன் கட்டிய தாலியை கழற்றி வீசிய இளம்பெண்: உறவினர் பெண் திடீர் மணமகள் ஆனார்

250 0

போளூர்:

போளூரில் உள்ள ஒரு வங்கியில் வேலை செய்யும் வாலிபருக்கும், போளூரை அடுத்த ஒரு கிராமத்தில் வசிக்கும் பட்டதாரி இளம் பெண்ணுக்கும் பெரியோர்களால் நிச்சயம் செய்யப்பட்டு நேற்று காலை போளூரில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் நடைபெற்றது. முன்னதாக நேற்று முன்தினம் இரவு மணப்பெண் அழைப்பும் நடந்தது.குடிபோதையில் தாலிகட்டிய மணமகன்... வாழ மறுத்து கழற்றி வீசிய மணமகள் |  Alcoholic Husband's Behaviour in Wedding, Bride Returns Thali - Tamil  Oneindia

இந்த நிலையில் நேற்று காலையில் மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்டினார். அடுத்த வினாடியே மணமகள், எனக்கு மணமகனை பிடிக்கவில்லை என்று தாலியை கழற்றி வீசினாா். இதனால் திருமணத்திற்கு வந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் மற்றும் போலீசார் அங்கு சென்று மணமகளிடம் விசாரித்தனர்.

அப்போது அவர் எனக்கு மணமகனை பிடிக்கவில்லை என்று கூச்சலிட்டவாறு திரும்ப திரும்ப விடாப்பிடியாக கூறினார். அதற்கு, மணமகனை பிடிக்கவில்லை என்றால் முதலிலேயே சொல்லி திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டியது தானே. தாலி கட்டிய பிறகு மணமகனை பிடிக்கவில்லை என்றால் என்ன என்று போலீசார் கேட்டனர். அதற்கு மணமகள் வாயை திறக்காமல் மவுனமாக இருந்தார். பின்னர் மணமகளிடம், அவரது பெற்றோர் சமாதானம் பேசினர். ஆனால் அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. அதைத் தொடர்ந்து மணமகளையும், பெண் வீட்டாரையும் எச்சரித்து போலீசார் அங்கிருந்து அனுப்பினர். பின்னர் உறவினர் ஒருவரின் பெண்ணுடன் மணமகனுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Post

crime news

கோவை சிறுமி வழக்கில் ஷாக் : விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்!

Posted by - May 23, 2026 0
சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் முக்கியக் குற்றவாளியான கார்த்தி என்பவருக்குக் கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோவையில் சடலமாக மீட்கபட்ட 10…

நிலக்கரி சுரங்க அறிவிப்பு- சட்டப்பேரவையில் அதிமுக, காங்கிரஸ், பாமக எம்.எல்.ஏக்கள் காரசார விவாதம்

Posted by - April 5, 2023 0
நிலக்கரி சுரங்க அறிவிப்பு விவகாரம் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது. உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பதில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.…

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை விவகாரம்- 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

Posted by - November 23, 2022 0
பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர் என சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பள்ளியை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகளிடம் தவறாக நடந்த பள்ளி நிர்வாகி…

திமுக அரசுக்கு ஆப்பு வைக்கப்போகும் அரசு ஊழியர்கள்? பணியை புறக்கணித்து போராட்டம் அறிவிப்பு

Posted by - June 18, 2025 0
தமிழ்நாடு முழுவதும் வருவாய்த்துறை அலுவலர்கள் ஜுன் 25ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் போராட்டம், தர்ணாவில் ஈடுபட உள்ளனர். தங்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, ஜூன்…

மிக்ஜாம் புயல் நிவாரணத் தொகை ரூ.6,000… ரேசன் அட்டை இல்லாதவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு

Posted by - March 1, 2024 0
மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களைச் சேர்ந்த 37 லட்சம் குடும்பங்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் நிவாரண…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *