மாசி மகத்தன்று கும்பகோணம் ‘மகாமகம்’ குளத்தில் நீராடினால்… உண்மையில் நம் பாவங்கள் நீங்குமா?

303 0

கும்பகோணம் மகாமகம் குளத்தின் சிறப்பு, மாசி மகத்தன்று இங்கு நீராடினால் பாவங்கள் தீரும் என சொல்கிறார்களே அது ஏன் என்பதை இங்கு காணலாம்.

புராணங்களில் பல விஷயங்கள் கூறப்பட்டுள்ளன. மாசி மகத்தன்று மகாமக குளத்தில் நீராடி செல்ல தேவாதி தேவர்களும் பூலோகம் வருவதாக கூறுவார்கள். தமிழ்நாட்டில் இருக்கும் கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமகம் விழா கொண்டாடப்படும். அப்போது லட்சக்கணக்கானோர் கும்பகோணத்தின் நடுவே இருக்கும் பகுதியான மகா மகம் குளத்தில் புனித நீராட செல்வார்கள்.

மாசி மாதத்தில் புனித நீராடல் என்று சொன்னாலே, எல்லோருக்கும் நினைவுக்கு வருவது கும்பகோணம் மகாமகம் குளம் தான். இந்த மகாமகம் உருவான கதையும், மாசி மகம் புனித நீராடலுக்கும் கூட புராணங்களில் தனிக்கதை உண்டு.மாசி மகத்தன்று கும்பகோணம் 'மகாமகம்' குளத்தில் நீராடினால்... உண்மையில் நம்  பாவங்கள் நீங்குமா?

புராண கதை 

பாவங்கள் கரைய அனைவரும் புனித நதிகளில் நீராடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். புண்ணிய நதியாக கருதப்படும் கங்கை, யமுனை, நர்மதை, சரஸ்வதி, காவேரி, சிந்து, கோதாவரி, தாமிரபரணி போன்றவைகளில் கூட பாவங்கள் அதிகமாக சேர்ந்தன. மனிதர்களின் பாவங்களை போக்கும் நதிகளின் பாவங்கள் தீர உபகாரம் செய்ய வேண்டும் என சிவ பெருமானிடம் நதிகள் வேண்டினவாம். அப்போது மனமுருகிய சிவ பெருமான், கும்பகோணத்தில் இருக்கும் தீர்த்தத்தில் குரு, சிம்ம ராசியில் இருக்கும் மக நட்சத்திரமும் பெளர்ணமியும் ஒன்றாக இணையும் நன்நாளில் முறைப்படி நீராடினால் பாவங்கள் தீரும் என கூறினாராம். ஐயன் சிவன் சொன்னபடி புனித நதிகளும் அங்கு சென்று நீராடி, பாவங்களை தீர்த்து கொண்டனவாம்.

கும்பகோணம் பெயர்காரணம்

உலகத்தில் இருக்கும் உயிர்களை உருவாக்கும் விதைகளை அமிர்தம் நிறைந்த குடத்தில் போட்டு வைத்திருந்தார் பிரம்மா. வேடனாக வேஷம் பூண்டு வந்த சிவன், அம்பு கொண்டு அக்குடத்தை சாய்த்து அதிலிருந்து உயிர்களை உருவாக வைத்தாராம். குடமான கும்பத்தை, சிவன் தன் அம்பால் சேதமாக்கி வைத்த இடம் என்பதாலே இது கும்பகோணம் என்று அழைக்கப்பெற்றதாம். பிரம்மன் வைத்திருந்த அந்த குடத்தில் இருந்து விழுந்த ஒரு துளி அமிர்தமே இங்கு குளமாகி பாவம் போக்கி வருவதாகவும் புராண கதைகள் கூறுகின்றன.

20 தீர்த்தங்கள் 

கும்பகோணம் மகாமகம் குளத்தில் 20 வகையான தீர்த்தங்கள் இருக்கின்றதாக கூறப்படுகிறது. பிரம்ம தீர்த்தம், குபேர தீர்த்தம், கோதாவரி தீர்த்தம், கங்கை தீர்த்தம், வாயு தீர்த்தம், யமுனை தீர்த்தம், ஈசான்ய தீர்த்தம், நர்மதை தீர்த்தம், இந்திர தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், அக்னி தீர்த்தம், காவிரி தீர்த்தம், யம தீர்த்தம், குமரி தீர்த்தம், நிருதி தீர்த்தம், பயோஷினி தீர்த்தம், அறுபத்தாறு கோடி தீர்த்தம், வருண தீர்த்தம், சரயு தீர்த்தம், தேவ தீர்த்தம் ஆகிய 20 தீர்த்தங்களும் அங்கு உள்ளன.மாசிமகம்: கும்பகோணம் மகாமக குளத்தில் புனித நீராடல்- Dinamani

பாவங்கள் தீரும்!! 

கும்பகோணத்தில் இருக்கும் 12 சிவன் கோயில்கள், 5 வைணவ கோயில்களின் தீர்த்தவாரி இந்த குளத்தில் வைத்து தான் நடைபெறுவது வழக்கம். கிட்டத்தட்ட 12 கோயில்களின் தீர்த்தவாரி ஒரே இடத்தில் நடப்பது இங்கு மட்டும் தான் பாரம்பரியமாக பின்பற்றப்படுகிறது. பல்வேறு புனித நதிகளின் பாவங்களை தீர்ந்த நாள் தான் மாசி மகம் என்பதால், அதே நாளில் நாமும் அங்கு நீராடினால் நம் பாவங்களும் தீரும் என்பது நம்பிக்கை. இன்று, நேற்று அல்ல 1518ஆம் ஆண்டு தொடங்கி கும்பகோணத்தில் மகாமகம் விழா நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2016ஆம் ஆண்டு மகாமகம் நடந்தது. அப்போது 10 நாள்கள் பிரம்மோற்சவமாக அந்த விழா நடத்தப்பட்டது. அடுத்த முறை கும்பகோணம் மகாமகம் 2028ஆம் ஆண்டு தான் நடத்தப்படும். அப்போது சென்று நீராடினால் பாவங்கள் தீரும் என்பது ஐதீகம்.

Related Post

இந்தியை படிக்காதே என்று கூறவில்லை, திணிக்காதே என்றுதான் கூறுகிறோம்” ஸ்டாலின் மடல்…

Posted by - February 25, 2025 0
தமிழ் மொழியின் முக்கியத்துவம் குறித்தும், இந்தி திணிப்பிற்கு எதிராக தொடர்ந்து போராடுவோம் எனக் கூறியும், திமுக தொண்டர்களுக்கு தொடர் கடிதம் ஒன்றை தொடங்கியுள்ளார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.…

நகைச்சுவை நடிகர் சிவநாராயணமூர்த்தி உடல்நலக் குறைவால் மரணம்

Posted by - December 8, 2022 0
நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி உடல்நலக் குறைவால் காலமானார். ரஜினி, அஜித், விஜய் உள்ளிட்ட திரை நட்சத்திரங்களுடன் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சென்னை: தமிழ் திரைப்பட…
Generated Image January 03 2026 12 13PM

சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம்: பாமக, நாதக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு

Posted by - January 3, 2026 0
சென்னை: சம வேலைக்கு சம ஊதி​யம் கோரிக்​கையை முன்​வைத்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்​கம் (எஸ்​எஸ்​டிஏ) சார்​பில் சென்​னை​யில் டிச.26 முதல் தொடர் போராட்​டம் நடத்​தப்​பட்டு வரு​கிறது. 8-வது…

மத்திய அரசு தமிழை புறக்கணிப்பதாக திமுக- காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் கூறுவது வேடிக்கையாக உள்ளது – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Posted by - October 19, 2024 0
மத்திய அரசு தமிழை புறக்கணிப்பதாக திமுக- காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் கூறுவது வேடிக்கையாக உள்ளதாக  மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள…

தினமும் ‘இத்தனை’ படிக்கட்டுகள் ஏறுனா போதுமாம்… உங்களுக்கு மாரடைப்பே வராதாம் தெரியுமா?

Posted by - October 28, 2023 0
தினமும் படிக்கட்டுகளில் ஏறுவதை உங்கள் உடற்பயிற்சியின் ஒரு அங்கமாக மாற்றுங்கள். ஒருநாளைக்கு 50 படிக்கட்டுகளுக்கு மேல் ஏறுவது இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவும் என்று ஒரு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *