araja

A Raja Slams CM Vijay: “Bro, பிரதமர் முன்னாடி உங்க சக்தி எங்க போச்சு Bro.?“- முதல்வர் விஜய்யை கேள்விகளால் துளைத்த ஆ. ராசா

93 0

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக துணை பொதுச் செயலாளரும், எம்பி-யுமான ஆ. ராசா, முதலமைச்சர் விஜய்யை கேள்விளால் துளைத்து எடுத்துள்ளார். அவர் என்ன பேசினார் என்பதை விரிவாக பார்க்கலாம்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.பி. ஆ. ராசா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் நடைபெற்று 234 தொகுதிகளில் 107 இடங்களில் வெற்றி பெற்று, அந்த எண்ணிக்கையோடு தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார். சட்டமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின்போது போதுமான வாக்குகளைப் பெறுகிற அளவிற்கு எதிர்க்கட்சிகளும் ஒத்துழைத்து அவர் முதலமைச்சராக பணியை தொடர்ந்து வருகிறார் என தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் முதல்வருக்கு பிரதமர் 10 நிமிடம் மட்டுமே நேரம் ஒதுக்கினார்

திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவர், அமைக்கப்பட்டிருக்கின்ற புதிய ஆட்சிக்கு வாழ்த்துகளை சொன்னதோடு “6 மாத காலத்திற்கு உங்களுடைய ஆட்சியினுடைய திறனை கடுமையாக விமர்சிக்க மாட்டோம்” என்று கூறி, இந்த அரச தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று விழைந்தார்கள்.

அதற்குப் பிறகு முதல்-அமைச்சர் டெல்லிக்கு சென்று பிரதமரை பார்த்தார். ஏனைய மூன்று மாநில (அசாம், மேற்கு வங்காளம், கேரளா) முதலமைச்சர்களை பிரதமர் ஏறத்தாழ 40 முதல் 50 நிமிடங்கள் சந்தித்தார். ஆனால் என்ன காரணத்தினாலோ, தமிழ்நாட்டின் முதலமைச்சருக்கு வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே பிரதமரால் ஒதுக்கப்பட்டு, உடனடியாக நிர்மலா சீதாராமனைத் தவிர வேறு யாரையும் சந்திக்காமல் அவர் திரும்பி இருக்கிறார்.

“விஜய், தான் வகிக்கும் பதவிக்கு பொருத்தமானவராக இல்லை“

அதற்குப் பிறகு, முதன்முதலாக தமிழ்நாட்டினுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சராக, தொகுதி மக்களுக்கு நன்றி சொல்வதற்கு திருச்சிக்கு சென்றவர், 18 நிமிடங்கள் பேசியிருக்கிறார். அரசியல் சட்டத்தால் நிறுவப்பட்டுள்ள ஒரு பதவியில் ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருக்கும் ஒருவர், அரசியல் சட்டம் என்ன ஒழுக்கத்தை கடைப்பிடிக்கச் சொல்கிறதோ, அதாவது Constitutional Morality -ஐ பின்பற்ற வேண்டும்.

அந்த Constitutional Morality, Accountability எதுவுமே இல்லாமல், தான் வகிக்கிற பதவிக்கு பொருத்தமானவராக இல்லாமல், தன்னுடைய தகுதியை குறைத்துக்கொண்டு பிதற்றியிருக்கிறார், வீராவசனம் பேசியிருக்கிறார் என்று கடுமையாக விமர்சித்தார் ஆ. ராசா.

“அல்லு சில்லுகளின் வீடுகளுக்கு சென்று ஆதரவை வாங்கியது அரசியலா.?“

மதம் பார்க்க மாட்டோம் என்றார் முதல்வர், கை, நெற்றியில் ஒரு மதம், பதவியேற்ற போது ஜோசப் விஜய் என ஒரு மதம். தற்போதைய சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு முந்தைய அரசை எப்படி முதலமைச்சர் விஜய் குறைகூற முடியும்? திருச்சியில் பேசிய முதலமைச்சர் விஜய்க்கு வீர வசனம் எழுதித்தந்தது யார்? பிரதமர் மோடியை 10 நிமிடங்கள் மட்டுமே சந்தித்த முதலமைச்சர் விஜய் அவருடன் என்ன பேசினார் என்பதைக் கூறாதது ஏன்? மற்றவர்களை எல்லாம் அல்லு சில்லு என்று மேடையில் பேசுகிறார். ஆனால், அந்த அல்லு சில்லுகளின் வீடுகளுக்குச் சென்று அவர்களின் ஆதரவை வாங்கியது அரசியலா.? என ஆ. ராசா கேள்வி எழுப்பினார்.

என்கிட்ட இவ்ளோ கேள்வி கேக்குறீங்களே முதலமைச்சரிடம் ஏன் கேட்க மாட்றீங்க. கை கால் எல்லாம் ஆட்டி பேசுறீங்களே, சட்டமன்றத்தில் எங்க போச்சு உங்க BODY LANGUAGE …ஏன் PRESS -அ பாக்காம போறீங்க. கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்பது தொடா்பாக எங்கள் தலைவா்கள் யாரும் அதிமுகவிடம் பேசவில்லை.

சட்டம் ஒழுங்கை சரி செய்வதில் முதலமைச்சருக்கு என்ன பிரச்னை.?

தில்லுமுல்லா.? முதல்வர் விஜய்க்கு அரசியல் புரிதல் இல்லை. எனக்கு நல்லா வார்த்தை வந்துவிடும் என்கிறார்? இது ஒரு முதலமைச்சர் பேசக்கூடிய முறையா? நிர்வாகத்தைதான் 6 மாதங்களுக்கு விமர்சிக்க மாட்டோம் எனக் கூறினோம். ஆட்சியில் நடக்கும் அசம்பாவிதங்களை அல்ல. காவல் துறை உங்கள் கட்டுப்பாட்டில்தானே உள்ளது. குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டியதுதானே.? என கேள்வி எழுப்பினார்.

மேலு, சட்டம் ஒழுங்கை சரி செய்வதில் முதலமைச்சருக்கு என்ன பிரச்னை என கேட்ட அவர், செய்தியாளரை சந்திக்க ஏன் மறுக்கிறீர்கள்? திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்தது குறித்து எப்போது பேசுவீர்கள்? பக்ரீத் தீர்ப்பு விவகாரத்தில் என்ன நிலைப்பாடு தவெக அரசு எடுத்துள்ளது. மும்மதங்களுக்கும் உரியவராக விஜய் தன்னை முன்னிலைப்படுத்துகிறார். ஆனால் இவற்றிற்கு எதிராக குரல் எழுப்பமாட்டார்.. ஆர்பிஐ அனுமதி இல்லாமல் விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய முடியாது. இது கூட தெரியாமல் தேர்தல் அறிக்கையை தயாரித்திருக்கிறீர்கள்.

தமிழ்நாட்டிற்கு நான் தான் தலைவர் எனக் கூற விஜய்க்கு எந்தத் தகுதியும் இல்லை. உங்களை வேண்டாம் என்று 65% பேர் நிராகரித்துள்ளனர் என்பதை விஜய் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். முதல்வர் நாற்காலிக்கான மரியாதையை விஜய் குறைத்துக்கொள்ளக் கூடாது” என அவர் விமர்சித்தார்.

பிரதமர் மோடிக்கு முன்னால் உங்க சக்தி என்னவானது.?

தொடர்ந்து பேசிய ஆ. ராசா, மின்சாரம் கட் ஆகிறது விஜய் ப்ரோ, தூக்கம் வரல ப்ரோ, ஏதேனும் முடிவு எடுங்க ப்ரோ என கிண்டலடித்தார். தவெக 2-ம் கட்ட தலைவா்களை போல் பேசுகிறாா் முதல்வா் விஜய். பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்னால் உங்கள் சக்தி என்னவானது விஜய் bro.? எங்களை தீய சக்தி, தீய்ந்து போன சக்தி என விமா்சித்தீா்களே bro, பிரதமருக்கு முன்னால் உங்கள் சக்தி என்னவானது.? திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசியதை ஏன் எதிா்க்கவில்லை விஜய் bro.? என சரமாரி கேள்விகளை அவர் எழுப்பினார்.

 

முதிர்ச்சி இல்லாமல், முன்னனுபவம் இல்லாமல் போவதில் தவறில்லை, ஆனால் முதிர்ச்சி இல்லாத, பக்குவம் இல்லாத, எதைப் பற்றியும் சிந்திக்காத ஒரு தாந்தோன்றித்தனமான அரசாங்கத்தைத் தந்துகொண்டிருக்கிற முதலமைச்சர் அவர்களே… உங்களைத் தமிழ்நாட்டு மக்களின் சார்பில் வாக்களித்த மக்களின் சார்பில்,வாக்களிக்காத மக்களின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என ஆ. ராசா கூறினார்.

Related Post

கப்சிப் விஜய்.. அரசியல் பக்குவம் இல்லையா? காட்டிகொடுத்த மாநாடு

Posted by - August 22, 2025 0
Vijay: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் (TVK) தலைவர் விஜய், மதுரையில் நடத்திய பெரிய அரசியல் மாநாடு தற்போது வைரலாக பேசப்படுகிறது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள்…

ஒருவழியாக..! முதல்முறையாக ”திமுக” பெயரை சொன்ன விஜய் – ”வீட்டிற்கு அனுப்ப உறுதி”

Posted by - March 8, 2025 0
திமுக தலைமையிலான அரசை 2026ல் மாற்றுவோம் என, மகளிர் தின வாழ்த்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார், சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி தமிழக…

பட்டையடித்த மோடி, கடுப்பாகி ஒபிஎஸ் எடுத்த புது ரூட் – தமிழக பிள்ளைகள் பாவம்.. ஆன் தி வே டூ விஜய்?

Posted by - July 29, 2025 0
மத்திய பாஜக அரசுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்து இருப்பது, தமிழ்நாடு அரசியலில் கவனத்தை ஈர்த்துள்ளது. அண்மையில் தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் மோடி ஓ.பன்னீர்…
ChatGPT Image Jun 22 2026 10 16 20 AM

CM Vijay : பிறந்தநாள் பரிசாக சட்டப்பேரவை நேரலை..

Posted by - June 22, 2026 0
CM Vijay 52nd Birthday: முதலமைச்சரான பிறகு விஜய் முதல்முறையாக தனது பிறந்தநாளை கொண்டாடும் விஜய், சட்டப்பேரவையில் இன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. CM…
Generated Image November 27 2025 10 14AM

விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்!

Posted by - November 27, 2025 0
எம்எல்ஏ பதவியை நேற்று ராஜினாமா செய்த நிலையில், முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்தார். அதிமுகவில் இருந்த எம்ஜிஆர் காலத்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *