rahul

Rahul Gandhi: விஜயுடன் கூட்டணி.. திமுக கடும் விமர்சனம்!

89 0

இந்தியா கூட்டணிக் கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும் சூழலில் திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்காது என முடிவு எடுக்க வேண்டிய சூழலை உருவாக்கியது காங்கிரஸ் கட்சியே ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியை ஆழக் குழி தோண்டி ஒவ்வொரு மாநிலத்திலும் புதைக்கும் செயலை ராகுல் செய்து வருகிறார் என திமுகவின் முரசொலி நாளேடு கடுமையாக விமர்சித்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் நின்று 5 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, தேர்தலுக்குப் பின்னர் தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்தது. இதனால் திமுக – காங்கிரஸ் கூட்டணி தமிழ்நாட்டில் பிரிந்தது. அதேசமயம் இந்த கோபத்தை மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற திமுக, ஜூன் 8ம் தேதி நடக்கவிருக்கும் கூட்டத்தை புறக்கணித்து தீர்த்துக் கொண்டுள்ளது. இதனிடையே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை திமுகவின் முரசொலி நாளேடு கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. அதில், “தான் பிரதமராவதை விட பிரவீன் சக்கரவர்த்தியை எம்.பி. ஆக்குவதற்காகத்தான் ராகுல் அலைந்திருக்கிறார். இதன்மூலம் அவர் தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார். ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியை ஆழக் குழி தோண்டி ராகுல் புதைத்து வருகிறார். அது தமிழ்நாட்டிலும் நடந்துள்ளது. இப்படி ஒரு கெட்ட மதியாளரை  தூக்கிச் சுமந்தோமே என்ற வருத்தமே மிஞ்சுகிறது.

இந்தியா கூட்டணிக் கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும் சூழலில் திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்காது என முடிவு எடுக்க வேண்டிய சூழலை உருவாக்கியது காங்கிரஸ் கட்சியே ஆகும். ராகுலின் தன்னிச்சையான, ஆணவமான நடவடிக்கைகளே இதற்குக் காரணமாகும். கூட்டணியில் இருந்துகொண்டே இதற்கு குழிபறிக்கும் செயல்களை ராகுல் செய்தார்.  நீங்கள்தான் என் சகோதரர் என ராகுல் சொன்னார். நான் யாரையும் சகோதரர் என்று சொன்னதில்லை என்று கூறினார். இது வெறும் நடிப்புதான் போல தோன்றுகிறார்.

கூட்டணிக் கட்சித் தொண்டர்களின் உழைப்பால் பெற்ற வெற்றியைப் பணயம் வைத்து மாற்று அணிக்கு காங்கிரஸ் மாறியது. இதே காங்கிரஸ் கட்சியை தான் விஜய் சில பல கோடிகளைக் கொடுத்து தமிழ்நாடு காங்கிரஸை, ஸ்டாலின் தனது பைக்குள் போட்டுக்கிட்டார் என சொன்னது. ஆனால் இன்று எத்தனை கோடி கொடுத்து விஜய் காங்கிரஸ் ஆதரவை பெற்றார்.மு.க.ஸ்டாலின்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக வேண்டும் என்பதற்காக உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் ராகுல் பேசினாரா என்றால் இல்லை. அவருடன் சேர்ந்து ஒரு கூட்டம் பேசாமல்  ஆணவமாக ராகுல் நடந்து கொண்டார்.  இவ்வளவுக்குப் பிறகும், இந்தியா கூட்டணியில் தி.மு.க. இருக்கிறது என்று சொல்வதற்கு காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் கிரீஷ் சோடங்கருக்கு வெட்கமாக இல்லையா? மான ஈனத்தைப் பற்றிக் கவலைப்படாத கட்சியாக காங்கிரஸ் இருக்கலாம். கழகத்தை உயிர்ப்போடு வைத்திருப்பதே இனமானமும், தன்மானமும் தான்” என சரமாரியாக பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

Related Post

“பாஜக நோட்டா என கிண்டலடித்தார்கள்”..ஆனால் இப்போ பாருங்க.!…இபிஎஸ் தாக்கிய அண்ணாமலை.!

Posted by - March 8, 2025 0
அதிமுக கட்சி எங்களுக்கு எதிரி இல்லை என கூறியிருந்த நிலையில், இன்று அதிமுகவை காட்டமாக விமர்சித்துள்ளார், அண்ணாமலை பாஜகவால் தோற்றோம் , பாஜக நோட்டா கட்சி என…

திமுக என்ன ஆகும் என்பதையும் கணித்து வைத்துள்ளேன் – வி.கே.சசிகலா பரபரப்பு பேட்டி

Posted by - March 21, 2024 0
2026 தேர்தல் என்பது எங்களுக்கும், திமுகவுக்கும் நேரடி போட்டியாக இருக்கும். அந்த தேர்தலில் நான் யார் என்பதைக் காட்டுவேன் என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய…
MK Stalin

MK Stalin: “நீங்க சொல்றதை வச்சுதான் நான் முடிவு எடுக்கனும்..” மக்களுக்கு மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கை என்ன?

Posted by - May 28, 2026 0
திமுக-வில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து பொதுமக்கள் வரும் 31ம் தேதிக்குள் கருத்துக்களை பகிருமாறு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க…
vijay 2

“என்னை அடக்கவே முடியாது.. மக்கள் விசில் பக்கம் தான்” – கடைசி நேரத்தில் விஜய் சொன்ன வார்த்தை!

Posted by - April 21, 2026 0
உங்களையும் என்னையும் இந்த உலகத்தில் எந்த அதிகார சக்தியாலும் எந்த அராஜக சக்தியாலும் எந்த தீயசக்தியாலும் எந்த பாசிச சக்தியாலும் எந்த மற்றும் பலர் சக்தியாலும் பிரிக்கவே…

விஜய்யின் தலைமைப் பண்பு.. திருமாவளவன் என்ன சொன்னார் தெரியுமா?

Posted by - October 30, 2025 0
கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய்யின் தலைமைப் பண்பு மிகப்பெரிய கேள்வியை ஏற்படுத்தியுள்ளது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். விசிக தலைவரும், மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் தனியார் செய்தி நாளிதழுக்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *