annamalai

அமித்ஷா-வை சந்தித்த பிறகு பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை

114 0

பாஜகவில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்க அண்ணாமலை திட்டமா?

சென்னை: தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, பாஜகவில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் நேற்று அவசரமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

கர்நாடகாவில் துடிப்பான இளம் ஐபிஎஸ் அதிகாரியாகப் பணியாற்றி வந்த அண்ணாமலை, அந்த பணியை ராஜினாமா செய்துவிட்டு, பாஜகவில் இணைந்தார். தமிழக பாஜக தலைவராக 3 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய அவர், தமிழகம் முழுவதும் பாஜக வளர்வதற்கு முக்கிய பங்காற்றினார்.

இதனால், இளைஞர்களின் ஆதரவு அண்ணாமலைக்கு அதிகரித்தது. தமிழக அரசியலில் அண்ணாமலையும் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்தார். இதற்கிடையே, தமிழக சட்டப் பேரவை தேர்தலுக்கு முன்பு, தமிழக பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார்.

மாநில தலைவர் பதவி இல்லாததால், சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடாத அண்ணாமலை, கட்சியின் எந்த நிகழ்விலும் பங்கேற்காமல் ஒதுங்கி இருந்தார். கட்சியில் அவரது ஆதரவாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

மத்திய அரசை எதிர்த்து முதல் குரல் மேலும், பாஜக தலைமை மீது அண்ணாமலை அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில், சமீபத்தில் சிபிஎஸ்இ 9-ம் வகுப்பு மாணவர்களுக்காக மத்திய அரசு கொண்டு வந்த ‘மும்மொழி கொள்கை’ திட்டத்துக்கு தனது எதிர்ப்பை வெளிப்படையாக பதிவு செய்தார்.

பாஜக தலைமையை எதிர்த்து முதல்முறையாக கருத்து தெரிவித்ததன் மூலமாக, சுதந்திரமாக செயல்பட பாஜகவில் இருந்து விலகி புதிய கட்சியைத் தொடங்க அண்ணாமலை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

2 நாளில் பதில் இந்நிலையில், அண்ணாமலை நேற்று மாலை 5 மணிக்கு அவசர பயணமாக சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

அவர் எங்கு சென்றாலும் உடன் வரும் உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ள பாதுகாப்பு வீரர்களுடன் கூடிய வாகனம் அவருடன் வரவில்லை. அதேபோல், அண்ணாமலையின் காரில் பாஜக கொடியும் இல்லை.

டெல்லியில் பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை சந்தித்து தனது நிலைப்பாட்டை அண்ணாமலை தெரிவிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் அண்ணாமலையிடம், ‘பாஜகவில் இருந்து விலகுகிறீர்களா? புதிய கட்சி தொடங்கு கிறீர்களா?’ என செய்தியாளர்கள் பல கேள்விகளை எழுப்பினர். அதற்கு அனைத்து கேள்விகளுக்கும் 2 நாளில் பதில் அளிக்கிறேன் என்று அண்ணாமலை தெரி வித்தார்.

இதுதொடர்பாக அண்ணாமலை ஆதரவாளர்கள் கூறும்போது, “தமிழகத்தில் பாஜக வளர்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் அண்ணாமலை. 2024 மக்களவைத் தேர்தலில் தனி அணியாக பாஜக பெற்ற வாக்குகளைவிட, இந்த சட்டப்பேரவை தேர்தலில் மிகவும் குறைவான வாக்குகளைத்தான் பாஜக பெற்றுள்ளது.

Related Post

Generated Image January 19 2026 11 05AM

திடீர் பல்டி அடித்த டிடிவி தினகரன்- பாஜக கூட்டணியில் அமமுக.?

Posted by - January 19, 2026 0
தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக அதிமுக கூட்டணியில் டிடிவி தினகரன் இணையவுள்ளார். 23ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் இபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஒரே மேடையில் கை…
nda

தமிழகத்தில் என்டிஏ ஆட்சி: மேட்ரிஸ் – ஐஏஎன்எஸ் கருத்துக் கணிப்பில் தகவல்

Posted by - March 16, 2026 0
தமிழக அரசி​யல் களம் குறித்து கருத்​துக் கணிப்பு வெளியிட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது. தமிழகத்​தில் திமுக கூட்​ட​ணியை பின்​னுக்​குத் தள்​ளி, தேசிய ஜனநாயகக் கூட்​டணி (என்​டிஏ)…
CHT

விஜய்க்கு சவால் விட்ட எடப்பாடி பழனிசாமி!

Posted by - February 4, 2026 0
தவெக தலைவர் விஜய் அதிமுகவை ஊழல் கட்சி என குறிப்பிட்ட நிலையில் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விஜய்க்கு கள நிலவரம் தெரியவில்லை என கூறியுள்ளார்.…

‘காங்கிரஸ் – த.வெ.க கூட்டணிக்கு அச்சாரம்’ ராகுலை சந்திக்கும் விஜய்..?

Posted by - July 21, 2025 0
’விக்கிரவாண்டியில் நடைபெற்ற விஜயின் முதல் மாநாட்டிலேயே ராகுல்காந்தியை பங்கேற்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன’ அரசியலில் எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். இந்த கட்சி, அந்த கட்சியோடுதான்…
fasdfr vv

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது: 234 தொகுதிகளுக்கும் நாளை வாக்குப் பதிவு

Posted by - April 22, 2026 0
சென்னை: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் பிரச்​சா​ரம் நேற்று மாலை 6 மணி​யுடன் ஓய்ந்​தது. நாளை காலை 7 மணிக்கு வாக்​குப் பதிவு தொடங்​கு​கிறது. தேர்​தல் பாது​காப்​புப் பணி​யில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *