tvk 2 1

TVK Cabinet Ministers: சென்னைக்கு மட்டுமே 7 அமைச்சர்கள், மாவட்ட வாரியாக நிலைமை என்ன?

94 0

TVK Cabinet Ministers Details: முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் மாவட்ட வாரியாக இடம்பெற்றுள்ள புதிய அமைச்சர்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

TN Cabinet CM Vijay: புதியதாக சேர்க்கப்பட்டுள்ள 23 பேரின் மூலம், தமிழக அமைச்சரவை உறுப்பிகளின் எண்ணிக்கை முதலமைச்சருடன் சேர்ந்து 33 ஆக உயர்ந்ந்துள்ளது.

தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கம்:

தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கம் இன்று, ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. ஏற்கனவே முதலமைச்சர் விஜய் உட்பட 10 பேர் பதவியேற்ற நிலையில், இன்று தவெக மற்றும் காங்கிரஸ் சார்பில் மேலும் 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இதன் மூலம் மாநில அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் தமிழ்நாடு அமைச்சரவையில், முதலமைச்சர் உட்பட 35 பேர் இடம்பெறலாம். அதன்படி, 33 இடங்கள் நிரப்பப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள இரண்டு இடங்கள் விடுதலை சிறுத்தைகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீகிற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், புதிய அமைச்சரவையில் மாவட்ட வாரியாக வழங்கப்பட்டுள்ள பிரதிநிதித்துவம் குறித்த விவராங்கள் சுவாரஸ்யத்தை கூட்டியுள்ளன.

 

சென்னைக்கு மட்டுமே 7 அமைச்சர்கள்:

விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 33 பேரில் 7 பேர் தலைநகர் சென்னையை சேர்ந்வர்களாக உள்ளனர். அதில் பெரம்பூர் தொகுதியை சேர்ந்த முதலமைச்சர் விஜய், தி.நகரை சேர்ந்த ஆனந்த், வில்லிவாக்கம் தொகுதியை சேர்ந்த ஆதவ் அர்ஜுனா, மயிலாப்பூர் தொகுதியை சேர்ந்த வெங்கடராமன் மற்றும் எழும்பூர் தொகுதியை சேர்ந்த ராஜ்மோகன் ஆகியோர் அடங்குவர். இதுபோக புதியதாக இன்று பொறுப்பேற்றுள்ளவர்களில் வேளச்சேரி தொகுதியை சேர்ந்த குமார், ஆர்.கே. நகரைச் சேர்ந்த மரிய வில்சன் ஆகியோரும் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களே ஆவர். அதாவது ஐந்தில் ஒரு பங்கு அமைச்சர்கள் சென்னை மாவட்டத்தில் இருந்து மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மற்ற மாவட்டங்களுக்கான அமைச்சர்கள்:

  • திருப்பூர் – அவிநாசி சட்டமன்ற உறுப்பினர் கமலி
  • நாமக்கல் – குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் விஜயலட்சுமி, ராசிபுரம் சட்டமன்ற உறுப்பினர் லோகேஷ் தமிழ் செல்வன், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் அருண் ராஜ்
  • காஞ்சிபுரம் – காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் ரஞ்சித் குமார், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் தென்னரசு
  • தஞ்சாவூர் – கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் வினோத்
  • ராமநாதபுரம் – திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் ராஜீவ்
  • கடலூர் – கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார்
  • ராணிப்பேட்டை – அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜ்
  • விருதுநகர் – ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரி, சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் கீர்த்தனா
  • கன்னியாகுமரி – கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஸ் குமார் (காங்.,)
  • ஈரோடு – ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் விஜய் பாலாஜி, கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினர்
  • சேலம் – சேலம் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் விஜய் தமிழன் பார்த்திபன்
  • திருச்சி – ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ்
  • மதுரை – மேலூர் சட்டமன்ற உறுப்பினர் விஸ்வநாதன் (காங்.,), திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ஆர். நிர்மல்குமார்
  • சிவகங்கை – காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் பிரபு
  • கோவை – கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் சம்பத் குமார், கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் விக்னேஷ்
  • புதுக்கோட்டை – அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் மொஹமது பர்வேஸ்
  • செங்கல்பட்டு – தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் சரத்குமார்

    மாவட்ட வாரியாக அமைச்சர்கள்:

    தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் ஒட்டுமொத்தமாக 18 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மட்டுமே அமைச்சரவை பதவியில் இடம்பெற்றுள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக நாமக்கல் மாவட்டத்தில் அதிகபட்சமாக 3 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். இதுபோக காஞ்சிபுரம், விருதுநகர், ஈரோடு, மதுரை மற்றும் கோவை மாவட்டங்களில் இருந்து இரண்டு அமைச்சர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Related Post

மகா சிவராத்திரி: ராமேசுவரம் கோவிலில் நாளை இரவு முழுவதும் நடை திறந்திருக்கும்

Posted by - February 17, 2023 0
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் மாசி சிவராத்திரி திருவிழா கடந்த 11-ந்தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகள், சாமி புறப்பாடு நடைபெற்று வருகின்றது.…

வரி ஏய்ப்பு புகார் – போத்தீஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை!

Posted by - September 12, 2025 0
தமிழகத்தில் போத்தீஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு முக்கிய…

சட்டென்று மாறிய வானிலை… கொட்டித் தீர்த்த கனமழை… இன்று எங்கெல்லாம் மழை தெரியுமா?

Posted by - May 31, 2023 0
சென்னை மற்றும் புறநகரில் குளிர்ந்த காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் நேற்று இரவு கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் மின்சாரம்…

கழுத்து பகுதியில் Tattoo குத்திய இளைஞர் பலி.. நடந்தது என்ன? எய்ட்ஸ், ஹெபடைட்டிஸ் பி பரவும் ஆபத்து

Posted by - September 7, 2023 0
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே கழுத்து பகுதியில் டாட்டூ குத்தியதால் இளைஞர் ஒருவர் பலியான சோக சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து மருத்துவர்கள் விளக்கியுள்ளார்கள். அந்த…

முருங்கை மரம்.. வேர் முதல் காய் வரை கொட்டிக்கிடக்கும் அதிசயம்.. ஆச்சரிய குச்சிகளும், அதிசய பூக்களும்

Posted by - December 21, 2023 0
சென்னை: முருங்கை என்றாலே பெண்களுக்கு அருமருந்தாகக்கூடிய கீரையாகும்.. முருங்கை ஈர்க்குகள் பெண்களுக்கு எப்படி உதவுகிறது தெரியுமா? முருங்கை விதைகளை வைத்து என்ன செய்யலாம்? பெண்களுக்கு 45 வயதாகிவிட்டாலே…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *