அதிமுகவில் இணைந்தது ஏன்?

115 0

அதிமுகவில் இணைந்த நாம் தமிழர் கட்சி பிரமுகர் காளியம்மாள்: ஆட்சி மாற்றம், மரண தண்டனை குறித்த பரபரப்பு பேச்சு!

நாம் தமிழர் கட்சியில் பணியாற்றி வந்த காளியம்மாள் ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு அதிமுகவில் இணைந்துள்ளார். அடிமட்டத் தொண்டர் ஒருவர் உயர் பதவிக்கு வர முடியும் என்பதால் அதிமுகவில் இணைந்துள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், காளியம்மாள் இன்று இணைந்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

அதிமுகவில் சேர்ந்தது ஏன்?

’’வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், ஆட்சி மாற்றத்தை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.  விலைவாசிகள் கடுமையாக உயர்ந்திருக்கின்றன. அடிமட்டத் தொண்டர் ஒருவர் உயர் பதவிக்கு வர முடியும் என்பதால்தான் அதிமுகவில் இணைந்துள்ளேன். அதிமுகவில் இருந்து எனது அரசியல் பயணம் தொடரும்.

2013ஆம் ஆண்டு வரை தனியார் தொண்டு நிறுவனங்களில் பணியாற்றி வந்தேன். 2013 முதல் கடலோர மக்களுக்காகக் களத்தில் பணியாற்றி வந்தேன். அண்மையில் அரசியல் கட்சியில் இருந்துதான் விலகினேன். மக்கள் பணியைக் கைவிடவில்லை.

எனக்கும் அரசியல் தளத்தில் இருந்து கொஞ்சம் ஓய்வு தேவைப்பட்டது. என் குழந்தைகளிடம் இந்த ஓராண்டாய் நேரம் செலவிட்டேன்.

கட்சியின் தலைமை முடிவு செய்தால், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவேன். தமிழ்நாட்டில் பெண் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு ஆகிய பிரச்சினைகள் உள்ளன.

மரண தண்டனை அளிக்க வேண்டும்

12 வயது, 14 வயது எனக் குழந்தைகள் மீது பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடும் கொடூரர்களுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும். நான் மரண தண்டனைக்கு எதிரானவள்தான். எனினும் இத்தகைய கயவர்களைக் கழுவில் ஏற்றினால்தான் குற்றங்கள் குறையும்.’’

இவ்வாறு காளியம்மாள் தெரிவித்தார்.

Related Post

காரைக்குடியில் ஓட்டு கூட கிடையாது.. இவர் வேட்பாளரா? – சீமானை விளாசிய கார்த்தி சிதம்பரம்!

Posted by - April 7, 2026 0
சீமானின் மாமனார் மறைந்த காளிமுத்து 1998ல் சிவகங்கை தொகுதியில் அதிமுக சார்பில் நின்றார். நான் ஜெயித்தாலும், தோற்றாலும் காரைக்குடிக்கு வருவேன் என சொன்னார். அந்த தேர்தலில் காளிமுத்து…

“குற்ற உணர்ச்சி இல்லை.. ஆத்திசூடி அறியாதவர் கனவுலகில் ஆட்சி செய்கிறாரா?” விஜய்-யை கடுமையாக சாடிய வைகோ

Posted by - November 6, 2025 0
“குற்ற உணர்ச்சி இல்லை.. ஆத்திசூடி அறியாதவர் கனவுலகில் ஆட்சி செய்கிறாரா?” விஜய்-யை கடுமையாக சாடிய வைகோ பொது வாழ்வில் ஆத்திச்சூடியைக்கூட அறியாத விஜய் ஆட்சிக்கு வந்ததைப்போலவேகனவுலகத்திலும் எப்படி…

தன்னெழுச்சியாக சேரும் தவெக – அதிமுக தொண்டர்கள்! – கனவு சிதைவதால் கலங்கும் தினகரன்

Posted by - October 10, 2025 0
கரூர் சம்பவத்தில் இத்தனை நாளும் விஜய் மீது பழி சுமத்தாமல் பொதுவாகப் பேசி வந்த அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் திடீரென விஜய் மீது பாய ஆரம்பித்திருக்கிறார். கூடவே,…

5 ஆண்டுகால ஆட்சியில் மக்கள் பணத்தை கொள்ளையடித்தது மட்டுமே திமுகவின் சாதனை – முன்னாள் அமைச்சர் தங்கமணி

Posted by - April 1, 2026 0
கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் மக்கள் பணத்தை கொள்ளையடித்தது மட்டுமே திமுகவின் சாதனை என, முன்னாள் அமைச்சர் தங்கமணி விமர்சித்துள்ளார். குமாரபாளையம் தொகுதி வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான…

500 சவரன் தங்கம், வெள்ளி, ரூ.537 கோடி பணம், கார்கள்… தவெக விஜய் சொத்து மதிப்பு தெரியுமா?

Posted by - March 30, 2026 0
தங்கம், வெள்ளி, பணம், கார்கள்… தவெக தலைவர் விஜயின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? தவெக தலைவர் விஜயின் அசையும் சொத்து மதிப்பு ரூ.404 கோடி (404,58,57,196)…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *