ஆசிரியர்கள் வயிற்றில் பாலை வார்த்த அமைச்சர்; தமிழ்நாடு அரசு அதிரடி முடிவு! பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு

195 0

TET தேர்வு வழக்கில், தமிழ்நாடு அரசு சார்பாக சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

TET தேர்வு வழக்கில், தமிழ்நாடு அரசு சார்பாக சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ஆசிரியர் பணியில் தொடரவும் பதவி உயர்வு பெறவும் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்று அண்மையில் செப்டம்பர் 1ஆம் தேதி அன்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. அதேபோல ஆசிரியர்கள் ஓய்வு பெற 5 ஆண்டுகள் மட்டுமே இருந்தால் அவர்கள் பணியை தொடரலாம் என்றும் இல்லையெனில் டெட் தேர்வில் 2 ஆண்டுகளுக்குள் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்து இருந்தது.

வேலையை விட்டு வெளியேறலாம்

ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை எனில் வேலையை விட்டு வெளியேறலாம் அல்லது சலுகைகளுடன் கட்டாய ஓய்வு பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களில் டெட் தேர்வை கட்டாயம் ஆக்க முடியுமா? அதேபோல சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களின் கல்வி உரிமையை டெட் தேர்வு பாதிக்குமா? என்று விசாரிக்கவும் உச்ச நீதிமன்றம் சார்பில் அரசியல் சாசன அமர்வுக்கு பரிந்துரை அளிக்கப்பட்டது.

இதனால் 2012-ல் தமிழ்நாட்டில் டெட் தேர்வு கட்டாயம் ஆக்கப்படுவதற்கு முன்பு பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். எனினும் அரசு ஆசிரியர்கள் பக்கமே நிற்கும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி கூறி இருந்தார். ஆசிரியர் சங்கங்களுடனும் அவர் ஆலோசனை நடத்தி இருந்தார்.

உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல்

இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்படும் என்று அமைச்சர் அறிவித்துள்ளார். இதுதொடர்பான செய்திக் குறிப்பில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அப்படியே பின்பற்றினால், தமிழ்நாட்டில் பெரிய அளவில் கட்டாய ஓய்வு அளிக்கப்பட வேண்டி இருக்கும் என்றும் இது ஆசிரியர்கள் பற்றாக்குறையை ஏற்படுத்தி, லட்சக்கணக்கான தமிழக மாணவர்களின் கற்றல் திறனை பாதிக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

குறுகிய கால இடைவெளியில் புதிய, தகுதி வாய்ந்த ஆசிரியர்களை நியமிக்க முடியாது என்றும் அது வகுப்பறை கற்றலை பாதிப்பதுடன், பள்ளி அமைப்பின் நிலைத் தன்மையை பாதிக்கும் என்றும் அமைச்சர் அன்பில் கவலை தெரிவித்துள்ளார்.

புதிய ஆசிரியர் நியமனங்களுக்கு மட்டுமே

அதேபோல, ‘’கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, டெட் தேர்வு கட்டாயம் என்பது, புதிய ஆசிரியர் நியமனங்களுக்கு மட்டுமே. ஏற்கெனவே ஆசிரியர்களாக உள்ளவர்களுக்கு அது பொருந்தாது’’ என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Post

லாக்கப் மரணங்களை தடுக்க வக்கில்லை; இழப்பீடு வழங்கவும் மனமில்லை!- இபிஎஸ்

Posted by - July 14, 2025 0
சென்னை: அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் சங்கரன்கோவிலில் காவல்துறையினர் தாக்கியதில்…

பணிநேரம் முடியும்வரை ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை.. அதிரடி உத்தரவு

Posted by - March 29, 2023 0
விடைத்தாள் திருத்தும்போது தேவையின்றி பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பிளஸ் 2 விடைத்தாள்களை திருத்தும்போது ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு தேர்வுகள்…

மெட்ராஸ் ஐ: அறிகுறியும்.. தற்காப்பு முறைகளும்.. Madras eye

Posted by - December 2, 2022 0
சில வைரஸ் தொற்றுகள் கருவிழியை பாதிக்கக்கூடியவை. ஒருபோதும் சுய மருத்துவம் மேற்கொள்ளக்கூடாது. மழைக் காலங்களில் அதிகமாக பரவும் நோய்த்தொற்றுகளுள் ஒன்று, ‘மெட்ராஸ் ஐ’. கண் வெண்படல அழற்சி…

சொத்து வரியை வரும் 30-ந்தேதிக்குள் செலுத்த வேண்டும்: சென்னை மாநகராட்சி உத்தரவு

Posted by - September 27, 2023 0
சென்னை: சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி என்பது பிரதான வருவாயாக உள்ளது. இதனால், நடப்பு அரை நிதியாண்டுக்கான சொத்து வரியை செலுத்த சென்னை மாநகராட்சி கடந்த ஜூன்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *