கல்பாக்கம் முதல் சென்னை வரை பிளான்.. மார்ச் 4-ல் மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வருகை.

201 0

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மார்ச் 4 ஆம் தேதி நடைபெறவுள்ள விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார்

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரதமர் மோடி மார்ச் மாதம் இரண்டு முறை தமிழ்நாடு வருகிறார். இதில், சென்னை நந்தனத்தில் நடைபெறும் பாஜக பொதுக் கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. இதில், தமிழ்நாட்டில் தனி அணியாக போட்டியிடும் வகையில் அரசியல் கட்சிகளுடன் பாஜக பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. பாஜகவை வலுப்படுத்தும் விதமாக பிரதமர் மோடியும் கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பரப்புரைக் கூட்டங்களில் பங்கேற்று பேசினார். முதல் நாள் பயணத்தில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரையின் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்றார். இரண்டாம் நாளில் தூத்துக்குடி மற்றும் நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். அத்துடன், முடிவுற்ற பணிகளை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடி மார்ச் மாதம் இரண்டு முறை தமிழ்நாடு வர உள்ளார். இதில், மார்ச் 4 ஆம் தேதி தமிழ்நாடு வருகை தரும் பிரதமர் மோடி, அன்றைய தினம் செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அதன் தொடர்ச்சியாக சென்னை நந்தனத்தில் மாலை 5.15 மணிக்கு நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்திலும் உரையாற்ற உள்ளார். மேலும், மார்ச் மாத மத்தியிலும் பிரதமர் மோடி தமிழ்நாடு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென் மாவட்டத்தில் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்கும் வகையில் இந்த பயணத் திட்டம் இருக்கும் என்று தெரிகிறது.

இதனிடையே, பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் நாராயணன் திருப்பதி, லலிதா குமாரமங்கலம் உள்ளிட்டோர் நாளை டெல்லி செல்ல உள்ளனர். அங்கு பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பி.எல். சந்தோஷ் ஆகியோரை சந்தித்து நாடாளுமன்றத் தேர்தல் குறித்து ஆலோசிக்க உள்ளனர்.

Related Post

என்னுடைய 90 விநாடி பேச்சுக்கே காங்கிரஸ் பீதியாகி உள்ளது – பிரதமர் மோடி

Posted by - April 24, 2024 0
தனது 90 விநாடி பேச்சு காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் மக்களவைத் தேர்தல் 7 கட்டமாக நடைபெறும்…

கேபிள் டிவி முடிஞ்சது.. Jio ஆபர்.. 800 டிவி சேனல்.. குவியுது கூட்டம் ரூ.1000-க்கு.. 12 ஓடிடி.. வாய்ஸ் கால்கள்!

Posted by - December 4, 2024 0
#jio #jioairfiber #jiosetupbox #jiotv #jiocinema #ipl2025 ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனத்துக்கு ஆஃபர்களை கொடுக்க சொல்லித் தரவா வேண்டும் என்று நினைக்கும்படி ரூ.1000-க்கும் கம்மியான…

2 ரெயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்து.. 15 பேர் உயிரிழப்பு

Posted by - October 24, 2023 0
வங்காளதேசத்தில் இரண்டு ரெயில்கள் மோதிக் கொண்ட விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமுற்றனர். இந்த விபத்தில் உயிரிழப்புகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தகவல்கள்…

படுக்கையில் கட்டியணைத்தபடி கொடிய விஷப்பாம்புகளுடன் பயமின்றி தூங்கும் சிறுமி

Posted by - September 4, 2023 0
புதுடெல்லி: பாம்பு என்றாலே படையும் நடுங்கும் என்பார்கள். சிலர் பாம்பை கையால் பிடித்தாலே பெரிய சாகசமாக நினைப்பது உண்டு. ஆனால் இதற்கெல்லாம் மேலாக அரியானா என்ற சிறுமி…

ஹிண்டன்பர்க் அறிக்கையால் இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி…. முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்….

Posted by - August 12, 2024 0
இந்திய பங்குச்சந்தைகள் தற்போது ஆட்டம் காணத் தொடங்கியுள்ளன. ஹிண்டன்பர்க், அதானி விவகாரத்தினால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதாவது அதானி குழும நிறுவனங்களின் செபி தலைவர் முதலீடு இருப்பதாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *