காதலை கண்டித்ததால் ஆத்திரம்- தம்பியை கொன்று 20 துண்டுகளாக வெட்டி ஏரியில் வீசிய அக்காள்

258 0

ஓசூர்:

கர்நாடக மாநிலம், விஜயபுரா மாவட்டம் சிந்திகி தாலுகாவுக்கு பட்ட தேவனாங்காவ் கிராமத்தை சேர்ந்தவர் சித்தப்பா பூசாரி. இந்த கிராமம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ளது. சித்தப்பா பூசாரி மகள் பாக்கிய ஸ்ரீ (31).

இவரும் அதே பகுதியில் உள்ள சாசாபாலு கிராமத்தை சேர்ந்த சங்கரப்பா தளவார் (32) என்பவரும் கல்லூரியில் படித்த போதிருந்தே காதலித்து வந்தனர். பல ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் கடந்த 2015ம் ஆண்டு திருமணம் செய்ய முடிவெடுத்த போது, சாதியை காரணம் காட்டி அவர்களது பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் பிரிந்து விட்டனர்.காதலை கண்டித்ததால் ஆத்திரம்- தம்பியை கொன்று 20 துண்டுகளாக வெட்டி ஏரியில்  வீசிய அக்காள் | Tamil News Jigani near youth murder case police inquiry

சங்கரப்பா தளவார் திருமணமாகி 6 மாதத்தில் மனைவியை பிரிந்த பின்னர் தனது கிராமத்திலிருந்து கர்நாடக மாநில எல்லையான ஜிகினி தொழிற்பேட்டையில் வேலைக்கு சேர்ந்தார். அப்பகுதியில் தனி அறை எடுத்து தங்கிய அவர், தனது முன்னாள் காதலி பாக்கியஸ்ரீயுடன் அவ்வப்போது போனில் பேசி வந்துள்ளார்.

அவர்களுக்குள் இருந்த நெருக்கம் காரணமாக ஜிகினிக்கு வருமாறு பாக்கியஸ்ரீயை சங்கரப்பா அழைத்துள்ளார். அதன்பேரில் அவரும் ஜிகினிக்கு வந்துள்ளார். இருவரும் ஒரே அறையில் குடும்பம் நடத்தி வந்துள்ளனர். மேலும், ஜிகினி தொழிற்பேட்டையில் வெவ்வேறு தொழிற்சாலைகளில் வேலை செய்தும் வந்துள்ளனர்.

இந்நிலையில் பாக்கியஸ்ரீயின் தம்பி லிங்கராஜ் (22), கடந்த 2015ம் ஆண்டு தனது அக்காவை தேடி ஜிகினி பகுதிக்கு வந்துள்ளார். ஜிகினியில் பாக்கியஸ்ரீ, அவரது முன்னாள் காதலன் சங்கரப்பாவுடன் சேர்ந்து வாழ்ந்து வருவதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார். சங்கரப்பாவிற்கு திருமணம் ஆகிவிட்டதால், அவருடன் இருக்க வேண்டாம் என பாக்யஸ்ரீயை பலமுறை லிங்கராஜ் எச்சரித்துள்ளார். ஆனாலும் பாக்கியஸ்ரீ அதனை கேட்கவில்லை.

இதனையடுத்து 3 பேரும் ஒரே அறையில் தங்கி இருந்தபோது பாக்கியஸ்ரீயுடன் அடிக்கடி லிங்கராஜ் சண்டை போட்டு வந்துள்ளார். தங்களது உறவுக்கு லிங்கராஜ் இடையூறாக இருப்பதாக கருதிய பாக்கியஸ்ரீ, சங்கரப்பாவுடன் சேர்ந்து லிங்கராஜை அடித்து கொலை செய்து, அவரது உடலை 20 துண்டுகளாக வெட்டி 3 பையில் அடைத்து அதனை ஜிகினி மற்றும் அருகில் உள்ள மஞ்சன ஹள்ளி ஏரியில் இருவரும் வீசியுள்ளனர்.

பின்னர் பாக்கியஸ்ரீயும், சங்கரப்பாவும் ஜிகினியில் இருந்து தப்பி, மகராஷ்டிரா மாநிலம், நாசிக்பகுதியில் கடந்த 8 ஆண்டுகளாக தலைமறைவாக வாழ்க்கை நடத்தி வந்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து ஜிகினி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், அவர்கள் இருவரும் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருப்பதை அறிந்து நேற்று முன்தினம் போலீசார் அங்கு சென்று பாக்கியஸ்ரீ (39), மற்றும் சங்கரப்பா (40) ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்களை சிறையில் அடைத்தனர்.

Related Post

சிறையில் இருந்து பரோலில் வந்து தாயாரின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற சவுக்கு சங்கர்

Posted by - April 15, 2026 0
சென்னை: தனது தாயாரின் இறு​திச் சடங்​கில் பரோலில் வந்து சவுக்கு சங்​கர் பங்​கேற்​றார். சவுக்கு சங்​கர் தாயாரின் மறைவுக்கு பழனி​சாமி உட்பட பல்​வேறு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் இரங்​கல்…

இதய நோய், புற்றுநோய்-ன்னு எதுவும் வரக்கூடாதா? அப்ப இந்த எண்ணெயை உங்க சமையலுக்கு யூஸ் பண்ணுங்க..

Posted by - October 27, 2023 0
தற்போது சமையலில் பயன்படுத்த ஏராளமான எண்ணெய்கள் கடைகளில் விற்கப்படுகின்றன. இந்த எண்ணெய்களைப் பார்க்கும் போது எந்த எண்ணெயை சமையலுக்கு பயன்படுத்தினால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்ற ஒரு…

கண்டுகொள்ளாத தமிழக அரசு:சம வேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

Posted by - December 28, 2022 0
சென்னை: ஊதிய முரண்பாட்டை களையக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் டிபிஐ வளாகத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009 மே 31-ம் தேதி…

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு, மாறி மாறி வெளுத்துக்கொண்ட ஸ்டாலின்-இபிஎஸ் – இப்படியா பண்றது?

Posted by - May 13, 2025 0
பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்பை அனைவரும் வரவேற்றுள்ள நிலையில், தமிழ்நாட்டின் இரு தலைவர்களுக்கிடையே எக்ஸ் தளத்தில் வார்த்தைப் போர் மூண்டுள்ளது. ஸ்டாலின், இபிஎஸ்-ன் பதிவுகள் என்ன.? பார்க்கலாம்……

முருகன் மாநாட்டால் திமுக அதிர்ச்சி – அதிமுக வாய் திறக்காது ஏன்? அடுக்கடுக்கான கேள்வி

Posted by - June 23, 2025 0
பாஜகவின் முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்களின் செயல்பாட்டினை, திமுகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பாஜகவின் முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்களின் செயல்பாடு,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *