காஷ்மீருக்கு அடுத்தபடியாக கொடைக்கானலில் குங்குமப்பூ விளைவித்து விவசாயி சாதனை

215 0

கொடைக்கானல்:

மலைகளின் இளவரசி எனப்படும் கொடைக்கானல் மலைக்காய்கறிகள் விளைச்சலுக்கு அதிக பெயர் பெற்றது. இங்கு முக்கிய காய்கறிகளான உருளைக்கிழங்கு, பீட்ரூட், காலிபிளவர், பீன்ஸ், காரட், புரோக்கோலி போன்ற பல்வேறு வகையான காய்கள் பயிரிடப்பட்டு வருகிறது. உலக அளவில் கர்ப்பிணி பெண்கள் தங்கள் குழந்தைகள் சிவப்பாக பிறக்க குங்குமப்பூவை பாலில் கலந்து குடிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.Pride of Kashmir now comes to Kodaikanal | Tamil Nadu News - The Hindu
இந்த குங்குமப்பூ உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள நாடுகள் ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான். அடுத்து இந்தியாவில் நமது காஷ்மீர் மாநிலம் ஆகும். ஆனால் இங்கு உற்பத்தி செய்யப்படும் குங்குமப்பூ குறைந்த அளவில் உள்ளதால் ஆண்டுக்கு பல ஆயிரம் கிலோ வெளிநாட்டில் இருந்து வாங்கும் நிலை உள்ளது.

தற்பொழுது இந்தியாவில் காஷ்மீருக்கு அடுத்தபடியாக மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கொடைக்கானல் மேல் மலை கிராமமான கவுஞ்சி மற்றும் பூண்டி மலை கிராமங்களில் மூர்த்தி என்ற விவசாயி கடந்த 2014ம் ஆண்டு முதல் தொடர்ந்து முயற்சி செய்து காஷ்மீரிலிருந்து குங்குமப்பூ விதை கிழங்கு வாங்கி பசுமை குடில் அமைத்து விவசாயம் செய்தார். 9 ஆண்டு கால முயற்சியில் தற்பொழுது வெற்றியும் கண்டுள்ளார். தனது ஒரு ஏக்கர் நிலத்தில் குங்குமப்பூ பயிரிட்டு சாகுபடி செய்தார்.

இது குறித்து அவர் கூறும்போது, இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் இதற்கான பயிற்சி மற்றும் அறிவுரைகளின்படி தனது முயற்சியை தொடர்ந்ததாக தெரிவித்தார். மேலும் காஷ்மீருக்கு அடுத்தபடியாக குங்குமப்பூ பயிரிட கொடைக்கானலில் சீதோஷ்ண நிலை மற்றும் குளிர் முக்கிய காரணமாக உள்ளது. ஒரு ஏக்கர் நிலத்தில் சுமார் ரூ.4 லட்சம் வரை வருவாய் ஈட்ட முடியும். ஒரு ஏக்கர் நிலத்தில் காய்கறிகள் பயிரிட்டால் சில ஆயிரங்கள் மட்டுமே கிடைக்கும்.

ஆனால் குங்குமப்பூ சாகுபடிக்கு 55 நாட்கள் முதல் 60 நாட்கள் போதுமானது. 15 கிலோ குங்குமப்பூ விதை கிழங்கு வாங்கி தற்பொழுது அதனை 40 கிலோவாக உருவாக்கி உள்ளேன். தற்பொழுது கொடைக்கானலில் விளையக்கூடிய குங்குமப்பூ காஷ்மீரை காட்டிலும் தரம் உயர்ந்ததாக உள்ளது. மேலும் கொடைக்கானலில் விளையும் குங்குமப்பூவுக்கு சந்தையில் நல்ல விலை கிடைக்கிறது. இந்த புது முயற்சியை மற்ற விவசாயிகளும் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

Related Post

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் ரூ.2½ லட்சம் லஞ்ச பணத்துடன் சிக்கிய அதிகாரி மீது வழக்குப்பதிவு

Posted by - November 4, 2023 0
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிலேகா தலைமையில் போலீசார் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு…

காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கவலைக்கிடம்? ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏவுக்கு என்னாச்சு?

Posted by - December 14, 2024 0
காங்கிரஸ் மூத்த தலைவர்  ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவிகேஸ் இளங்கோவன் உடல்நிலை கவலைக்கிடம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.எல்.ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன்…

வெறும் வேர் போதுமே.. நாடி வருபவருக்கு நலனை மட்டுமே தரும் நன்னாரி.. கல்லீரலின் நண்பன் நன்னாரி வேர்கள்

Posted by - November 25, 2023 0
சென்னை: ஒரு கொடியின் வேர், இலை, பழம் என அனைத்துமே நன்மைகளை வாரி தருகிறது என்றால் அது நன்னாரிதான்.. தலைவலி முதல் பால்வினை நோய் வரை போக்கக்கூடிய…

“நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான், கை விட மாட்டான்”.. மாஸாக புத்தாண்டு வாழ்த்து கூறிய ரஜினிகாந்த்

Posted by - January 1, 2025 0
ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த வேட்டையன் மாபெரும் வெற்றியடைந்தது. இதை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ்…

பிளஸ் 2 மாணவர்களே.. முன்கூட்டியே வெளியாகும் தேர்வு முடிவுகள்- எப்போ தெரியுமா?

Posted by - May 6, 2025 0
நாளை மறுநாள் ஏப்ரல் 8ஆம் தேதி காலை 9 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. தமிழகப் பள்ளிக் கல்வி வாரியத்தின்கீழ் நடைபெற்ற 12ஆம் வகுப்புப்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *