கியூஆர் கோடு, புகைப்படத்துடன் புதிய ஆதார் அட்டை!

138 0

புதுடெல்லி: ஆ​தார் அட்டை தவறாக பயன்​படுத்​தப்​படு​வதை தடுக்க வரும் டிசம்​பரில் புதிய விதி​​களை அமல்​படுத்த இந்​திய தனித்​துவ அடை​யாள ஆணை​யம் (யுஐடிஏஐ) திட்​ட​மிட்டுள்​ளது. இதன்​படி வருங்​காலத்​தில் ஆதார் அட்​டை​யில் புகைப்​படம், கியூஆர் கோடு மட்​டுமே இடம்​பெறும்.

இதுகுறித்து, யுஐடிஏஐ தலைமை செயல் அதி​காரி புவனேஷ் குமார் அண்​மை​யில் ஆன்​லைன் மூலம் நடை​பெற்ற கருத்தரங்கில் கூறிய​தாவது: அரசு, தனி​யார் நிறு​வனங்​கள் சார்பில் பல்​வேறு பணி​களுக்​காக பொது​மக்​களிடம் ஆதார் அட்டை நகல்​கள் கோரப்​படு​கிறது. இதன்​மூலம் தனி​நபர், நிறுவனங்​களுக்கு பொது​மக்​களின் ஆதார் விவரங்​கள் கிடைக்கின்​றன. குறிப்​பாக ஓட்​டல்​கள், மொபைல் போன் சிம் விற்பனை​யாளர்​கள், கருத்​தரங்​கு​களை நடத்​து​வோருக்கு ஆதார் விவரங்​கள் கிடைக்​கின்​றன. இதை சிலர் தவறாக பயன்​படுத்தி ஆன்​லைன் மோசடிகளில் ஈடு​படு​கின்​றனர்.

ஆதார் அட்டை தவறாக பயன்​படுத்​தப்​படு​வதை தடுக்க வரும் டிசம்​பரில் புதிய விதி​கள், மாற்​றங்​களை அமல்​படுத்த திட்​ட​மிட்டு உள்​ளோம். முதல்​கட்​ட​மாக ஆதார் செயலி அறி​முகம் செய்​யப்பட உள்​ளது. தற்​போது நடை​முறை​யில் உள்ள எம்​ஆ​தா​ருக்கு பதிலாக புதிய செயலி அறி​முகம் செய்​யப்​படும். இதன்​மூலம் எந்​தவொரு இடத்​தி​லும் பொது​மக்​கள் ஆதார் நகலை கொடுக்க வேண்​டிய அவசி​யம் இருக்​காது. ஆதார் செயலி வாயி​லாக டிஜிட்​டல் முறையில் தகவல்​களை அளிக்க முடி​யும்.

அடுத்த கட்​ட​மாக ஆதார் அட்​டை​யில் புகைப்​படம் மற்​றும் கியூஆர் கோடு மட்​டுமே அச்​சிட்டு வழங்​கும் திட்​டம் செயல்​படுத்தப்​படும். குறிப்​பாக 12 இலக்க எண் ஆதார் அட்​டை​யில் அச்சிடப்​ப​டாது. எனினும் அட்​டை​தா​ரரின் பெயர் இடம்​பெற வாய்ப்​பிருக்​கிறது. ஆனால் நிச்​சய​மாக முகவரி இடம்​பெறாது. பிரத்​யேக செயலி அல்​லது யுஐடிஏஐ நிறு​வனத்​தால் அங்கீகரிக்கப்​பட்ட கரு​வி​யால் மட்​டுமே கியூஆர் கோடை ஸ்கேன் செய்து தகவல்​களை பெற முடி​யும். இதன்​மூலம் மோசடிகள் முழுமை​யாக தடுக்​கப்​படும்​.இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

Related Post

டெல்லி கார் வெடிப்பு – அவசர தாக்குதலா? திட்டமிட்ட சதியா? சிக்கும் டாக்டர்கள் – ஷாக்கிங் அப்டேட்ஸ்

Posted by - November 11, 2025 0
Redfort Car Blast: டெல்லியில் நடந்த கார் வெடிப்பு அவசர தாக்குதலா? திட்டமிட்ட சதியா? என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. Redfort Car Blast: டெல்லியில் வெடித்த காரை…

எதிர்த்தா பேசுறீங்க..! மாநில அரசுகளின் உரிமையை பறித்த மத்திய அரசு – இனி சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு..!

Posted by - February 22, 2025 0
சிபிஎஸ்இ பள்ளிகளை தொடங்க இனி மாநில அரசுகளின் அனுமதி அவசியமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளின் மேலும் ஒரு உரிமையை பறிக்கும் விதமாக சிபிஎஸ்இ அமைப்பின் அறிவிப்பு…

Gpay, Phonepay பயன்படுத்துறீங்களா..? வருது புதிய கட்டுப்பாடுகள்!

Posted by - December 20, 2022 0
இதுவரை எத்தனைமுறை வேண்டுமானாலும் யுபிஐ ஆப்கள் மூலம் பணம் அனுப்பி வந்த நிலையில், தற்போது பரிவர்த்தனைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் யுபிஐ ஆப்கள் மூலம் நடைபெறும்…

Post Office அக்கவுண்ட்டில் பணம் கட்ட க்யூவில் நிற்க வேண்டியிருக்கா..? வீட்டில் இருந்தே எந்நேரமும் பணம் செலுத்த எளிய வழி இதோ!

Posted by - December 21, 2022 0
போஸ்ட் ஆஃபிஸ் அட்டகாசமான வழி ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. இனி நீங்கள் வீட்டிலிருந்தபடியே போஸ்ட் ஆஃபிஸில் பரிவர்த்தனை செய்யலாம். சேமிப்பு என்பது மிகவும் அவசியமானதாக இருக்கிறது. பணத்தை செலவு…

ஆந்திராவில் முதியவர் கிட்னியில் 3 ஆயிரம் கற்கள்- டாக்டர்கள் அதிர்ச்சி

Posted by - March 11, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள மதனப்பள்ளி பகுதியை சேர்ந்த 75 வயது முதியவர் ஒருவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. அவரை அங்குள்ள தனியார் மருத்துவமனை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *