சட்டப்பேரவையின் கதவுகள் மூடி ஆளுநருக்கு எதிராக தீர்மானம்: காரணம் என்ன தெரியுமா?

246 0

சட்டப்பேரவை விதிகள் 287ன் கீழ், எந்த சட்டமன்ற விதியையாவது நிறுத்திவைக்க வேண்டும் என்று கோரும் தீர்மானத்தை  பேரவைத் தலைவரின் அனுமதியுடன்  உறுப்பினர் எவரேனும் மொழியலாம்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் தொடர்பான தீர்மானம் கொண்டு வரப்படுவதற்கு முன்பு, பேரவை விதிகளில் ஆளுநர் தொடர்பான சில பதங்களை நிறுத்தி வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரசியல் சாசனப் பதவிகளான குடியரசுத் தலைவர், ஆளுநர் தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் விவாதிப்பது தொடர்பாக சில விதிகள் உள்ளன. அதன்படி, விதி எண் 92ன் ஏழாவது பிரிவில், உறுப்பினர் ஒருவர் பேசுகையில், குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசக் கூடாது. இந்த நிலையில், பேரவையில் ஆளுநருக்கு எதிரான தனித் தீர்மானத்தை கொண்டு வர பேரவை விதிகள் 92 மற்றும் 287-ல் ஆளுநர் தொடர்பான சில பதங்களை நிறுத்திவைத்து, பேரவை முன்னவரான துரைமுருகன் தீர்மானம் கொண்டு வந்தார்.

இந்த தீர்மானத்திற்கு வாக்கெடுப்பு நடத்த பேரவையின் கதவுகள் மூடப்பட்டன. அப்போது பாஜக எம்.எல்.ஏ.க்கள் வெளியே செல்ல முற்பட்ட நிலையில் அனுமதிக்கப்படவில்லை. தொடர்ந்து நடைபெற்ற வாக்கெடுப்பில் பாஜகவைச் சேர்ந்த காந்தி, சரஸ்வதி ஆகியோர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தனர்.

சட்டப்பேரவை விதிகள் 287ன் கீழ், எந்த சட்டமன்ற விதியையாவது நிறுத்திவைக்க வேண்டும் என்று கோரும் தீர்மானத்தை  பேரவைத் தலைவரின் அனுமதியுடன் உறுப்பினர் எவரேனும் முன்மொழியலாம். கூட்டத்திற்கு வந்திருந்து வாக்களிக்கும் (3/4 of the total number of members present and voting at the meeting) மொத்த உறுப்பினர்களில் நான்கில் மூன்று பகுதியினரின் ஆதரவுடன் தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்படவேண்டும்.

Related Post

போதைப் பழக்கமே குற்றங்களை எளிமையாக்குகிறது – இயக்குநர் பா.ரஞ்சித் வேதனை

Posted by - March 9, 2024 0
நாட்டில் நடக்கும் பாதி குற்றங்களுக்கு காரணம் போதை பழக்கம் தான் என்றும் குற்றங்களை எளிமையாக செய்ய போதை ஒரு ஆயுதமாக இருப்பதாக இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். ஊர்வசி…

“பண்பாடு இல்லாமல் பேசுவதால் வேதனை” – ஈபிஎஸ் மீது முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்!

Posted by - November 13, 2024 0
அதில், ஆட்சியைப் பற்றி அரசியல் களத்தில் வைக்கப்படும் விமர்சனங்களுக்கு மக்களின் முகமலர்ச்சியே பதில் என்று குறிப்பிட்டுள்ளார். அநாகரிகமாகப் பேசுவதையே கொள்கையாகக் கொண்டிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் உடன்…

திக் திக் டிட்வா…சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் – வெதர்மேன் அலர்ட்

Posted by - November 29, 2025 0
டிட்வா புயல் காரணமாக தென் மாவட்டங்களில் மழையானது வெளுத்து வாங்கிய நிலையில், இன்று டெல்டா மாவட்டங்களிலும் நாளை முதல் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் கன மழைக்கான…

காதலை கண்டித்ததால் ஆத்திரம்- தம்பியை கொன்று 20 துண்டுகளாக வெட்டி ஏரியில் வீசிய அக்காள்

Posted by - March 21, 2023 0
ஓசூர்: கர்நாடக மாநிலம், விஜயபுரா மாவட்டம் சிந்திகி தாலுகாவுக்கு பட்ட தேவனாங்காவ் கிராமத்தை சேர்ந்தவர் சித்தப்பா பூசாரி. இந்த கிராமம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ளது.…

ஆளுநரை சந்தித்த விஜய்! கைதான புஸ்ஸி ஆனந்த்.. தவெகவில் பரபரப்பு

Posted by - December 30, 2024 0
பொதுமக்களிடம் தவெக தலைவர் விஜய் எழுதிய கடிதத்தை வழங்கிய தவெக கட்சியினர் மற்றும் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை போலீசார் கைது செய்தனர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *