தீபாவளி அன்று ஏன் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் தெரியுமா?

161 0

#happydiwali #festival #india #diwalidecorations #diwaligifts #love #diwalivibes #instagram #diwalidecor #deepavali #instagood #festiveseason #fashion #diwalihampers #festivevibes #homedecor #indianfestival #trending #pixeltamil #photography #diwalicelebration #celebration #festivaloflights #bhfyp #navratri #art #pixelmedia #pixeltv #festive pixeltamil.com

 

இந்து மதத்தில் தீபாவளி பண்டிகையின் போது எண்ணெய் தேய்த்து குளிப்பது வழக்கமாக உள்ளது. அதற்கான காரணம் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.தீபாவளி பண்டிகை வந்தாலே தமிழக மக்களுக்கு கொண்டாட்டம் என்றே சொல்லலாம்.

இந்து மத நம்பிக்கையின் படி நரகாசுரனை கிருஷ்ணர் வதம் செய்த தினமே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் வரும் அமாவாசை திதியில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் நாளை அக்டோபர் 20ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.தீபாவளி என்றாலே பட்டாசும், புத்தாடைகளும் தான்.

அனைவரும் தீபாவளி என்று அதிகாலை எழுந்து புனித நீராடி புத்தாடை அணிந்துவிட்டு, பட்டாசுகள் வெடிப்பது வழக்கம். இந்த நாளில் முக்கியமான ஒரு விஷயமாக எண்ணெய் குளியல் பார்க்கப்படுகிறது.தீபாவளி அன்று காலை 3 மணியிலிருந்து 4;30 மணிக்குள் தலையில் எண்ணெய் தேய்த்து சீயக்காய் தேய்த்து வெந்நீரில் குளிக்க வேண்டும்.

தீபாவளி அன்று இந்த கங்கா ஸ்நானம் மேற்கொண்டால் கங்கையில் குளித்த பலனை பெறலாம் என்பது ஐதீகம். தீபாவளி அன்று எண்ணெயில் லட்சுமி தேவியும் ,பிரம்ம முகூர்த்த நேரத்தில் சுடு தண்ணீரில் கங்கா தேவியும் வாசம் செய்வார்கள் என்றும் சீயக்காயில் வாயு பகவான் வாசம் செய்வதாகவும் சாஸ்திரங்கள் கூறுகின்றது.

அதனால் இந்த நேரத்தை பயன்படுத்தி குளித்துவிட்டு காலை சூரிய உதயத்திற்கு முன்பு அதாவது ஆறு மணிக்கு முன்பு பூஜைகளை செய்து முடித்து விட வேண்டும். இதுவே தீபாவளி கொண்டாடும் முறையாகும். மேலும் தீபாவளி அன்று வீட்டை சுத்தம் செய்தல் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நன்னாளில் லட்சுமி குபேர பூஜை செய்வது வீட்டில் செல்வ செழிப்பை ஏற்படுத்தும் என்பதும் நம்பிக்கையாகும்.

Related Post

கருணாநிதி, ஸ்டாலினையே விஞ்சிய உதயநிதி! – எம்.எல்.ஏவாகி 19 மாதங்களில் அமைச்சர்!

Posted by - December 13, 2022 0
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்று 17 ஆண்டுகள் கழித்து 2006ல் தான் முதன்முறையாக அமைச்சரானார். சட்டமன்ற உறுப்பினரான 19 மாதங்களில் தமிழ்நாடு அமைச்சரவையில் அங்கம் வகிக்கப்போகிறார்…

புதுச்சேரி பல்கலைக்கழக மாணவியிடம் ரூ.6 லட்சம் பறிப்பு: ஆன்லைனில் நூதன மோசடி

Posted by - September 8, 2023 0
புதுச்சேரி: வடமாநிலத்தை சேர்ந்த லாவண்யா (வயது 26) என்ற பெண், புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் பி.எச்.டி. படித்து வருகிறார். இவர் ஒரு வாலிபரை காதலித்து வந்தார். காதலர்களுக்கு…

அன்றாட வாழ்வில் கணிதத்தின் முக்கியத்துவம்… தேசிய கணித தினம் இன்று…

Posted by - December 22, 2023 0
கணிதம் ஒரு சுவாரஸ்யமான பாடமாகும். நீங்கள் அதை விரும்பினாலும் அல்லது வெறுத்தாலும், வாழ்வில் குழப்பங்களை தடுத்து, ஒரு தெளிவு தருகிறது என்பதை நீங்கள் மறுக்க முடியாது. கணிதம்…

அதிமுகவை கிண்டலடித்த ஆதவ் அர்ஜுனா; போட்டுக் கொடுத்த சீமான்.!! என்ன நடந்துச்சு தெரியுமா.?

Posted by - May 31, 2025 0
ஆதவ் அர்ஜுனா அதிமுகவை கிண்டலடித்த வீடியோ வைரலான நிலையில், அதற்கு பதிலடி எங்கிருந்து வந்துள்ளது தெரியுமா.? சீமானிடமிருந்து. ஆம், அவர் ஆதவ் அர்ஜுனா குறித்த முக்கிய தகவலை…

திரைப்படங்கள் வெளியீட்டில் உதயநிதி தலையீடு… எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

Posted by - January 21, 2023 0
தமிழ்நாடு போதைப் பொருட்கள் நிறைந்த மாநிலமாக உள்ளது என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். அரியலூர் பேருந்து நிலையம் அருகே எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *