பருவமழை தீவிரம்… மழை நிலவரங்களை கண்காணித்து வரும் மாநில அவசர கால செயல்பாட்டு மையம்

285 0

சென்னை:

இலங்கையை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், வங்கக்கடலில் நிலைகொண்டு இருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகவும் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 2 தினங்களாக மழை பெய்து வருகிறது. Read all Latest Updates on and about வடகிழக்கு பருவமழை

அதன் தொடர்ச்சியாக நேற்றும் சென்னையில் காலை முதல் விட்டுவிட்டு மழை பெய்தது. பெரும்பாலான இடங்களில் திரள் மேகக்கூட்டங்கள் ஒரு சேர வந்து குவியும் இடத்தில் மழை பெய்ததை பார்க்க முடிந்தது.

அந்த வகையில் சென்னை கொரட்டூர், பாடி, அம்பத்தூர், முகப்பேர் போன்ற பகுதிகளிலும், எழும்பூர், கோடம்பாக்கம், தியாகராயநகர், அண்ணா நகர், திருவொற்றியூர், ராயபுரம், வண்ணாரப்பேட்டை போன்ற பகுதிகளிலும் விட்டு விட்டு கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் சென்னையில் பல இடங்கள் மழைநீர் சூழ காட்சி அளித்தன.

இந்நிலையில் மழை நிலவரங்களை எழிலகத்தில் உள்ள அவசரகால செயல்பாட்டு மையத்தில் இருந்து அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு தொலைபேசியில் பாதிப்பு விவரங்களை பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர். பொதுமக்களின் அழைப்புகள் உடனுக்குடன் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Related Post

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.10 ஆயிரம் வழங்கிய பிச்சைக்காரர்- நாமக்கல் கலெக்டரிடம் வழங்கினார்

Posted by - February 20, 2023 0
நாமக்கல்: நாமக்கல் பிச்சையெடுப்பவர்கள், ‘ஐயா தர்மபிரபு ஏதாவது தர்மம் பண்ணுங்க’ என்று யாசகம் பெறுவது வழக்கம். ஆனால் தமிழகத்தை சேர்ந்த ஒரு பிச்சைக்காரர் தனக்கு கிடைத்த பணத்தை…

கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாட்டங்கள் அனைத்தும் ரத்து – திமுக அறிவிப்பு

Posted by - June 3, 2023 0
கலைஞரின் 100-ஆவது பிறந்தநாள் தொடர்பாக இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சிகள் – பொதுக்கூட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக திமுக தலைமை…

மேகதாது விவகாரத்தில் சமரசம் கிடையாது.. அணை கட்ட அனுமதிக்கமாட்டோம் – அமைச்சர் துரைமுருகன்

Posted by - June 1, 2023 0
கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கு எவ்வித பேச்சுவார்த்தையிலும் தமிழ்நாடு அரசு அனுமதிக்காது என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். கர்நாடகாவின் நீர்பாசனத்துறை அமைச்சரும், துணை முதலமைச்சருமான டி.கே.சிவக்குமார்,…

டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்யும் முதல்வர் மு.க.ஸ்டாலின்

Posted by - June 9, 2023 0
டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு தூர்வாரும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்துவருகிறார். டெல்டா மாவட்டங்களில் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். குறுவை சாகுபடிக்காக…

மிஸ் பண்ணாதீங்க.. மசக்கை முதல் நுரையீரல் வரை காக்கும் சுக்கு.. சுக்குக்கு மிஞ்சிய மருந்து என்றுமில்லை

Posted by - October 16, 2023 0
சென்னை: சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை என்ற பழமொழியை நம் முன்னோர்கள் வைத்திருக்கிறார்கள் என்றால், அந்த அளவுக்கு மருத்துவ நன்மைகள் அதில் உண்டு. நன்றாக காய வைக்கப்பட்ட இஞ்சியைதான்,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *