மன்சூர் அலிகான் செயலால் நெகிழ்ந்த மக்கள்

236 0

சென்னை:

விஜயகாந்த் நடிப்பில் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் 1991-ம் ஆண்டு வெளியான ‘கேப்டன் பிரபாகன்’ படத்தில் வில்லனாக மன்சூர் அலிகான் நடித்து இருந்தார். இப்படம் மன்சூர் அலிகானுக்கு திருப்பு முனையை ஏற்படுத்தியது. அதன்பிறகு பல படங்களில் மன்சூர் அலிகான் நடித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் கண்டனங்களுக்கும், சர்ச்சையிலும் மாட்டிய மன்சூர் அலிகானின் நேற்றைய செயல் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது. நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலை உயிரிழந்தார். அவரது மறைவு செய்தி அறிந்த மன்சூர் அலிகான் விஜயகாந்த் இல்லத்திற்கு சென்றார்.

அன்று வீராப்பு பேச்சு... இன்று கைது பயம்... உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமின்  கோரும் மன்சூர் அலிகான்..! | Mansoor Ali Khan seeks anticipatory bail on  High Court - Tamil Oneindia

அங்கு விஜயகாந்த் உடலுக்கு மன்சூர் அலிகான் அஞ்சலி செலுத்தினார். இதன்பின்னர், சாலிகிராமத்தில் இருந்து கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் கொண்டு செல்லப்பட்டது. சுமார் 3 மணிநேரத்திற்கும் மேலாக பொதுமக்களின் வெள்ளத்தில் ஊர்ந்து சென்ற வாகனத்துடன் நடந்து சென்றார்.

பின்னர் விஜயகாந்த் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இரவு கடந்தும் அவரது உடலை விட்டு கொஞ்சம் கூட நகராமல் இருக்கிறார் மன்சூர் அலிகான். இன்று காலை தீவுத்திடலுக்கு விஜயகாந்த் உடல் கொண்டு செல்லப்பட்ட போதும் கூடவே சென்றார். இன்று மாலை விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யும்வரை மன்சூர் அலிகான் இருப்பார். இதன் மூலம் தனது ஆசானுக்கு தன்னால் இயன்ற மரியாதையை அவர் செலுத்துகிறார் என்பதே நிதர்சனம்.

Related Post

ஏங்க முருகன் உங்க கனவுல வந்து மாநாடு நடத்த சொன்னாரா..? – சீமான் விளாசல்..!!

Posted by - August 13, 2024 0
உண்மையிலேயே முருகனுக்கு மாநாடு நடத்துகிறீர்களா அல்லது சீமானுக்கு பயந்து நடத்துகிறீர்களா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை…

கரூர் துயரம்: உயிரிழந்தோர் குடும்பங்களுடன் வீடியோ காலில் பேசி ஆறுதல் கூறிவரும் விஜய்!

Posted by - October 7, 2025 0
கரூர்: கரூரில் கடந்த செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தத்…

அதிமுக பொதுச் செயலாளராகிறார் ஈபிஎஸ் – பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும்.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Posted by - March 28, 2023 0
சென்னையில் கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்னையில் கடந்த ஆண்டு ஜூலை 11-ம்…

வங்கிகளுக்கு இன்று முதல் 5 நாட்களுக்கு விடுமுறை

Posted by - January 13, 2024 0
சென்னை: தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி பொங்கல் பண்டிகையானது வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று முதல் 5 நாட்களுக்கு…

அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு: தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது

Posted by - January 13, 2026 0
அமைச்​சர் நடத்திய பேச்​சு​வார்த்​தை​யில் உடன்​பாடு ஏற்பட்டதால் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் முடிவுக்கு வந்​தது. சென்னை மாநக​ராட்​சி​யில், ராயபுரம், திரு.​வி.க.நகர் மண்​டலங்​களில் தூய்​மைப் பணியை தனி​யார்​மய​மாக்​கியதற்கு எதிர்ப்பு தெரி​வித்​து,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *