முற்றிலும் மழைவிட எத்தனை மணி நேரம் ஆகும்? எப்போது கரையை கடக்கும்?

221 0

கடந்த 3 மணி நேரத்தில் மிக்ஜாம் புயல் வலுவடைந்துள்ளதாக கூறியுள்ள தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மிக்ஜாம் புயல், நாளை அதிகாலையில் ஆந்திரா மாநிலம் நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினம் இடையே கரையைக் கடக்க உள்ள நிலையில், சென்னையில் பலத்த மழை பெய்து வருகிறது.  சென்னைக்கு கிழக்கே மிக்ஜாம் புயல் தற்போது மையம் கொண்டுள்ளது. இந்த புயல் கரையை நெருங்குவதால், சென்னையில் விடிய விடிய சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

“குறுகிய நேரத்தில் அதிக மழைப்பொழிவு”

கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் அதிகபட்சமாக வளசரவாக்கம் மற்றும் மீனம்பாக்கத்தில் தலா 20 சென்டிமீட்டர் மழைப்பதிவாகியுள்ளது. சோழிங்கநல்லூர், பெருங்குடி, கோடம்பாக்கத்தில் தலா 18 சென்டி மீட்டர் மழைப்பொழிந்துள்ளது. மதுரவாயல், கத்திவாக்கம், அம்பத்தூர், மீனம்பாக்கம் பகுதிகளிலும் 12 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. சொல்லப்போனால், சென்னை, புறநகர் பகுதிகளில் குறுகிய நேரத்தில் அதிகமாக மழைப்பொழிந்துள்ளது.

இதே போன்று, மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம் பகுதிகளில் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியது. சென்னை எண்ணூரில் மணிக்கு 70 கி.மீ., வேகத்தில் சூறைக்காற்று வீசியது.

சென்னையில் முற்றிலும் மழைவிட எத்தனை மணி நேரம் ஆகும்?

இந்த நிலையில், சென்னையில் முற்றிலும் மழை விடுவதற்கு 9 மணி நேரம் ஆகும் என தனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 6 மணி நேரத்திற்கு தொடர்ந்து பலத்த மழை பெய்யும் என்றும் மீண்டும் இரவைப் போல கனமழை பெய்யும் எனவும் கூறியுள்ளார்.  சென்னைக்கு கிழக்கே இருக்கும் புயல், வடகிழக்கு நோக்கி செல்ல 6மணி நேரம் எடுத்துக் கொள்வதால், அதுவரை மழைநீடிக்கும் எனவும் தனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். புயலானது, 150 கிலோமிட்டர் தொலைவு சென்ற பிறகுதான் படிப்படியாக மழை குறையும் எனக் கூறியுள்ள அவர்,  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மதியம் வரை கனமழை நீடிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

வலுவடைந்துள்ளது மிக்ஜாம் புயல்

கடந்த 3 மணி நேரத்தில் மிக்ஜாம் புயல் வலுவடைந்துள்ளதாக கூறியுள்ள தனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் ,   பழவேற்காட்டில் இருந்து 140 கி.மீ. தொலைவில் மிக்ஜாம் புயல் உள்ளதாகவும், 10 முதல் 14 கி.மீ., வேகத்தில் நகரக்கூடும் என்றும்   தெரிவித்துள்ளார்.

Related Post

மிரட்டும் டெங்கு காய்ச்சலால் ஒரே நாளில் 59 பேர் அனுமதி- தடுப்பு நடவடிக்கை தீவிரம்

Posted by - November 27, 2023 0
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் காய்ச்சல் காரணமாக நேற்று ஒரே நாளில் 59 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெங்கு காய்ச்சல் தமிழகம் முழுவதும் வேகமாக பரவி…

சிவாஜி ராவ் டூ சூப்பர் ஸ்டார்.. தமிழகம் கொண்டாடும் ரஜினிகாந்த்.. பிறந்தநாள் ஸ்பெஷல்!

Posted by - December 12, 2022 0
Rajinikanth Birth Day: ரஜினிகாந்த் கேட்டை திறந்து வீட்டிற்குள் நுழையும் அந்த முதல் காட்சி தமிழ் திரையுலக ரசிகர்கள் மனதின் திறவுகோலாகவும் அமைந்தது. 73 வது வயதில்…

தமிழக அரசே! தங்கள் உரிமை கேட்டுப் போராடும் சாம்சங் தொழிலாளர்களை போராட விடு – வைரலாகும் இயக்குநர் பா.ரஞ்சித்தின் ட்வீட்..!!

Posted by - October 10, 2024 0
தங்கள் உரிமை கேட்டுப் போராடும் சாம்சங் தொழிலாளர்களை போராட விடுங்கள் என பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட்டுள்ள செய்தியில்…

அரசு கல்லூரிகளில் 426 விரிவுரையாளர் பணி

Posted by - February 6, 2026 0
தமிழ்நாடு அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 426 தற்காலிக கவுரவ விரிவுரையாளர் பணியிடங்கள் 29 பாடப் பிரிவுகளுக்கு நிரப்பப்பட உள்ளன. இதற்கு பிப்ரவரி 9ஆம் தேதி வரை…

சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. ஆளுங்கட்சிக்கு அடி மேல் அடி! என்ன செய்யப்போகிறார் ஸ்டாலின்?

Posted by - June 30, 2025 0
தமிழ்நாட்டில் அடுத்தடுத்து நடக்கும் சட்டம் ஒழுங்கு சம்பவங்களும், காவல்துறையில் நடக்கும் அவலங்களும் ஆளுங்கட்சியான திமுக-விற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *